திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 472 நஞ்சினைப் போலுமன (சிதம்பரம்) Thiruppugazh 472 nanjinaippOlumana (chidhambaram) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தந்தனத் தானதன தந்தனத் தானதன தந்தனத் தானதன ...... தந்ததான ......... பாடல் ......... நஞ்சினைப் போலுமன வஞ்சகக் கோளர்களை நம்புதற் றீதெனநி ...... னைந்துநாயேன் நண்புகப் பாதமதி லன்புறத் தேடியுனை நங்களப் பாசரண ...... மென்றுகூறல் உன்செவிக் கேறலைகொல் பெண்கள்மெற் பார்வையைகொல் உன்சொலைத் தாழ்வுசெய்து ...... மிஞ்சுவாரார் உன்றனக் கேபரமும் என்றனக் கார்துணைவர் உம்பருக் காவதினின் ...... வந்துதோணாய் கஞ்சனைத் தாவிமுடி முன்புகுட் டேயமிகு கண்களிப் பாகவிடு ...... செங்கையோனே கண்கயற் பாவைகுற மங்கைபொற் றோடழுவு கஞ்சுகப் பான்மைபுனை ...... பொன்செய்தோளாய் அஞ்சவெற் பேழுகடல் மங்கநிட் டூரர்குலம் அந்தரத் தேறவிடு ...... கந்தவேளே அண்டமுற் பார்புகழு மெந்தைபொற் பூர்புலிசை அம்பலத் தாடுமவர் ...... தம்பிரானே. ......... சொல் விளக்கம் ......... நஞ்சினைப் போலுமன வஞ்சகக் கோளர்களை ... விஷம் போல மனத்தில் வஞ்சகம் கொண்டவர்களை நம்புதல் தீதெனநினைந்து நாயேன் ... நம்புதல் கெடுதலாகும் என்று நினைத்து அடியேன் நண்பு உகப் பாதமதில் அன்புறத் தேடி யுனை ... நட்பு பெருக உன் திருவடிகளில் அன்போடு தேடி உன்னை நங்களப்பா சரணமென்றுகூறல் ... எங்கள் அப்பனே சரணம் என்று கூவி முறையிடும் கூச்சல் உன்செவிக்கு ஏறலைகொல் ... உனது செவிகளில் விழவில்லையா? பெண்கள்மெற் பார்வையைகொல் ... தேவிகள் வள்ளி தேவயானை மேல் கண்பார்வையால் கேட்கவில்லையா? உன்சொலைத் தாழ்வுசெய்து மிஞ்சுவாரார் ... உன் உபதேச மொழியைத் தாழ்ச்சி சொல்லி யார் வரம்பு மீறுவர்? உன்றனக்கே பரமும் ... என்னைக் காக்கும் பாரம் உந்தனுக்கே ஆகும். என்றனக்கு ஆர்துணைவர் ... உன்னை விட்டால் எனக்கு வேறு யார் துணைவர் உள்ளனர்? உம்பருக்கு ஆவதினின்வந்து தோணாய் ... தேவர்களுக்கு அருளியதுபோல் என்முன்னும் தோன்றி அருள்க. கஞ்சனைத் தாவி முடி முன்பு குட்டு ஏய ... பிரமனை எட்டி அவனது முடியில் முன்பு நன்றாகக் குட்டி மிகுகண்களிப்பாக விடு செங்கையோனே ... மிக்க களிப்புடன் வீசிய சிவந்த கையை உடையவனே, கண்கயற் பாவை குற மங்கைபொற்றோள் தழுவு ... கயல் மீன் போன்ற கண்ணாள் குற வள்ளியின் அழகிய தோளை அணைக்கும் கஞ்சுகப் பான்மைபுனைபொன்செய்தோளாய் ... பொன் தோளாய், உடலைச் சட்டை தழுவுவது போல இறுக்க அணைத்தவனே, அஞ்சவெற்பு ஏழு கடல் மங்க ... கிரெளஞ்ச மலைகள் ஏழும் நடுங்க, கடல் நீர் வற்றி ஒடுங்க, நிட்டூரர்குலம் அந்தரத்து ஏறவிடு கந்தவேளே ... அசுரர் குலத்தை விண்ணிலேறும்படி கொன்ற கந்தவேளே, அண்டமுற் பார்புகழும் எந்தை ... அண்டம் முதலிய உலகங்கள் யாவும் புகழும் எம் தந்தையார் சிவபெருமானின் பொற்பூர்புலிசை அம்பலத் தாடுமவர் தம்பிரானே. ... அழகிய புலியூரில் (சிதம்பரத்தில்) அம்பலத்தில் ஆடும் நடராஜர் தம்பிரானே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.427 pg 2.428 pg 2.429 pg 2.430 WIKI_urai Song number: 613 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
Song 472 - nanjinaip pOlumana (chidhambaram) nanjinaip pOlumana vanjakak kOLarkaLai namputhaR Reethenani ...... nainthunAyEn naNpukap pAthamathi lanpuRath thEdiyunai nangaLap pAsaraNa ...... menRukURal unsevik kERalaikol peNkaLmeR pArvaiyaikol unsolaith thAzhvuseythu ...... minjuvArAr unRanak kEparamum enRanak kArthuNaivar umparuk kAvathinin ...... vanthuthONAy kanjanaith thAvimudi munpukut tEyamiku kaNkaLip pAkavidu ...... sengaiyOnE kaNkayaR pAvaikuRa mangaipoR ROthazhuvu kanjukap pAnmaipunai ...... ponseythOLAy anjaveR pEzhukadal mangkanit tUrarkulam antharath thERavidu ...... kanthavELE aNdamuR pArpukazhu menthaipoR pUrpulisai ampalath thAdumavar ...... thambirAnE. ......... Meaning ......... nanjinaip pOlumana vanjakak kOLarkaLai: Those people who are devious and with a poisonous mind namputhaR Reethenani nainthunAyEn: are shunned by me as untrustworthy and dangerous. naNpukap pAthamathi lanpuRath thEdiyunai: I am seeking Your friendly hallowed feet with abundant love, nangaLap pAsaraNa menRukURal: screaming "Oh Our Lord, I am surrendering to You" unsevik kERalaikol: Has my scream not reached Your ears? peNkaLmeR pArvaiyaikol: Or is it because You are so constantly looking at Your consorts that You failed to hear me? unsolaith thAzhvuseythu minjuvArAr: Can anyone dare to underestimate Your word and transgress You? unRanak kEparamum: My protection is entirely Your responsibility! enRanak kArthuNaivar: Who else is there by my side to help me? umparuk kAvathinin vanthuthONAy: Just like You took care of the need of DEvAs, You must come before me to my aid. kanjanaith thAvimudi munpukut tEyamiku: Once, You jumped to reach for the Head of BrahmA and banged it kaNkaLip pAkavidu sengaiyOnE: with Your reddish knuckles, Your eyes brimming with fun! kaNkayaR pAvaikuRa mangaipoR ROthazhuvu: You embrace the beautiful shoulders of VaLLi, the damsel of the KuRavAs, with eyes like fish; kanjukap pAnmaipunai ponseythOLAy: and Your shoulders pressed hers just like the perfectly fitting shirt! anjaveR pEzhukadal mangka: The seven hills trembled, and water in the seas receded and dried up when nittUrarkulam antharath thERavidu kanthavELE: You drove the entire families of the demons (asuras) up the sky to their death, Oh Lord KanthA! aNdamuR pArpukazhu menthaipoR pUrpulisai: The entire Universe praises our Lord SivA whose abode is Pulisai (Chidhambaram), ampalath thAdumavar thambirAnE.: where NadarAjA dances at the Golden Shrine; and You are His Great Master! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |