திருப்புகழ் 452 குகனே குருபரனே  (சிதம்பரம்)
Thiruppugazh 452 guganEgurubaranE  (chidhambaram)
Thiruppugazh - 452 guganEgurubaranE - chidhambaramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தனதன தானன தந்தத்
     தனன தனதன தானன தந்தத்
          தனன தனதன தானன தந்தத் ...... தனதான

......... பாடல் .........

குகனெ குருபர னேயென நெஞ்சிற்
     புகழ அருள்கொடு நாவினி லின்பக்
          குமுளி சிவவமு தூறுக வுந்திப் ...... பசியாறிக்

கொடிய இருவினை மூலமும் வஞ்சக்
     கலிகள் பிணியிவை வேரொடு சிந்திக்
          குலைய நமசிவ யோமென கொஞ்சிக் ...... களிகூரப்

பகலு மிரவுமி லாவெளி யின்புக்
     குறுகி யிணையிலி நாடக செம்பொற்
          பரம கதியிது வாமென சிந்தித் ...... தழகாகப்

பவள மனதிரு மேனியு டன்பொற்
     சரண அடியவ ரார்மன வம்பொற்
          றருண சரண்மயி லேறியு னம்பொற் ...... கழல்தாராய்

தகுட தகுதகு தாதக தந்தத்
     திகுட திகுதிகு தீதக தொந்தத்
          தடுடு டுடுடுடு டாடக டிங்குட் ...... டியல்தாளம்

தபலை திமிலைகள் பூரிகை பம்பைக்
     கரடி தமருகம் வீணைகள் பொங்கத்
          தடிய ழனவுக மாருத சண்டச் ...... சமரேறிக்

ககன மறைபட ஆடிய செம்புட்
     பசிகள் தணிவுற சூரர்கள் மங்கக்
          கடல்க ளெறிபட நாகமு மஞ்சத் ...... தொடும்வேலா

கயிலை மலைதனி லாடிய தந்தைக்
     குருக மனமுன நாடியெ கொஞ்சிக்
          கனக சபைதனில் மேவிய கந்தப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

குகனே குருபரனே என நெஞ்சில் புகழ ... குகனே, மேலான
குரு மூர்த்தியே, என்று மனதார நான் புகழவும்,

அருள் கொடு நாவினில் இன்ப குமுளி ... உன் திருவருளின்
துணைகொண்டு எனது உள் நாவில் இன்பத்தேன் குமிழி பொங்க,

சிவ அமுது ஊறுக உந்திப் பசி ஆறி ... சிவ அமுது ஊறுவதால்
வயிற்றுப் பசி ஆறி,

கொடிய இரு வினை மூலமும் ... பொல்லாத இருவினைகளின்
மூலப் பகுதியும்,

வஞ்ச கலிகள் பிணி இவை வேரொடு சிந்திக் குலைய ...
கொடிய கேடுகள், நோய்கள் இவை அடியோடு தொலைந்து போகவும்,

நம சிவ ஓம் என கொஞ்சி களி கூர ... நமசிவய ஓம் என்ற
மந்திரத்தை அன்புடன் ஓதி மகிழ்ச்சி நிரம்பவும்,

பகலும் இரவும் இலா வெளி இன்பு குறுகி ... பகலும் இரவும்
இல்லாத வெளியில் இன்பத்தை அணுகி அடைந்து,

இணை இலி நாடக செம் பொன் பரம கதி ... ஒப்பிலாத
(இறைவனுடைய) ஆனந்த நடனம் நிகழும் செவ்விய அழகிய பரம கதி

இதுவாம் என சிந்தித்து அழகாக ... இதுவேயாகும் என்று
உணர்ந்து அழகிய நிலையைப் பெறவும்,

பவளம் அன திரு மேனியுடன் பொன் சரண அடியவரார்
ம(ன்)ன
... பவளம் போன்ற திருவுருவத்துடன் அழகிய திருவடியை
(அடைந்த) அடியார்கள் பொருந்த உடன் வர,

அம் பொன் தருண சரண் மயில் ஏறி ... அழகிய பொலிவுள்ள,
இளமை வாய்ந்த, அடைக்கலம் தர வல்ல, மயில் மீது ஏறி,

உன் அம் பொன் கழல் தாராய் ... உனது அழகிய பொன்
அனைய திருவடியைத் தந்து அருளுக.

தகுட தகுதகு தாதக தந்தத்
திகுட திகுதிகு தீதக தொந்தத்
தடுடு டுடுடுடு டாடக டிங்குட்டு இயல்தாளம்
... (இவ்வாறு)
ஒலிக்கும் தாளமும்,

தபலை திமிலைகள் பூரிகை பம்பை கரடி ... தபலை என்ற
மத்தள வகை, திமிலை என்ற பறைவகை, ஊது குழல், பம்பை, கரடி
கத்துவது போன்ற பறைவகை,

தமருகம் வீணைகள் பொங்க ... உடுக்கை, வீணைகள் இவை
எல்லாம் பேரொலி எழுப்ப,

தடி அழனம் உக ... கொல்லப்பட்ட பிணங்கள் சிதறி விழ,

மாருதம் சண்ட சமர் ஏறி ... வாயு வேகத்துடன் கொடிய போர்
செய்யப் புகுந்து,

ககனம் மறை பட ஆடிய செம் புள் ... ஆகாயம் வந்து
பந்தரிட்டது போலக் கூத்தாடும் செவ்விய பறவைகளின்
(செங்கழுகுகளின்)

பசிகள் தணிவுற சூரர்கள் மங்க ... பசிகள் அடங்கவும், சூரர்கள்
அழியவும்,

கடல்கள் எறி பட நாகமும் அஞ்ச தொடும் வேலா ... கடல்கள்
அலைபாயவும், அஷ்ட நாகங்களும் பயப்படவும் வேலைச்
செலுத்தியவனே,

கயிலை மலை தனில் ஆடிய தந்தைக்கு ... கயிலாய மலையில்
திரு நடனம் செய்யும் தந்தையாகிய சிவபெருமானுக்கு

உருக மனம் முனம் நாடியே கொஞ்சி ... மனம் உருகுமாறு அவர்
முன்பு விருப்பத்துடன் கொஞ்சி விளையாடி,

கனக சபைதனில் மேவிய கந்தப் பெருமாளே. ... சிதம்பரத்தில்
வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.363  pg 2.364  pg 2.365  pg 2.366 
 WIKI_urai Song number: 593 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 452 - guganE gurubaranE (chidhambaram)

gukane gurupara nEyena nenjiR
     pukazha aruLkodu nAvini linpak
          kumuLi sivavamu thURuka vunthip ...... pasiyARi

kodiya iruvinai mUlamum vanjak
     kalikaL piNiyivai vErodu sinthik
          kulaiya namasiva yOmena konjik ...... kaLikUrap

pakalu miravumi lAveLi yinpuk
     kuRuki yiNaiyili nAtaka sempoR
          parama kathiyithu vAmena sinthith ...... thazhakAkap

pavaLa manathiru mEniyu danpoR
     caraNa adiyava rArmana vampot
          RaruNa saraNmayi lERiyu nampoR ...... kazhalthArAy

thakuda thakuthaku thAthaka thanthath
     thikuda thikuthiku theethaka thonthath
          thadudu dudududu dAdaka dingut ...... tiyalthALam

thapalai thimilaikaL pUrikai pampaik
     karadi thamarukam veeNaikaL pongkath
          thadiya zhanavuka mArutha caNdac ...... camarERik

kakana maRaipada Adiya cemput
     pasikaL thaNivuRa cUrarkaL mangkak
          kadalka LeRipada nAkamu manjath ...... thodumvElA

kayilai malaithani lAdiya thanthaik
     kuruka manamuna nAdiye konjik
          kanaka sapaithanil mEviya kanthap ...... perumALE.

......... Meaning .........

gukanE guruparanE ena nenjil pukazha: When I praise You heartily, saying "Oh GuhA! Oh Great Master!"

aruL kodu nAvinil inpa kumuLi: blissfully sweet honey wells up profusely in my inner tongue due to Your grace.

siva amuthu URuka unthip pasi ARi: As the nectar of SivA sprouts within me, the hunger in my stomach is satiated.

kodiya iru vinai mUlamum: The root of my wicked deeds, both good and bad,

vanja kalikaL piNi ivai vErodu sinthik kulaiya: evil vices and diseases are totally destroyed.

nama siva Om ena konji kaLi kUra: I happily chant the ManthrA "Om NamasivAya".

pakalum iravum ilA veLi inpu kuRuki: I reach a blissful zone in the ether where day and night cease to exist.

iNai ili nAdaka sem pon parama kathi ithuvAm ena sinthiththu azhakAka: I realise that this is the ultimate destination where the matchless and heavenly cosmic dance by the Lord takes place, and in that beautiful thought process

pavaLam ana thiru mEniyudan pon saraNa adiyavarAr ma(n)na: I have the vision of the Lord with coral-like body and hallowed feet, accompanied by His devotees who have already attained those feet.

am pon tharuNa saraN mayil ERi: Mounting Your beautiful, gold-like and young peacock, that can give refuge to all,

un am pon kazhal thArAy: kindly grant me Your golden feet!

thakuda thakuthaku thAthaka than-thath thikuda thikuthiku theethaka thon-thath thadudu dudududu dAdaka dingkuddu iyalthALam: To the meter of "thakuda thakuthaku thAthaka than-thath thikuda thikuthiku theethaka thon-thath thadudu dudududu dAdaka dingku",

thapalai thimilaikaL pUrikai pampai karadi: the two small drums (tabElA), the large drums (thimilai), flutes, and other percussion instruments of the variety, pampai and karadi (making animal sounds)

thamarukam veeNaikaL ponga: hand-drums (udukkai) and veeNAs - all these created a loud noise;

thadi azhanam uka: the slain corpses were scattered all over;

mArutham saNda samar ERi: with the speed of a cyclone, You went to the battlefield;

kakanam maRai pada Adiya sem puL: the dancing red eagles flocked together as if a space was enclosed blocking the skyview;

pasikaL thaNivuRa cUrarkaL manga: those eagles' hunger was satiated, and the demons were killed;

kadalkaL eRi pada nAkamum anja thodum vElA: the seas were agitated due to boisterous waves and the eight great serpents were terror-stricken when You wielded Your spear, Oh Lord!

kayilai malai thanil Adiya thanthaikku: Your father, Lord SivA, who danced in Mount KailAsh,

uruka manam munam nAdiyE konji: was delighted with a molten heart when You played with Him teasingly.

kanaka sapaithanil mEviya kanthap perumALE.: You have Your abode at the golden stage in Chidhambaram, Oh Kantha, the Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 452 guganE gurubaranE - chidhambaram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]