திருப்புகழ் 465 பருவம் பணை  (சிதம்பரம்)
Thiruppugazh 465 paruvampaNai  (chidhambaram)
Thiruppugazh - 465 paruvampaNai - chidhambaramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனனந் தனத்த தந்த தனனந் தனத்த தந்த
     தனனந் தனத்த தந்த ...... தனதான

......... பாடல் .........

பருவம் பணைத்தி ரண்டு கரிகொம் பெனத்தி ரண்டு
     பவளம் பதித்த செம்பொ ...... னிறமார்பிற்

படருங் கனத்த கொங்கை மினல்கொந் தளித்து சிந்த
     பலவிஞ் சையைப்பு லம்பி ...... யழகான

புருவஞ் சுழற்றி யிந்த்ர தநுவந் துதித்த தென்று
     புளகஞ் செலுத்தி ரண்டு ...... கயல்மேவும்

பொறிகண் சுழற்றி ரம்ப பரிசம் பயிற்றி மந்த்ர
     பொடிகொண் டழிக்கும் வஞ்ச ...... ருறவாமோ

உருவந் தரித்து கந்து கரமும் பிடித்து வந்து
     உறவும் பிடித்த ணங்கை ...... வனமீதே

ஒளிர்கொம் பினைச்ச வுந்த ரியவும் பலைக்கொ ணர்ந்து
     ஒளிர்வஞ் சியைப்பு ணர்ந்த ...... மணிமார்பா

செருவெங் களத்தில் வந்த அவுணன் தெறித்து மங்க
     சிவமஞ் செழுத்தை முந்த ...... விடுவோனே

தினமுங் களித்து செம்பொ னுலகந் துதித்தி றைஞ்சு
     திருவம் பலத்த மர்ந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பருவம் பணைத்து இரண்டு கரி கொம்பு எனத் திரண்டு
பவளம் பதித்த செம் பொன் நிற மார்பில் படரும் கனத்த
கொங்கை மி(ன்)னல் கொந்தளித்து சிந்த
... இளமையான,
பருத்த, இரு யானைத் தந்தங்கள் என்று சொல்லும்படி திரட்சியுற்று,
பவளம் பதித்தது போன்ற செவ்விய பொன்னிறமான மார்பில் பரந்துள்ள
கனம் கொண்ட மார்பகங்கள் மின்னல் மின்னி எழுந்தது போல ஒளி வீச,

பல விஞ்சையைப் புலம்பி அழகான புருவம் சுழற்றி
இந்த்ரதநு வந்து உதித்தது என்று புளகம் செலுத்து இரண்டு
கயல் மேவும் பொறிகள் சுழற்றி
... பல மாய வித்தைப் பேச்சுக்களைப்
பலமாகப் பேசி, தமது அழகான புருவங்களைச் சுழற்றி, வானவில் வந்து
தோன்றியது போலப் புளகம் தருகின்ற இரண்டு கயல் மீன் போல் உள்ள
உறுப்பாகிய கண்களைச் சுழற்றி,

ரம்ப பரிசம் பயிற்றி மந்த்ர பொடி கொண்டு அழிக்கும்
வஞ்சர் உறவாமோ
... நிரம்பவும் தொட்டுப் பயின்று, சொக்குப் பொடி
கொண்டு அழிக்கின்ற வஞ்சகர்களாகிய பொது மகளிருடைய உறவு
நல்லதாகுமோ?

உருவம் தரித்து உகந்து கரமும் பிடித்து உவந்து உறவும்
பிடித்த அணங்கை
... மாறுவேடம் பூண்டு, ஆசையுடன் (வளைச்
செட்டியாய் வள்ளியின்) கைகளைப் பற்றி மகிழ்ந்து, அவளது
உறவையும் கொண்டு,

வனம் மீதே ஒளிர் கொம்பினைச் சவுந்தரிய உம்பலைக்
கொணர்ந்து ஒளிர் வஞ்சியைப் புணர்ந்த மணி மார்பா
...
வள்ளிமலைக் காட்டில் விளங்கும் கொம்பினை உடைய அழகிய
(கணபதியாகிய) யானையை வரவழைத்து, விளங்கும் வஞ்சிக்கொடி
போன்ற வள்ளியைக் கலந்த அழகிய மார்பனே,

செரு வெம் களத்தில் வந்த அவுணன் தெறிந்து மங்க சிவம்
அஞ்செழுத்தை முந்த விடுவோனே
... போர் நடந்த கொடிய
போர்க்களத்தில் வந்த சூரன் பிளவுபட்டு அழிய (நமசிவாய என்ற)
பஞ்சாக்ஷரத்தின் ஆற்றலைக் கொண்ட வேலை வேகமாகச்
செலுத்தியவனே,

தினமும் களித்து செம் பொன் உலகம் துதித்து இறைஞ்சு
திரு அம்பலத்து அமர்ந்த பெருமாளே.
... நாள்தோறும்
மகிழ்ச்சியுடன் செவ்விய பொன்னுலகத்தினரான தேவர்கள் துதித்து
வணங்கும் திரு அம்பலத்தில் (சிதம்பரத்தில்) வீற்றிருக்கும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.403  pg 2.404  pg 2.405  pg 2.406 
 WIKI_urai Song number: 606 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 465 - paruvam (chidhambaram)

paruvam paNaiththi raNdu karikom penaththi raNdu
     pavaLam pathiththa sempo ...... niRamArpiR

padarum kanaththa kongai minalkon thaLiththu sintha
     palavin jaiyaippu lampi ...... yazhakAna

puruvam suzhatRi yinthra thanuvan thuthiththa thenRu
     puLakam seluththi raNdu ...... kayalmEvum

poRikaN suzhatRi rampa parisam payitRi manthra
     podikoN dazhikkum vanja ...... ruRavAmO

uruvan thariththu kanthu karamum pidiththu vanthu
     uRavum pidiththa Nangai ...... vanameethE

oLirkom pinaiccha vuntha riyavum palaikko Narnthu
     oLirvan jiyaippu Narntha ...... maNimArpA

seruveng kaLaththil vantha avuNan theRiththu manga
     sivaman jezhuththai muntha ...... viduvOnE

thinamum kaLiththu sempo nulakan thuthiththi Rainju
     thiruvam palaththa marntha ...... perumALE.

......... Meaning .........

paruvam paNaiththu iraNdu kari kompu enath thiraNdu pavaLam pathiththa sem pon niRa mArpil padarum kanaththa kongai mi(n)nal konthaLiththu sintha: As if coral has been embedded on their reddish and golden chest, their youthful and heavy breasts, looking like two ivory tusks of an elephant, jump out brightly dazzling like lightning;

pala vinjaiyaip pulampi azhakAnapuruvam suzhatRi inthrathanu vanthu uthiththathu enRu puLakam seluththu iraNdu kayal mEvum poRikaL suzhatRi: they speak many a magical word emphatically; they roll their beautiful eye-brows and kayal-fish-like eyes sending an awesome thrill as if the rainbow has been formed;

rampa parisam payitRi manthra podi koNdu azhikkum vanjar uRavAmO: they frequently make body contacts and destroy (men) by administering charm-powder; how can my relationship with such treacherous whores be good?

uruvam thariththu ukanthu karamum pidiththu uvanthu uRavum pidiththa aNangai: Coming in several disguises, You passionately held her arms (as a bangle-merchant under the pretext of placing bangles on them) and developed friendship with VaLLi;

vanam meethE oLir kompinaic chavunthariya umpalaik koNarnthu oLir vanjiyaip puNarntha maNi mArpA: In the forest of Mount VaLLimalai, You arranged for the materialisation of a handsome elephant (Lord GaNapathi) with prominent tusks and then united with VaLLi, the vanji (rattan reed) creeper-like pretty damsel, by hugging her with Your broad chest, Oh Lord!

seru vem kaLaththil vantha avuNan theRinthu manga sivam anjezhuththai muntha viduvOnE: When the evil demon SUran confronted You in the battlefield, You wielded the speeding spear that has the same power as that of the five holy letters (NamasivAya) of Lord SivA, splitting the demon into two and destroying him, Oh Lord!

thinamum kaLiththu sem pon ulakam thuthiththu iRainju thiru ampalaththu amarntha perumALE.: In this place, Chidhambaram, the celestials of the reddish golden world assemble daily and worship You happily with prayers; and You are seated here, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 465 paruvam paNai - chidhambaram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]