திருப்புகழ் 463 கொந்தரம் குழல்  (சிதம்பரம்)
Thiruppugazh 463 kondharamkuzhal  (chidhambaram)
Thiruppugazh - 463 kondharamkuzhal - chidhambaramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தந்த தந்தன தந்த தந்தன
     தந்த தந்தன தந்த தந்தன
          தந்த தந்தன தந்த தந்தன ...... தந்ததான

......... பாடல் .........

கொந்த ரங்குழ லிந்து வண்புரு
     வங்கள் கண்கய லுஞ்ச ரங்கணை
          கொண்ட ரம்பைய ரந்த முஞ்சசி ...... துண்டமாதர்

கொந்த ளங்கதி ரின்கு லங்களி
     னுஞ்சு ழன்றிர சம்ப லங்கனி
          கொண்ட நண்பித ழின்சு கங்குயி ...... லின்சொல்மேவுந்

தந்த வந்தர ளஞ்சி றந்தெழு
     கந்த ரங்கமு கென்ப பைங்கழை
          தண்பு யந்தளி ரின்கு டங்கைய ...... ரம்பொனாரந்

தந்தி யின்குவ டின்த னங்களி
     ரண்டை யுங்குலை கொண்டு விண்டவர்
          தங்க டம்படி யுங்க வண்டிய ...... சிந்தையாமோ

மந்த ரங்கட லுஞ்சு ழன்றமிர்
     தங்க டைந்தவ னஞ்சு மங்குலி
          மந்தி ரஞ்செல்வ முஞ்சு கம்பெற ...... எந்தவாழ்வும்

வந்த ரம்பையெ ணும்ப கிர்ந்துந
     டங்கொ ளுந்திரு மங்கை பங்கினன்
          வண்டர் லங்கையு ளன்சி ரம்பொடி ...... கண்டமாயோன்

உந்தி யின்புவ னங்க ளெங்கும
     டங்க வுண்டகு டங்கை யன்புக
          ழொண்பு ரம்பொடி கண்ட எந்தையர் ...... பங்கின்மேவும்

உம்ப லின்கலை மங்கை சங்கரி
     மைந்த னென்றய னும்பு கழ்ந்திட
          வொண்ப ரந்திரு வம்ப லந்திகழ் ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

கொந்தர் அம் குழல் இந்து வண் புருவங்கள் கண் கயலும் சரம்
கணை கொண்டு அரம்பையர் அந்தமும் சசி துண்டம் மாதர்
...
அழகிய பூங் கொத்துக்கள் கொண்ட கூந்தல், பிறைச் சந்திரன் போன்ற
வளப்பமுள்ள புருவங்கள், கயல் மீன் போலவும் அம்பு போலவும்
அம்பின் அலகு போலவும் உள்ள கண்கள் ஆகியவற்றைக் கொண்ட
விலைமாதர் தெய்வ மகளிர் போன்ற அழகும் சந்திரன் போன்ற முகமும்
உடையவர்கள்.

கொந்தளம் கதிரின் குலங்களில் உஞ்சு உழன்று இரசம் பலம்
கனி கொண்ட நண்பு இதழின் சுகம் குயிலின் சொல் மேவும்
தந்த(ம்) அம் தரளம் சிறந்து எழு கந்தரம் கமுகு என்ப
...
இத்தகையோரின் கூந்தலின் ஒளி அழகுகளில் ஈடுபட்டுத் திரிந்து,
சுவையுள்ள பழத்தின் சாரத்தைக் கொண்டு உகந்ததாக இருந்த வாயிதழ்
ஊறலின் இன்பம், கிளி, குயில் இவைகளின் மொழி போன்ற இனிய
சொல், விரும்பும்படியான அழகிய முத்துக்கள் போன்ற பற்கள், நல்ல
எழுச்சியுள்ள கமுகு போன்ற கழுத்து,

பைங் கழை தண் புயம் தளிரின் குடங்கையர் அம் பொன்
ஆரம் தந்தியின் குவடின் தனங்கள் இரண்டையும் குலை
கொண்டு விண்டவர் தம் கடம் படியும் கவண் தீய
சிந்தையாமோ
... பசிய மூங்கில் போன்ற குளிர்ந்த புயங்கள், தளிர்
போல மென்மையான உள்ளங்கையை உடையவர்கள், அழகிய பொன்
மாலையை அணிந்துள்ள, யானை போலவும் மலை போலவும் பெரிதாக
உள்ள இரண்டு மார்பகங்களும் நிலை கெட்டு வெளியே காட்டுபவர்கள்.
இத்தகைய பொது மகளிருடைய உடலில் தோய்கின்ற, கவண்கல்
போல வேகமாய்ப் பாய்கின்ற கெட்ட சிந்தை எனக்கு ஆகுமோ?

மந்தரம் கடலும் சுழன்று அமிர்தம் கடைந்தவன் அஞ்சு
மங்குலி மந்திரம் செல்வமும் சுகம் பெற எந்த வாழ்வும்
வந்த அரம்பையர் எணும் பகிர்ந்து நடம் கொளும் திரு
மங்கை பங்கினன்
... மந்தர மலையைக் கடலில் சுழல வைத்து
அமுதத்தைக் கடைந்து எடுத்தவன், அச்சம் கொண்ட இந்திரன்
இருப்பிடத்தையும் பொருளையும் சுகத்தையும் எல்லா வாழ்வையும்
பெற, அந்தக் கடலில் தோன்றிய அரம்பை முதலான நடன
மாதர்களையும் பங்கிட்டு அளித்து நடனம் புரிந்த லக்ஷ்மியின்
நாயகன்,

வண்டர் லங்கை உளன் சிரம் பொடி கண்ட மாயோன்
உந்தியில் புவனங்கள் எங்கும் அடங்க உண்ட குடங்கையன்
புகழ்
... மங்கல பாடகர் பாடி நின்ற இலங்கை வேந்தனான
ராவணனுடைய பத்துத் தலைகளையும் பொடியாகும்படி வென்ற
மாயவன், தனது வயிற்றில் அண்டங்கள் யாவும் அடங்க உண்ட
உள்ளங்கையை உடைய திருமால் புகழ,

ஒண் புரம் பொடி கண்ட எந்தையர் பங்கின் மேவும் உம்பலின்
கலை மங்கை சங்கரி மைந்தன் என்று அயனும் புகழ்ந்திட
ஒண் பரம் திரு அம்பலம் திகழ் தம்பிரானே.
... ஒளி வீசிய திரி
புரங்களை பொடி செய்த எமது தந்தையாகிய சிவபெருமானின்
பாகத்தில் இருப்பவளும், எழுச்சி கொண்ட எல்லா கலைகளுக்கும்
தலைவியுமாகிய மங்கை என்னும் சங்கரியின் மகனே என்று பிரமனும்
புகழ, ஒள்ளிய மேலான சிதம்பரத்தின் திரு அம்பலத்தில் விளங்கும்
தம்பிரானே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.399  pg 2.400  pg 2.401  pg 2.402 
 WIKI_urai Song number: 604 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 463 - kondharam kuzhal (chidhambaram)

kontha rangkuzha linthu vaNpuru
     vangaL kaNkaya lunja rangkaNai
          koNda rampaiya rantha mumsasi ...... thuNdamAthar

kontha Langkathi rinku langaLi
     numchu zhanRira sampa langkani
          koNda naNpitha zhinsu kangkuyi ...... linsolmEvun

thantha vanthara Lamchi Ranthezhu
     kantha rangamu kenpa paingazhai
          thaNpu yanthaLi rinku dangaiya ...... ramponAran

thanthi yinkuva dintha nangaLi
     raNdai yungkulai koNdu viNdavar
          thanga dampadi yunga vaNdiya ...... sinthaiyAmO

mantha rangkada lunju zhanRamir
     thangka dainthava nanju manguli
          manthi ramchelva munju kampeRa ...... enthavAzhvum

vantha rampaiye Numpa kirnthuna
     dangko Lunthiru mangai panginan
          vaNdar langaiyu Lansi rampodi ...... kaNdamAyOn

unthi yinpuva nanga Lenguma
     danga vuNdaku dangai yanpuka
          zhoNpu rampodi kaNda enthaiyar ...... panginmEvum

umpa linkalai mangai sangari
     maintha nenRaya numpu kazhnthida
          voNpa ranthiru vampa lanthikazh ...... thambirAnE.

......... Meaning .........

konthar am kuzhal inthu vaN puruvangaL kaN kayalum saram kaNai koNdu arampaiyar anthamum sasi thuNdam mAthar: Their hair is bedecked with beautiful bunches of flowers. Their thick eye-brows are like the crescent moon. Their eyes are comparable to the kayal fish, the arrow and its tip. These whores are beautiful like celestial maids with moon-like face.

konthaLam kathirin kulangaLil umchu uzhanRu irasam palam kani koNda naNpu ithazhin sukam kuyilin sol mEvum thantha(m) am tharaLam siRanthu ezhu kantharam kamuku enpa: I have been roaming about passionately, attracted by the bright lights emanating from their hair, by the sweetness of their saliva that is like the juice of a tasty fruit, their sweet utterances resembling the speech of the parrot and the cuckoo, their highly impressive teeth looking like a row of pearls, their prominent neck like the betelnut tree,

paing kazhai thaN puyam thaLirin kudangaiyar am pon Aram thanthiyin kuvadin thanangaL iraNdaiyum kulai koNdu viNdavar tham kadam padiyum kavaN theeya sinthaiyAmO: their cool shoulders that are like the young bamboo, their soft and beautiful palms like leaf bud and their two breasts wearing golden chain and looking like the elephant and the mountain which they display shamelessly. Why am I having such a wicked mind that springs out like the stone from the sling, always contemplating a physical contact with these whores?

mantharam kadalum chuzhanRu amirtham kadainthavan anju manguli manthiram selvamum sukam peRa entha vAzhvum vantha arampaiyar eNum pakirnthu nadam koLum thiru mangai panginan: He was the One who placed the mount Manthara in the sea and churned it to extract nectar. In order that the terrified Lord IndrA could redeem his kingdom, wealth and all prospects, He offered all the dancing celestial maids like RambA to be shared among the DEvAs for their courts and danced about. He is the consort of Goddess Lakshmi.

vaNdar langai uLan siram podi kaNda mAyOn unthiyil puvanangaL engum adanga uNda kudangaiyan pukazh: He is the mystic Lord who triumphantly smashed into pieces the ten heads of RAvaNan, the King of Lanka, lauded in hymns by poet-singers. He has the hallowed palm with which He devoured all the worlds and held them in His belly. That Lord VishNu stood there extolling

oN puram podi kaNda enthaiyar pangin mEvum umpalin kalai mangai sangari mainthan enRu ayanum pukazhnthida oN param thiru ampalam thikazh thambirAnE.: as our father, Lord SivA, shattered the dazzling Thiripuram into dust; She is concorporate on the left side of that Lord SivA; She presides over all the distinguished arts; She is Goddess Sankari; and Brahma praises You hailing You as the son of that Sankari, and You are seated on the glorious golden stage of the bright and famous town, Chidhambaram, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 463 kondharam kuzhal - chidhambaram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]