திருப்புகழ் 432 பாண மலரது  (திருவருணை)
Thiruppugazh 432 pANamalaradhu  (thiruvaruNai)
Thiruppugazh - 432 pANamalaradhu - thiruvaruNaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

mp3
 
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தான தனதன தத்தம் ...... தனதான

......... பாடல் .........

பாண மலரது தைக்கும் ...... படியாலே

பாவி யிளமதி கக்குங் ...... கனலாலே

நாண மழிய வுரைக்குங் ...... குயிலாலே

நானு மயலி லிளைக்குந் ...... தரமோதான்

சேணி லரிவை யணைக்குந் ...... திருமார்பா

தேவர் மகுட மணக்குங் ...... கழல்வீரா

காண அருணையில் நிற்குங் ...... கதிர்வேலா

காலன் முதுகை விரிக்கும் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பாண மலர் அது தைக்கும் படியாலே ... மன்மதனது மலர்ப்
பாணங்கள் தைக்கும் காரணத்திலாலும்,

பாவி இள மதி கக்கும் கனலாலே ... பாவி இளம் பிறை வீசுகின்ற
நெருப்பாலும்,

நாணம் அழிய உரைக்கும் குயிலாலே ... (என்) மானத்தைக்
கெடுக்கும் வகையில் கூவுகின்ற குயிலாலும்,

நானும் மயலில் இளைக்கும் தரமோ தான் ... நானும் காம
மயக்கத்தால் இளைத்துப் போதல் நியாயமோ தான்?

சேணில் அரிவை அணைக்கும் திரு மார்பா ... விண்ணுலகத்தில்
இருக்கும் பெண்ணைத் (தேவயானையை) அணைக்கும் அழகிய
மார்பனே,

தேவர் மகுடம் மணக்கும் கழல் வீரா ... தேவர்கள்
அடிபணிவதால், அவர்களுடைய மகுடங்களின் நறுமணம் வீசும்
திருக் கழலை உடைய வீரனே,

காண அருணையில் நிற்கும் கதிர்வேலா ... யாவரும்
காணும்படி திருவண்ணா மலையில் வீற்றிருக்கும் ஒளி வீசும் வேலனே,

காலன் முதுகை விரிக்கும் பெருமாளே. ... யமனுடைய முதுகு
விரியும்படி அவனை விரட்டி விலக்கும் பெருமாளே.


இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் அமைந்தது. நிலவு, மன்மதன்,
மலர் அம்பு, குயிலின் ஓசை முதலியவை தலைவனின் பிரிவை மிகவும்
அதிகமாக்கும் பொருட்கள்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.317  pg 2.318 
 WIKI_urai Song number: 573 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 432 - pANa malarathu (thiruvaNNAmalai)

pANa malarathu thaikkum ...... padiyAlE

pAvi yiLamathi kakkung ...... kanalAlE

nANa mazhiyavu raikkung ...... kuyilAlE

nAnu mayalili Laikkun ...... tharamOthAn

sENi larivaiya Naikkun ...... thirumArpA

thEvar makudama Nakkung ...... kazhalveerA

kANa aruNaiyil niRkung ...... kathirvElA

kAlan muthukaivi rikkum ...... perumALE.

......... Meaning .........

pANa malar athu thaikkum padiyAlE: Because of the stinging flowery arrows shot by Manmathan (God of Love),

pAvi iLa mathi kakkum kanalAlE: because of the sinful crescent moon radiating rays of fire,

nANam azhiya uraikkum kuyilAlE: and because of the cuckoo's shrill cooing causing me embarrassment,

nAnum mayalil iLaikkum tharamO thAn: is it fair that I too should suffer debility in delusory love for You?

sENil arivai aNaikkum thiru mArpA: You embrace DEvayAnai, the damsel in the distant celestial land, with Your hallowed chest!

thEvar makudam maNakkum kazhal veerA: Your hallowed anklets exude the fragrance of the crowns of the celestials falling at Your feet, Oh valorous One!

kANa aruNaiyil niRkum kathirvElA: Offering Your vision to all, You are seated in ThiruvaNNAmalai with Your dazzling spear, Oh Lord!

kAlan muthukai virikkum perumALE.: You repel and chase away the God of Death (Yaman) so powerfully that his back splits open, Oh Great One!


This song has been written in the Nayaka-Nayaki BhAva portraying the pangs of separation of the heroine from Lord Murugan.
The Love God, the flowery arrows, the crescent moon and the cooing cuckoo are some of the sources which aggravate the agony of separation from the Lord.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

mp3
 

Thiru Arunagirinathar's Thiruppugazh - 432 pANa malaradhu - thiruvaruNai


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]