திருப்புகழ் 487 வாத பித்தமொடு  (சிதம்பரம்)
Thiruppugazh 487 vAdhapiththamodu  (chidhambaram)
Thiruppugazh - 487 vAdhapiththamodu - chidhambaramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தான தத்ததன தான தத்ததன
     தான தத்ததன தான தத்ததன
          தான தத்ததன தான தத்ததன ...... தந்ததான

......... பாடல் .........

வாத பித்தமொடு சூலை விப்புருதி
     யேறு கற்படுவ னீளை பொக்கிருமல்
          மாலை புற்றெழுத லூசல் பற்சனியொ ...... டந்திமாலை

மாச டைக்குருடு காத டைப்பு செவி
     டூமை கெட்டவலி மூல முற்றுதரு
          மாலை யுற்றதொணு றாறு தத்துவர்க ...... ளுண்டகாயம்

வேத வித்துபரி கோல முற்றுவிளை
     யாடு வித்தகட லோட மொய்த்தபல
          வேட மிட்டுபொரு ளாசை பற்றியுழல் ...... சிங்கியாலே

வீடு கட்டிமய லாசை பட்டுவிழ
     வோசை கெட்டுமடி யாமல் முத்திபெற
          வீட ளித்துமயி லாடு சுத்தவெளி ...... சிந்தியாதோ

ஓத அத்திமுகி லோடு சர்ப்பமுடி
     நீறு பட்டலற சூர வெற்பவுண
          ரோடு பட்டுவிழ வேலை விட்டபுக ...... ழங்கிவேலா

ஓந மச்சிவய சாமி சுத்தஅடி
     யார்க ளுக்குமுப காரி பச்சையுமை
          ஓர்பு றத்தருள்சி காம ணிக்கடவுள் ...... தந்தசேயே

ஆதி கற்பகவி நாய கர்க்குபிற
     கான பொற்சரவ ணாப ரப்பிரம
          னாதி யுற்றபொருள் ஓது வித்தமைய ...... றிந்தகோவே

ஆசை பெற்றகுற மாதை நித்தவன
     மேவி சுத்தமண மாடி நற்புலியு
          ராட கப்படிக கோபு ரத்தின்மகிழ் ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

வாதம் பித்தமோடு சூலை விப்புருதி ... வாதம் பித்தம் மிகுதியால்
ஏற்படும் நோய்கள், வயிற்று உளைவு, சிலந்தி,

ஏறு கல் படுவன் ஈளை பொக்கு இருமல் ... கல் போன்ற ஒரு
வகைப் புண் கட்டி, கோழை நோய், குத்திருமல்,

மாலை புற்று எழுதல் ஊசல் பற்ச(ன்)னி ஓடு அந்தி மாலை ...
கண்ட மாலை, புற்றுநோய், (உடல், மனம்) தடுமாற்றம், பல விதமான
ஜன்னி நோய் இவற்றுடன் மாலைக்கண்,

மாசு அடை குருடு காது அடைப்பு செவிடு ... அழுக்கு
அடைவதால் வரும் குருடு, காது அடைப்பினால் வரும் செவிட்டுத்
தன்மை,

ஊமை கெட்ட வலி மூலம் முற்று தரு ... ஊமை, கெட்ட வலிப்புகள்,
மூல நோய் (ஆகிய நோய்கள்) காய்த்து முதிர்ந்த மரம்போன்றது இந்த
உடல்,

மாலை உற்ற தொ(ண்)ணூறு ஆறு தத்துவர்கள் உண்ட
காயம்
... முறையாகப் பொருந்திய தொண்ணூற்றாறு தத்துவங்கள்*
இடம்பெறுகின்ற உடல்,

வேத வித்து பரிகோலம் உற்று விளையாடுவித்த ... வேதத்தின்
வித்தாகிய இறைவன் பல திருக்கோலத்தைப் பூண்டு விளையாட்டாக
ஆட்டுவிக்கின்ற

கடல் ஓடம் ... கடலிடைத் தோணிபோல அலைப்புறும் உடல்,

மொய்த்த பல வேடம் இட்டு ... சூழ்கின்ற பலவிதமான
வேடங்களைப் பூண்டு

பொருள் ஆசை பற்றி உழல் சிங்கியாலே ... பொருளாசை
கொண்டு திரிகின்ற, விஷம் போன்ற அழி செயலாலே,

வீடு கட்டி மயல் ஆசை பட்டு விழ ... வீடு கட்டி, அதனுள்
காம மயக்க ஆசையில் பட்டு வீழ்ந்து,

ஓசை கெட்டு மடியாமல் முத்தி பெற வீடு அளித்து ...
(உள்ளோசையாகிய) நாதம் அழிந்து, நான் இறந்து படாமல் முக்தியை
அடையுமாறு வீட்டை அளித்து,

மயில் ஆடு சுத்த வெளி சிந்தியாதோ ... நீ மயில் மீது நடனம்
செய்கின்ற வெட்ட வெளியான பரமானந்த நிலையைப் பெற என்
உள்ளம் தியானிக்காதோ?

ஓத அத்தி முகிலோடு சர்ப்ப முடி ... அலையோசை மிகுந்த
கடல், மேகங்கள், (ஆதிசேஷனாகிய) பாம்பின் முடிகள் (இவை எல்லாம்)

நீறு பட்டு அலற சூர(ன்) வெற்பு அவுணரோடு ... பொடிபட்டுக்
கலங்க, சூரனும், அவனுடைய எழுகிரியும், அங்கிருந்த அசுரர்களோடு

பட்டு விழ வேலை விட்ட புகழ் அங்கி வேலா ... அழிந்து
விழும்படி கடலில் செலுத்திய புகழ் மிக்க நெருப்புப்போன்ற வேலை
உடையவனே,

ஓம் நமச்சிவய சாமி சுத்த அடியார்களுக்கும் உபகாரி ... ஓம்
நமசிவய என்னும் பிரணவத்தோடு கூடிய ஐந்தெழுத்துக்கு மூலப்
பொருளாகிய கடவுள், தூய அடியார்களுக்கு உதவி செய்பவர்,

பச்சை உமை ஓர் புறத்து அருள் சிகா மணி கடவுள் தந்த
சேயே
... பச்சை நிறங் கொண்ட உமையை தமது ஒரு பாகத்தில் வைத்து
அருள் சுரக்கும் சிகாமணித் தெய்வமாகிய சிவபெருமான் பெற்ற
குழந்தையே,

ஆதி கற்பக விநாயகற்கு பிறகான பொன் சரவணா ... முதலில்
தோன்றிய கற்பக விநாயகருக்குப் பின்னர் தோன்றிய அழகிய சரவண
மூர்த்தியே,

பர பிரமன் ஆதி உற்ற பொருள் ஓதுவித்தமை அறிந்த
கோவே
... ஆதியாயுள்ள மூலமந்திரப் பொருளை ஓதுவிக்கும் தன்மை
எவ்வண்ணம் என்று தெரிந்திருந்த தலைவனே,

ஆசை பெற்ற குற மாதை நித்த(ம்) வனம் மேவி ... உன்
காதலைப் பெற்ற குற மாதாகிய வள்ளியை நாள்தோறும்
தினைப்புனத்துக்குச் சென்று

சுத்த மணம் ஆடி நல் புலியூர் ... பரிசுத்தமான வகையில் திருமணம்
புரிந்து நல்ல புலியூர் (சிதம்பரம்) என்னும் தலத்தில்

ஆடகப் படிக கோபுரத்தின் மகிழ் தம்பிரானே. ... பொன்னும்
பளிங்கும் போல அழகு வாய்ந்த கோபுரத்தில் மகிழ்ந்து மேவும் தம்பிரானே.


* 96 தத்துவங்கள் பின்வருமாறு:

36 பரதத்துவங்கள் (அகநிலை):
ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.

ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை):
மண், தீ, நீர், காற்று, வெளி.

ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை):
வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.465  pg 2.466  pg 2.467  pg 2.468 
 WIKI_urai Song number: 628 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 487 - vAtha piththamodu (chidhambaram)

vAtha piththamodu cUlai vippuruthi
     yERu kaRpaduva neeLai pokkirumal
          mAlai putRezhutha lUsal paRcaniyo ...... danthimAlai

mAsa daikkurudu kAtha daippu sevi
     dUmai kettavali mUla mutRutharu
          mAlai yutRathoNu RARu thaththuvarka ...... LuNdakAyam

vEtha viththupari kOla mutRuviLai
     yAdu viththakada lOda moyththapala
          vEda mittuporu LAsai patRiyuzhal ...... singiyAlE

veedu kattimaya lAsai pattuvizha
     vOsai kettumadi yAmal muththipeRa
          veeda Liththumayi lAdu suththaveLi ...... sinthiyAthO

Otha aththimuki lOdu sarppamudi
     neeRu pattalaRa cUra veRpavuNa
          rOdu pattuvizha vElai vittapuka ...... zhangivElA

Ona macsivaya sAmi suththAdi
     yArka Lukkumupa kAri paccaiyumai
          Orpu RaththaruLsi kAma NikkadavuL ...... thanthasEyE

Athi kaRpakavi nAya karkkupiRa
     kAna poRcarava NApa rappirama
          nAthi yutRaporuL Othu viththamaiya ...... RinthakOvE

Asai petRakuRa mAthai niththavana
     mEvi suththamaNa mAdi naRpuliyu
          rAda kappadika kOpu raththinmakizh ...... thambirAnE.

......... Meaning .........

vAtha piththamodu cUlai vippuruthi: Diseases caused by excessive rheumatism and biliousness, eczema,

yERu kaRpaduva neeLai pokkirumal: stone-like abcess of carboncle, bronchitis, whooping cough,

mAlai putRezhutha lUsal paRcaniyo danthimAlai: ringworm around the neck, cancer, dizziness and vertigo, acute fever, night-blindness,

mAsa daikkurudu kAtha daippu sevidUmai: blindness caused by gingivitis, deafness due to blockage of ear, speech-impairedness,

kettavali mUla mutRutharu: spasmic fits and seizures, and bleeding piles - these are some of the diseases grown and ripened in the tree of this body!

mAlai yutRathoNu RARu thaththuvarka LuNdakAyam: This body is the seat where the ninety-six tenets* seek orderly occupation;

vEtha viththupari kOla mutRuviLai yAdu viththakada lOdam: This body is the arena many games of Lord Almighty, the essence of all scriptures, who takes many forms and tosses it like a little boat on the high seas;

moyththapala vEda mittuporu LAsai patRiyuzhal singiyAlE: this body also puts on various costumes and roams about greedily to make money, and in that process, poisons itself slowly;

veedu kattimaya lAsai pattuvizha: it builds a house and, therin, crumbles due to passionate lust.

vOsai kettumadi yAmal muththipeRa veeda Liththu: I do not want to miss the inner musical tone and die in vain; for that, You will have to grant me liberation and a place in the heaven.

mayi lAdu suththaveLi sinthiyAthO: May I not meditate on You and have the blissful vision of Your cosmic dance, mounted on the Peacock?

Otha aththimuki lOdu sarppamudi neeRu pattalaRa: The seas with roaring waves, the clouds and thousands of hoods of the serpent-king (AdhisEshan) were all shattered to pieces;

cUra veRpavuNa rOdu pattuvizha: the demon SUran, his protective (seven) hills and the demons living thereon were all destroyed;

vElai vittapuka zhangivElA: when You wielded the fiery and famous Spear of Yours into the seas, Oh Lord!

Ona macsivaya sAmi suththAdi yArka Lukkumupa kAri: He is the primordial substance of the five lettered ManthrA coupled with "OM", namely, "OM NAMASIVAYA"; He is benevolent to all His pure devotees;

paccaiyumai Orpu RaththaruLsi kAma NikkadavuL thanthasEyE: He is concorporate with UmAdEvi, the emerald-green Goddess, as a part of His side; He is the gracious jewel on the crown, Lord SivA; and You are His Son!

Athi kaRpakavi nAya karkkupiRakAna poRcaravaNA: You emerged after the Primeval VinAyagA, who is like the wish-yielding KaRpaga tree, Oh Handsome Saravanabava!

pa rappirama nAthi yutRaporuL Othu viththamaiya RinthakOvE: Oh Lord, You knew the meaning and the method of interpretation of the Primordial PraNava ManthrA!

Asai petRakuRa mAthai niththavana mEvi: You went to the millet-field everyday to meet Your beloved VaLLi, the damsel of the KuRavAs,

suththamaNa mAdi: and eventually married her in the pure traditional manner!

naRpuliyur Ada kappadika kOpu raththinmakizh thambirAnE.: In the great town of PuliyUr (Chidhambaram), You are seated with relish at the beautiful tower, shining like gold and marble, Oh Great One!


* The 96 thathvAs (tenets) are as follows:

36 ParathathvAs (internal, Superior Tenets): 'AathmA' (soul) thathvAs 24, 'vidhyA' (knowledge) thathvAs 7, 'siva' thathvAs 5.

5 Elements (external, with five aspects each making 25): Earth, Fire, Water, Air, Cosmos.

35 Other thathvAs (external): 'vAyus' (gases) 10, nAdis (kundalinis) 10, karmAs 5, ahangkAram (ego) 3, gunAs (character) 3, vAkku (speech).

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 487 vAdha piththamodu - chidhambaram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]