திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 486 நீல மாமுகில் (சிதம்பரம்) Thiruppugazh 486 neelamAmugil (chidhambaram) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தான தானன தான தானன தான தானன தான தானன தான தானன தான தானன ...... தனதான ......... பாடல் ......... நீல மாமுகில் போலும் வார்குழ லார்கள் மாலைகு லாவ வேல்கணை நீள வாள்விழி பார்வை காதிரு ...... குழையாட நீடு மார்பணி யாட வோடிய கோடு போலிணை யாட நூலிடை நேச பாளித சோலை மாமயி ...... லெனவேகிக் காலி னூபுர வோசை கோவென ஆடி மால்கொடு நாணி யேவியர் காய மோடணு பாகு பால்மொழி ...... விலைமாதர் காத லாயவ ரோடு பாழ்வினை மூழ்கி யேழ்நர காழு மூடனை காரிர் பாருமை யாசி வாபத ...... மருள்வாயே கோல மாமயி லேறி வார்குழை யாட வேல்கொடு வீர வார் கழல் கோடி கோடிடி யோசை போல்மிக ...... மெருதூளாய்க் கோடு கோவென ஆழி பாடுகள் தீவு தாடசு ரார்கு ழாமொடு கூள மாகவி ணோர்கள் வாழ்வுற ...... விடும்வேலா நாலு வேதமு டாடு வேதனை யீண கேசவ னார்ச கோதரி நாதர் பாகம்வி டாள்சி காமணி ...... உமைபாலா ஞான பூமிய தான பேர்புலி யூரில் வாழ்தெய்வ யானை மானொடு நாலு கோபுர வாசல் மேவிய ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... நீல மா முகில் போலும் வார் குழலார்கள் ... கருமை மிக்க மேகம் போன்ற நீண்ட கூந்தலை உடையவர்கள், மாலை குலாவ வேல் கணை நீள வாள் விழி பார்வை காது(ம்) இரு குழை ஆட ... மாலை விளங்க, வேலையும் அம்பையும் போன்ற நீண்ட ஒளி பொருந்திய கண் பார்வைகள் சென்று வெட்டுவது போல் பாயும் இரண்டு (காதில்) குண்டலங்கள் அசைய, நீடு மார்பு அணி ஆட ஓடிய கோடு போல் இணை ஆட நூல் இடை நேச பாளித(ம்) ... அகன்ற மார்பில் அணிகலன்கள் ஆட, பரந்துள்ள மலையைப் போல மார்பகங்கள் அசைய, நூலைப் போல் நுண்ணிய இடையில் தமக்கு விருப்பமான பட்டுப் புடைவையுடன், சோலை மா மயில் என ஏகிக் காலில் நூபுர ஓசை கோ என ஆடி ... சோலையில் உலவி வரும் அழகிய மயில் போலச் சென்று, காலில் உள்ள சிலம்பின் ஓசை கோ என்று ஒலி செய்ய, நடனம் ஆடி, மால் கொடு நாணியே வியர் காயமோடு பாகு அ(ண்)ணு பால் மொழி விலைமாதர் ... மோகத்துடன் வெட்கம் அடைந்து, வேர்வை கொண்ட உடலுடன், சர்க்கரையில் உருகிப் பொருந்திய பால் போன்ற சொற்களை உடைய வேசிகளுடன் காதலாய் அவரோடு பாழ் வினை மூழ்கி ஏழ் நரகு ஆழு(ம்) மூடனை ... ஆசை பூண்டவனாய் பாழ்படுத்தும் வினையிலே முழுகி, ஏழு நரகங்களிலும் ஆழ்ந்து விடும் முழு முட்டாளாக இருப்பினும், என்னை காரிர் பாரும் ஐயா சிவா பதம் அருள்வாயே ... கண் பார்த்து அருளும் ஐயா, சிவபதம் தந்து அருள்வாயாக. கோல மா மயில் ஏறி வார் குழை ஆட ... அழகிய சிறந்த மயிலின் மேல் ஏறி, நீண்ட குழைகள் (காதில்) ஆட, வேல் கொடு வீர வார் கழல் கோடி கோடி இடி ஓசை போல் மிக மெரு தூளாய் கோடு கோ என ... கையில் வேல் கொண்டு, வீரம் பெரிதுள்ள கழல்கள் கோடிக் கணக்கான இடிகள் ஒலி செய்வது போல் மிக்கு ஒலிக்க, மேரு மலை பொடியாகி (அதனுடைய) சிகரங்கள் கோ என்று விழ, ஆழி பாடுகள் தீவு தாடு அசுரார் குழாம் ஒடு கூளமாக வி(ண்)ணோர்கள் வாழ்வு உற விடும் வேலா ... கடல் இடங்கள், நாடுகள், வலிமை வாய்ந்த அசுரர் கூட்டங்களோடு குப்பையாகி அழிந்தொழிய, தேவர்கள் வாழ்வு பெற்று விளங்க, வேலைச் செலுத்திய வீரனே, நாலு வேதம் உடாடு வேதனை ஈண கேசவனார் சகோதரி ... நான்கு வேதங்களையும் பயின்றுள்ள பிரமனைப் பெற்ற திருமாலின் சகோதரி, நாதர் பாகம் விடாள் சிகா மணி உமை பாலா ... சிவபெருமானுடைய இடது பாகத்தை விடாதவள், சிகா ரத்தினம் போன்ற உமா தேவியின் குமாரனே, ஞான பூமியதான பேர் புலியூரில் வாழ் தெய்வ யானை மானொடு ... ஞானபூமி என்று பேர் பெற்ற சிதம்பரத்தில் வாழ்கின்ற தேவயானையோடும், வள்ளி நாயகியோடும், நாலு கோபுர வாசல் மேவிய பெருமாளே. ... நான்கு கோபுர வாயில்களிலும் வீற்றிருக்கும் பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.463 pg 2.464 pg 2.465 pg 2.466 WIKI_urai Song number: 627 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 486 - neela mAmugil (chidhambaram) neela mAmukil pOlum vArkuzha lArkaL mAlaiku lAva vElkaNai neeLa vALvizhi pArvai kAthiru ...... kuzhaiyAda needu mArpaNi yAda vOdiya kOdu pOliNai yAda nUlidai nEsa pALitha sOlai mAmayi ...... lenavEkik kAli nUpura vOsai kOvena Adi mAlkodu nANi yEviyar kAya mOdaNu pAku pAlmozhi ...... vilaimAthar kAtha lAyava rOdu pAzhvinai mUzhki yEzhnara kAzhu mUdanai kArir pArumai yAsi vApatha ...... maruLvAyE kOla mAmayi lERi vArkuzhai yAda vElkodu veera vAr kazhal kOdi kOdidi yOsai pOlmika ...... meruthULAyk kOdu kOvena Azhi pAdukaL theevu thAdasu rArku zhAmodu kULa mAkavi NOrkaL vAzhvuRa ...... vidumvElA nAlu vEthamu dAdu vEthanai yeeNa kEsava nArsa kOthari nAthar pAkamvi dALsi kAmaNi ...... umaipAlA njAna pUmiya thAna pErpuli yUril vAzhtheyva yAnai mAnodu nAlu kOpura vAsal mEviya ...... perumALE. ......... Meaning ......... neela mA mukil pOlum vAr kuzhalArkaL: Their long hair is like the dark cloud; mAlai kulAva vEl kaNai neeLa vAL vizhi pArvai kAthu(m) iru kuzhai Ada: they are adorned with garlands; their long and bright eyes are like the spear and the arrow; as their striking looks penetrate the ears, their hanging ear-studs swing; needu mArpu aNi Ada Odiya kOdu pOl iNai Ada nUl idai nEsa pALitha(m): the jewels on their broad chest sway; their mountain-like breasts move; around their slender thread-like waists, they don silk sarees; sOlai mA mayil ena Ekik kAlil nUpura Osai kO ena Adi: they stroll like pretty peacocks in the garden; the anklets on their ankles jingle loudly as they dance; mAl kodu nANiyE viyar kAyamOdu pAku a(N)Nu pAl mozhi vilai mAthar: they display shyness mingled with passion; with perspiring bodies, these prostitutes speak words sweet like milk soaked in molten jaggery; kAthalAy avarOdu pAzh vinai mUzhki Ezh naraku Azhu(m) mUdanai: enthralled by them and impelled by my past deeds, I have drowned myself in the seven kinds of hell; although I am such a stupid fool, kArir pArum aiyA sivA patham aruLvAyE: kindly protect me with Your gracious eyes, granting me a place in SivA's domain! kOla mA mayil ERi vAr kuzhai Ada: Mounting the beautiful and great peacock, with Your hanging ear-studs swaying, vEl kodu veera vAr kazhal kOdi kOdi idi Osai pOl mika meru thULAy kOdu kO ena: holding the spear in Your hand, Your valorous anklets making thunderous noise, You smashed the Mount MEru to pieces felling its shrieking peaks; Azhi pAdukaL theevu thAdu asurAr kuzhAm odu kULamAka vi(N)NOrkaL vAzhvu uRa vidum vElA: the seabeds, islands and the multitude of mighty demons were all thrashed like garbage and the celestials regained their lost glory as You wielded the spear, Oh Lord! nAlu vEtham udAdu vEthanai eeNa kEsavanAr sakOthari: She is the sister of Lord VishNu who gave birth to Lord BrahmA, well-versed in the four vEdAs; nAthar pAkam vidAL sikA maNi umai pAlA: She is concorporate on, and adheres to, the left side of Lord SivA; She is like the jewel in the crown; She is UmAdEvi, and You are Her son, Oh Lord! njAna pUmiyathAna pEr puliyUril vAzh theyva yAnai mAnodu: You have come along with Your spouses, DEvayAnai and VaLLi, to the renowned place, Chidhambaram, known to be the land of Knowledge, nAlu kOpura vAsal mEviya perumALE.: and are seated in front of the four temple towers, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |