திருப்புகழ் 477 இருள் காட்டு  (சிதம்பரம்)
Thiruppugazh 477 iruLkAttu  (chidhambaram)
Thiruppugazh - 477 iruLkAttu - chidhambaramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதாத்த தய்ய தனதாத்த தய்ய
     தனதாத்த தய்ய ...... தனதான

......... பாடல் .........

இருள்காட்டு செவ்வி ததிகாட்டி வில்லி
     னுதல்காட்டி வெல்லு ...... மிருபாண

இயல்காட்டு கொல்கு வளைகாட்டி முல்லை
     நகைகாட்டு வல்லி ...... யிடைமாதர்

மருள்காட்டி நல்கு ரவுகாட்டு மில்ல
     இடுகாட்டி னெல்லை ...... நடவாத

வழிகாட்டி நல்ல றிவுகாட்டி மெல்ல
     வினை வாட்டி யல்லல் ...... செயலாமோ

தெருள்காட்டு தொல்லை மறைகாட்டு மல்லல்
     மொழிகாட்டு தில்லை ...... யிளையோனே

தினைகாட்டு கொல்லை வழிகாட்ட வல்ல
     குறவாட்டி புல்லு ...... மணிமார்பா

அருள்காட்டு கல்வி நெறிகாட்டு செல்வ
     அடல்காட்டு வல்ல ...... சுரர்கோபா

அடிபோற்றி யல்லி முடிசூட்ட வல்ல
     அடியார்க்கு நல்ல ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

இருள்காட்டு செவ் விததிகாட்டி வில்லின் நுதல்காட்டி ...
இருளைப் போன்ற கரிய செழிப்புற்ற நெருங்கிய கூந்தலைக் காட்டி,
வில் போன்ற நெற்றிப் புருவத்தைக் காட்டி,

வெல்லும் இருபாண இயல்காட்டு கொல் குவளைகாட்டி ...
வெல்லக் கூடிய இரு அம்புகளின் இயலைக் காட்டும், கொல்லும்
தன்மையை உடைய, குவளை மலர் போன்ற கண்களைக் காட்டி,

முல்லை நகைகாட்டு வல்லி இடைமாதர் ... முல்லை வரிசை
போன்ற பற்களைக் காட்டும், கொடி போன்ற இடையுடைய பொது
மாதர் மீது

மருள்காட்டி நல்குரவு காட்டும் இல்ல இடுகாட்டின் ... காம
மயக்கம் காட்டி, அதனால் வரும் வறுமையைக் காட்டுகின்ற சம்சார
வாழ்க்கை என்னும் சுடுகாட்டின்

எல்லை நடவாத வழிகாட்டி நல்லறிவு காட்டி ... முடிவை
அடையாதபடி, எனக்கு நல்வழி காட்டியும், நல்ல அறிவைக் காட்டியும்,

மெல்ல வினை வாட்டி யல்லல் செயலாமோ ... மெல்ல எனது
வினையை வாட்டியும் (காப்பாயா அல்லது) எனக்கு மேலும் துன்பம்
செய்யலாகுமோ?

தெருள்காட்டு தொல்லை மறைகாட்டு மல்லல் மொழிகாட்டு
தில்லை யிளையோனே
... ஞானவழியைக் காட்டுகின்ற பழமையான
வேத மொழிகள் காட்டும் வளமையான உபதேச மொழியை எனக்குக்
காட்டிய சிதம்பரத்தில் எழுந்தருளியுள்ள இளம்பூரணனே,

தினைகாட்டு கொல்லை வழிகாட்ட வல்ல குறவாட்டி புல்லு
மணிமார்பா
... தினை விளையும் புனத்திற்கு வழியைக் காட்டவல்ல
குறமகளாம் வள்ளி தழுவுகின்ற அழகிய மார்பனே,

அருள்காட்டு கல்வி நெறிகாட்டு செல்வ ... அருள் நெறியைக்
காட்டுகின்ற கல்வி வழியைக் காட்டும் செல்வனே,

அடல்காட்டு வல்ல அசுரர்கோபா ... ஆற்றலைக் காட்டிய
வலிய அசுரர்களைக் கோபித்து அழித்தவனே,

அடிபோற்றி யல்லி முடிசூட்ட வல்ல அடியார்க்கு நல்ல
பெருமாளே.
... நின் திருவடிகளைத் தொழுது, தாமரை மலரை நின்
முடிமேல் சூட்டவல்ல அடியவர்களுக்கு நல்லவனாகத் திகழும்
பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.437  pg 2.438  pg 2.439  pg 2.440 
 WIKI_urai Song number: 618 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 477 - iruL kAttu (chidhambaram)

iruLkAttu sevvi thathikAtti villi
     nuthalkAtti vellu ...... mirupANa

iyalkAttu kolku vaLaikAtti mullai
     nakaikAttu valli ...... yidaimAthar

maruLkAtti nalku ravukAttu milla
     idukAtti nellai ...... nadavAtha

vazhikAtti nalla RivukAtti mella
     vinai vAtti yallal ...... seyalAmO

theruLkAttu thollai maRaikAttu mallal
     mozhikAttu thillai ...... yiLaiyOnE

thinaikAttu kollai vazhikAtta valla
     kuRavAtti pullu ...... maNimArpA

aruLkAttu kalvi neRikAttu selva
     adalkAttu valla ...... surarkOpA

adipOtRi yalli mudicUtta valla
     adiyArkku nalla ...... perumALE.

......... Meaning .........

iruLkAttu sev vithathikAtti villin nuthalkAtti: They show off their pitch dark hair closely braided, their bow-shaped eyebrows,

vellum irupANa iyalkAttu kol kuvaLaikAtti: their black-lily-like killing eyes which are like arrows with winning power,

mullai nakaikAttu valli idaimAthar: their neat rows of teeth like jasmine and creeper-like slender waist; with these whores,

maruLkAtti nalkuravu kAttum illa idukAttin ellai nadavAtha vazhikAtti: I have been involved passionately in delusion resulting in utter poverty in my family life; without pushing me to the frontiers of such life ending in the cremation ground,

nallaRivu kAtti mella vinai vAtti yallal seyalAmO: will You show me the righteous path granting me sound knowledge and slowly removing my bad deeds? Will You save me or do You intend to cause me more miseries?

theruLkAttu thollai maRaikAttu mallal mozhikAttu thillai yiLaiyOnE: The ancient scriptures show the path to realisation, which principles You taught me in Chidhambaram where You are seated, Oh Young Wizard!

thinaikAttu kollai vazhikAtta valla kuRavAtti pullu maNimArpA: She is able to show the path to the field where millet is grown; She is VaLLi, the damsel of the KuRavAs; and she hugs Your broad chest, Oh Lord!

aruLkAttu kalvi neRikAttu selva: You show the proper course of education that leads to Divine Grace, Oh Treasure!

adalkAttu valla asurarkOpA: You destroyed with rage those demons who showed off their valour!

adipOtRi yalli mudicUtta valla adiyArkku nalla perumALE.: To those devotees who are capable of worshipping Your lotus feet and adorning Your head with flowers, You are always good, Oh, Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 477 iruL kAttu - chidhambaram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]