திருப்புகழ் 489 இணங்கித் தட்பொடு  (சிதம்பரம்)
Thiruppugazh 489 iNangiththatpodu  (chidhambaram)
Thiruppugazh - 489 iNangiththatpodu - chidhambaramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனந்தத் தத்தன தானன தானன
   தனந்தத் தத்தன தானன தானன
      தனந்தத் தத்தன தானன தானன ...... தனதான

......... பாடல் .........

இணங்கித் தட்பொடு பால்மொழி பேசிகள்
   மணந்திட் டுச்சுக மாய்விளை யாடிகள்
      இளஞ்சொற் செப்பிகள் சாதனை வீணிகள் ...... கடிதாகும்

இடும்பைப் பற்றிய தாமென மேயினர்
   பெருஞ்சொற் பித்தளை தானும்வை யாதவர்
      இரும்பிற் பற்றிய கூர்விழி மாதர்கள் ...... எவரேனும்

பணஞ்சுற் றிக்கொளு பாயவு தாரிகள்
   மணங்கட் டுக்குழல் வாசனை வீசிகள்
      பலஞ்செப் பித்தர மீளழை யாதவர் ...... அவரோடே

பதந்துய்த் துக்கொடு தீமைய மாநர
   கடைந்திட் டுச்சவ மாகிவி டாதுன
      பதம்பற் றிப்புக ழானது கூறிட ...... அருள்வாயே

வணங்கச் சித்தமி லாதஇ ராவணன்
   சிரம்பத் துக்கெட வாளிக டாவியெ
      மலங்கப் பொக்கரை யீடழி மாதவன் ...... மருகோனே

மதம்பட் டுப்பொரு சூரபன் மாதியர்
   குலங்கொட் டத்திகல் கூறிய மோடரை
      வளைந்திட் டுக்கள மீதினி லேகொல ...... விடும்வேலா

பிணம்பற் றிக்கழு கோடுபல் கூளிகள்
   பிடுங்கிக் கொத்திட வேயம ராடியெ
      பிளந்திட் டுப்பல மாமயி லேறிய ...... முருகோனே

பிரிந்திட் டுப்பரி வாகிய ஞானிகள்
   சிலம்பத் தக்கழல் சேரவெ நாடிடு
      பெரும்பற் றப்புலி யூர்தனில் மேவிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

இணங்கித் தட்பொடு பால்மொழி பேசிகள் ... மனம் ஒருமித்து
குளிர்ந்த பால் போன்ற இனிய சொற்களைப் பேசுபவர்கள்,

மணந்திட்டுச் சுகமாய் விளையாடிகள் ... கூடிய பின் சுகமாய்
விளையாடுபவர்கள்,

இளம் சொல் செப்பிகள் சாதனை வீணிகள் ... தாழ்வான
மொழிகளைப் பேசுபவர்கள், தாம் சொன்னதையே சாதிக்கும் பயனிலிகள்,

கடிது ஆகும் இடும்பைப் பற்றிய தாம் என மேயினர் ...
கடுமையான துன்பம் பிடித்தவர் போல இருப்பவர்கள்,

பெரும் சொல் பித்தளை தானும் வையாதவர் ... (வந்தவர்களிடம்)
பெரிய வார்த்தைகளைப் பேசி, பித்தளை சாமான்களைக் கூட
விட்டுவைக்காமல் கவர்பவர்கள்,

இரும்பில் பற்றிய கூர் விழி மாதர்கள் எவரேனும் பணம்
சுற்றிக் கொள் உபாய உதாரிகள்
... இரும்பாலான வேல் போன்ற
கூரிய கண்களை உடையவர்கள், யாராயிருந்த போதிலும் அவரிடம்
பணத்தைக் கவர்ந்து கொள்ளும் தந்திரம் வல்ல சிறப்பு உடையவர்கள்,

மணம் கட்டுக் குழல் வாசனை வீசிகள் ... நறுமணம் கூடியதாய்ப்
பின்னிக் கட்டியுள்ள கூந்தலினின்று வாசனை வீசச் செய்பவர்கள்,

பலம் செப்பித் தர மீள அழையாதவர் ... பொன்னைக்
கொடுக்கிறேன் என்று சொன்னால் அது தருமளவும் (தமது வீட்டுக்கு)
மறுபடியும் அழையாதவர்கள்,

அவரோடே பதம் துய்த்துக் கொடு தீமைய மா நரகு
அடைந்திட்டுச் சவமாகி விடாது
... இத்தகைய பொது மகளிரொடு
இன்பத்தை அனுபவித்துக் கொண்டு, கொடுமை வாய்ந்த பெரிய
நரகத்தை அடைந்து பிணமாகி விடாமல்,

உன(து) பதம் பற்றிப் புகழானது கூறிட அருள்வாயே ...
உனது திருவடியைப் பற்றி உன் திருப்புகழைக் கூற எனக்கு
அருள்வாயாக.

வணங்கச் சித்தம் இலாத இராவணன் சிரம் பத்துக் கெட
வாளி கடாவியெ
... (ராமனை) வணங்குவதற்கு மனம் இல்லாத
ராவணனுடைய பத்துத் தலைகளும் அற்று விழும்படி அம்பைச் செலுத்தி,

மலங்கப் பொக்கரை ஈடு அழி மாதவன் மருகோனே ... மனம்
கலங்க, பொய்யை உடைய அரக்கரின் வலிமையை அழித்த திருமாலின்
மருகனே,

மதம் பட்டுப் பொரு சூரபன்ம(ன்) ஆதியோர் குலம்
கொட்டத்து இகல் கூறிய மோடரை
... ஆணவம் கொண்டு
சண்டை செய்த சூரபன்மன் ஆகியோரை, குலப் பெருமை பேசி
இறுமாப்புடன் பகைமைப் போர் சொல்லி வந்த மூடரை,

வளைந்திட்டுக் களம் மீதினிலே கொ(ல்)ல விடும் வேலா ...
சூழ்ந்து வளைத்து போர்க்களத்தில் இறந்து போகும்படி வேலைச்
செலுத்தியவனே,

பிணம் பற்றிக் கழுகோடு பல் கூளிகள் பிடுங்கிக்
கொத்திடவே அமர் ஆடியெ
... பிணத்தைப் பற்றிக் கொண்டு,
கழுகுகளுடன் பல பேய்கள் பிடுங்கிக் கொத்தி உண்ணும்படி போர்
செய்து,

பிளந்திட்டுப் பல மா மயில் ஏறிய முருகோனே ...
பகைவர்களைப் பிளந்து அழித்து, வன்மை கொண்ட சிறந்த மயில்
வாகனத்தில் ஏறிய முருகோனே,

பிரிந்திட்டுப் பரிவாகிய ஞானிகள் சிலம்பு அத்தக் கழல்
சேரவெ நாடிடு
... உன்னைப் பிரிந்திருந்து, உள்ளத்தில் அன்பு
நிறைந்திருந்த ஞானிகள், சிலம்பையும் பொன்னால் செய்யப்பட்ட
வீரக் கழலையும் அணிந்த திருவடிகளைச் சேர விரும்பி வருகின்ற,

பெரும் பற்றப் புலியூர் தனில் மேவிய பெருமாளே. ... பெரும்
பற்றப் புலியூர் என்ற சிதம்பரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.471  pg 2.472  pg 2.473  pg 2.474 
 WIKI_urai Song number: 630 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 489 - iNangith thatpodu (chidhambaram)

iNangith thatpodu pAlmozhi pEsikaL
   maNanthit tucchuka mAyviLai yAdikaL
      iLanchoR cheppikaL sAthanai veeNikaL ...... kadithAkum

idumpaip patRiya thAmena mEyinar
   peruchoR piththaLai thAnumvai yAthavar
      irumpiR patRiya kUrvizhi mAtharkaL ...... evarEnum

paNamchut RikkoLu pAyavu thArikaL
   maNamkat tukkuzhal vAsanai veesikaL
      palanchep piththara meeLazhai yAthavar ...... avarOdE

pathanthuyth thukkodu theemaiya mAnara
   kadainthit tucchava mAkivi dAthuna
      pathampat Rippuka zhAnathu kURida ...... aruLvAyE

vaNangac chiththami lAthai rAvaNan
   sirampath thukkeda vALika dAviye
      malangap pokkarai yeedazhi mAdhavan ...... marukOnE

mathampat tupporu cUrapan mAthiyar
   kulamkot taththikal kURiya mOdarai
      vaLainthit tukkaLa meethini lEkola ...... vidumvElA

piNampat Rikkazhu kOdupal kULikaL
   pidungik koththida vEyama rAdiye
      piLanthit tuppala mAmayi lERiya ...... murukOnE

pirinthit tuppari vAkiya njAnikaL
   silampath thakkazhal sErave nAdidu
      perumpat Rappuli yUrthanil mEviya ...... perumALE.

......... Meaning .........

iNangith thatpodu pAlmozhi pEsikaL: They are all of one mind in speaking sweet words like cool milk;

maNanthittuc chukamAy viLaiyAdikaL: they play around pleasantly after union;

iLam choR cheppikaL sAthanai veeNikaL: they resort to coarse language; they are useless ones, adamantly sticking to their words;

kadithu Akum idumpaip patRiya thAm ena mEyinar: they have an appearance of being afflicted with severe misery;

perum sol piththaLai thAnum vaiyAthavar: talking tall (with their suitors), they do not miss out on grabbing even brass items from them;

irumpil patRiya kUr vizhi mAtharkaL evarEnum paNam sutRik koL upAya uthArikaL: their eyes look like sharp spears made out of steel; whomever it is they cleverly extort their money;

maNam kattuk kuzhal vAsanai veesikaL: they deliberately let down their fragrant and braided hair to spread out the aroma;

palam seppith thara meeLa azhaiyAthavar: if someone offers gold, they will never let him into (their house) again until he brings it to them;

avarOdE patham thuyththuk kodu theemaiya mA naraku adainthittuc chavamAki vidAthu: lest I indulge in carnal pleasure with such whores, ending up as a corpse in the worst hell,

una(thu) patham patRip pukazhAnathu kURida aruLvAyE: kindly bless me to hold firmly to Your hallowed feet and to sing Your glory!

vaNangac chiththam ilAtha irAvaNan siram paththuk keda vALi kadAviye: The ten heads of RAvaNan who had no inclination to prostrate (at the feet of RAmA) were severed with a single arrow wielded by Him;

malangap pokkarai eedu azhi mAdhavan marukOnE: He blew up the minds of the untruthful demons and destroyed their valour; You are the nephew of that Lord VishNu!

matham pattup poru cUrapanma(n) AthiyOr kulam kottaththu ikal kURiya mOdarai vaLainthittuk kaLam meethinilE ko(l)la vidum vElA: Surrounding the demon SUran and his entire foolish clan who fought with arrogance bragging about the greatness of their lineage, You wielded the spear that killed them all in the battlefield, Oh Lord!

piNam patRik kazhukOdu pal kULikaL pidungik koththidavE amar Adiye: You fought in such a way that many eagles and devils grabbed the corpses and began to pluck and devour;

piLanthittup pala mA mayil ERiya murukOnE: after splitting up the enemies and destroying them, You mounted the grand vehicle, namely, Your mighty peacock, Oh MurugA!

pirinthittup parivAkiya njAnikaL silampu aththak kazhal sErave nAdidu: Being separated from You, the wise men with their heart filled with love, are yearning to worship Your hallowed feet, adorned with anklets and golden kazhal (another kind of anklet) signifying Your valour, in

perum patRap puliyUr thanil mEviya perumALE.: Perum patRap puliyUr (Chidhambaram) where You are seated, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 489 iNangith thatpodu - chidhambaram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]