திருப்புகழ் 422 சினமுடுவல் நரிகழுகு  (திருவருணை)
Thiruppugazh 422 sinamuduvalnarikazhugu  (thiruvaruNai)
Thiruppugazh - 422 sinamuduvalnarikazhugu - thiruvaruNaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனன தனதனன தந்தனந் தந்தனம்
     தனதனன தனதனன தந்தனந் தந்தனம்
          தனதனன தனதனன தந்தனந் தந்தனம் ...... தந்ததான

......... பாடல் .........

சினமுடுவல் நரிகழுகு டன்பருந் தின்கணங்
     கொடிகெருடன் அலகைபுழு வுண்டுகண் டின்புறுஞ்
          செடமளறு மலசலமொ டென்புதுன் றுங்கலந் ...... துன்பமேவு

செனனவலை மரணவலை ரண்டுமுன் பின்தொடர்ந்
     தணுகுமுட லநெகவடி விங்கடைந் தம்பரஞ்
          சிறுமணலை யளவிடினு மங்குயர்ந் திங்குலந் ...... தொன்றுநாயேன்

கனகபுவி நிழல்மருவி யன்புறுந் தொண்டர்பங்
     குறுகஇனி யருள்கிருபை வந்துதந் தென்றுமுன்
          கடனெனது உடலுயிரு முன்பரந் தொண்டுகொண் ...... டன்பரோடே

கலவிநல மருவிவடி வஞ்சிறந் துன்பதம்
     புணர்கரண மயில்புறமொ டின்புகொண் டண்டருங்
          கனகமலர் பொழியஉன தன்புகந் தின்றுமுன் ...... சிந்தியாதோ

தனனதன தனனதன தந்தனந் தந்தனந்
     தகுகுகுகு குகுகுகுகு டங்குடங் குந்தடந்
          தவில்முரசு பறைதிமிலை டிங்குடிங் குந்தடர்ந் ...... தண்டர்பேரி

தடுடுடுடு டுடுடுடுடு டுண்டுடுண் டுண்டுடுண்
     டிமிடிமிட டகுர்திகுகு சங்குவெண் கொம்புதிண்
          கடையுகமொ டொலியகட லஞ்சவஞ் சன்குலஞ் ...... சிந்திமாளச்

சினமுடுகி அயிலருளி யும்பரந் தம்பரந்
     திகையுரகர் புவியுளது மந்தரம் பங்கயன்
          செகமுழுது மகிழஅரி அம்புயன் தொண்டுகொண் ...... டஞ்சல்பாடத்

திருமுறுவ லருளியென தெந்தையின் பங்குறுங்
     கவுரிமன முருகவொரு கங்கைகண் டன்புறுந்
          திருவருண கிரிமருவு சங்கரன் கும்பிடுந் ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

சின முடுவல் நரி கழுகுடன் பருந்தின் கணம் கொடி
கெருடன் அலகை புழு உண்டு கண்டு இன்புறும் செடம்
...
இந்த உடலானது கோபம் கொள்ளும் நாய், நரி, கழுகு இவைகளுடன்
பருந்துகளின் கூட்டம், காக்கை, கருடன், பேய், புழுக்கள் இவை
யாவற்றாலும் உண்ணப்படுவதற்கும், கண்டு களிக்கப்படுவதற்கும்
அமைந்தது.

அளறு மல சலமொடு என்பு துன்றும் கலம் ... இவ்வுடல் சேறு
போன்ற மலம், நீருடன், எலும்பும் கூடியுள்ள பாத்திரம்.

துன்பம் மேவும் செனன வலை மரண வலை இரண்டு(ம்)
முன் பின் தொடர்ந்து அணுகும் உடல்
... துன்பத்துடன் கூடிய
பிறப்பு வலை, இறப்பு வலை இரண்டும் முன் பின்னாகத் தொடர்ந்து
நெருங்கி வரும் உடல் இது.

அநெக வடிவு இங்கு அடைந்து அம்பரம் சிறு மணலை
அளவிடினும் அங்கு உயர்ந்து இங்கு உலந்து ஒன்று(ம்)
நாயேன்
... பல உருவங்கள் இவ்வுலகில் அடைந்து, கடலின் சிறு
மணலை அளவிட்டாலும் அங்கு அந்த அளவைக் காட்டிலும் மேற்பட்டு,
இங்கு அழிவதற்காகவே பிறவியில் பொருந்தும் நாயினும் கீழான நான்,

கனக புவி நிழல் மருவி அன்புறும் தொண்டர் பங்(கு) குறுக
இனி அருள் கிருபை வந்து தந்து
... பொன்னுலகின் நிழலில்
இருந்து, (உன் மீது) அன்பு பூண்டுள்ள அடியார்களின் பக்கத்தில்
இருந்து பொருந்த, இனி அருட் கிருபையை வந்து தர

என்றும் உன் கடன் எனது உடல் உயிரும் உன் பரம் ...
எப்போதும் உன்னுடைய கடமையாகும் என்னுடைய உடலும்,
உயிரும் உன்னுடைய ஆட்சிக்கு உட்பட்டதாகும்.

தொண்டு கொண்டு அன்பரோடே கலவி நலம் மருவி வடிவம்
சிறந்து
... அடியேனுடைய தொண்டை ஏற்றுக் கொண்டு,
அன்பர்களுடன் இணக்க இன்பம் பொருந்தி, என் அழகு சிறப்புற்று,

உன் பதம் புணர் கரணம் மயில் புறமொடு இன்பு கொண்டு
அண்டரும் கனக மலர் பொழிய உனது அன்பு உகந்து இன்று
முன் சிந்தியாதோ
... உனது திருவடியில் என் மனமும் கரணங்களும்
பொருந்த, உனது மயிலின் புறத்தே மகிழ்ச்சி கொண்டு தேவர்களும் பொன்
மலர்களைப் பொழிய, உன்னுடைய அன்பு மகிழ்ச்சி கூடி இன்றே என்னை
முன்னதாகக் கருதக் கூடாதோ?

தனனதன தனனதன தந்தனந் தந்தனந்
தகுகுகுகு குகுகுகுகு டங்குடங் குந் தடம்
தவில்முரசு பறைதிமிலை டிங்கு டிங்குந்து அடர்ந்த
...
தனனதன தனனதன தந்தனந்
தந்தனந் தகுகுகுகு குகுகுகுகு டங்குடங் குந்தடம் - என்று வளைந்த
மேளம், முரசு, பறை, திமிலை (இவை எல்லாம் கூடி) டிங்கு டிங்குந்து
என்று பேரொலி எழுப்ப,

அண்டர் பேரி தடுடுடுடு டுடுடுடுடு டுண்டுடுண்
டுண்டுடுண் டிமிடிமிட டகுர திகுகு
... தேவர்களின் பேரி வாத்தியம்
தடுடுடுடு டுடுடுடுடு டுண்டுடுண்
டுண்டுடுண் டிமிடிமிட டகுர திகுகு என்று ஒலிக்க,

சங்கு வெண் கொம்பு திண் கடையுகம் ஒடு ஒலிய ... சங்கும்,
வெண்ணிறமுடைய ஊது கொம்பும் வலிமையாக ஊதி யுக முடிவு
போல்ஒலி செய்ய,

கடல் அஞ்ச வஞ்சன் குலம் சிந்தி மாளச் சினம் முடுகி அயில்
அருளி
... கடலும் அஞ்ச, வஞ்சகனாகிய சூரனுடைய குலம் சிதறுண்ட
அழிய, கோபம் மிக உண்டாக வேலாயுதத்தைச் செலுத்தி,

உம்பர் அந்த அம்பரம் திசை உரகர் புவி உளது மந்தரம்
பங்கயன் செகம் முழுது மகிழ
... தேவர்கள், அந்தச் சமுத்திரம்,
திக்குகள், நாகர், பூமியில் உள்ள மந்தர மலையில் உள்ளோர், தாமரையில்
இருக்கும் பிரமன் உலகங்கள் (இங்ஙனம்) யாவரும் மகிழ,

அரி அம்புயன் தொண்டு கொண்டு அஞ்சல் பாட ...
திருமாலும், பிரமனும் அடிமை பூண்டு அபயம் தா என்று ஓலமிடும்
பாடல்களைப் பாட,

திரு முறுவல் அருளி எனது எந்தையின் பங்கு உறும்
கவுரி மனம் உருக
... அழகிய புன்னகையைப் பூத்தருளி எனது
தந்தையாகிய சிவபெருமானின் பக்கத்தில் உறையும் உமையவள்
மனம் குழைய,

ஒரு கங்கை கண்டு அன்புறும் திரு அருணை கிரி மருவு
சங்கரன் கும்பிடும் தம்பிரானே.
... ஒப்பற்ற கங்கை (உன்
ஆடலைப்) பார்த்து அன்பு கொள்ளும் திரு அண்ணா மலையில்
வீற்றிருக்கும் சங்கரன் வணங்கும் தலைவனே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.289  pg 2.290  pg 2.291  pg 2.292 
 WIKI_urai Song number: 564 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 422 - sinamuduval narikazhugu (thiruvaNNAmalai)

sinamuduval narikazhuku danparun thinkaNam
     kodikerudan alakaipuzhu vuNdukaN dinpuRum
          sedamaLaRu malasalamo denputhun Rungkalan ...... thunpamEvu

senanavalai maraNavalai raNdumun pinthodarn
     thaNukumuda lanekavadi vingkadain thamparam
          siRumaNalai yaLavidinu manguyarn thingulan ...... thonRunAyEn

kanakapuvi nizhalmaruvi yanpuRun thoNdarpang
     kuRukaini yaruLkirupai vanthuthan thenRumun
          kadanenathu udaluyiru munparan thoNdukoN ...... danparOdE

kalavinala maruvivadi vanchiRan thunpatham
     puNarkaraNa mayilpuRamo dinpukoN daNdarum
          kanakamalar pozhiyauna thanpukan thinRumun ...... sinthiyAthO

thananathana thananathana thanthanan thanthanan
     thakukukuku kukukukuku dangkudang kunthadan
          thavilmurasu paRaithimilai dingkuding kunthadarn ...... thaNdarpEri

thadudududu dududududu duNduduN duNduduN
     dimidimida dakurthikuku sanguveN komputhiN
          kadaiyukamo doliyakada lanjavan jankulam ...... sinthimALa

sinamuduki ayilaruLi yumparan thamparan
     thikaiyurakar puviyuLathu mantharam pangayan
          sekamuzhuthu makizhAri ampuyan thoNdukoN ...... danjalpAdath

thirumuRuva laruLiyena thenthaiyin panguRung
     kavurimana murukavoru kangaikaN danpuRum
          thiruvaruNa kirimaruvu sankaran kumpidun ...... thambirAnE.

......... Meaning .........

sina muduval nari kazhukudan parunthin kaNam kodi kerudan alakai puzhu uNdu kaNdu inpuRum sedam: This body is meant to provide visual pleasure to, and serve as the meal for, angry dogs, jackals, eagles, flock of vultures, crows, devils and worms.

aLaRu mala salamodu enpu thunRum kalam: This is a vessel, fitted with bones, serving as a container for muddy feaces and urine.

thunpam mEvum senana valai maraNa valai iraNdu(m) mun pin thodarnthu aNukum udal: The wretched webs of birth and death pursue and haunt this body, back and forth.

aneka vadivu ingu adainthu amparam siRu maNalai aLavidinum angu uyarnthu ingu ulanthu onRu(m) nAyEn: After taking many shapes and forms in this world, whose number exceeds that of tiny sands on the sea-shore, I, baser than the dog, took birth here only to decay;

kanaka puvi nizhal maruvi anpuRum thoNdar pang(u) kuRuka ini aruL kirupai vanthu thanthu: in order that You come and bless me graciously so that I could approach and join the company of Your kind devotees who enjoy eternal bliss under the shade of the divine land,

enRum un kadan enathu udal uyirum un param: I hereby surrender to You my body and soul which are bonded to You eternally.

thoNdu koNdu anparOdE kalavi nalam maruvi vadivam siRanthu: Kindly accept my devoted service, ensuring that my union with Your devotees is consummated, thereby enhancing my splendour;

un patham puNar karaNam mayil puRamodu inpu koNdu aNdarum kanaka malar pozhiya: as my mind and intellect reach Your hallowed feet, with the celestials happily standing beside Your peacock showering golden flowers,

unathu anpu ukanthu inRu mun sinthiyAthO: will Your loving bliss not be bestowed upon me today giving me priority?

thananathana thananathana thanthanan thanthanan thakukukuku kukukukuku dangkudang kun thadam thavilmurasu paRaithimilai dingku dingkunthu adarntha: To the beat of "thananathana thananathana thanthanan thanthanan thakukukuku kukukukuku dangkudang kunthu" the crooked drums, snares, paRais and thimilais (kinds of percussion instruments) were beaten making the big sound of "dingku dingkunthu";

aNdar pEri thadudududu dududududu duNduduN duNduduN dimidimida dakura thikuku: the large drums of the celestials made the sound of "thadudududu dududududu duNduduN duNduduN dimidimida dakura thikuku";

sangu veN kompu thiN kadaiyukam odu oliya: the conch-shell and the white trumpet made such a powerful sound as though it was the end of the aeon;

kadal anja vanjan kulam sinthi mALac chinam muduki ayil aruLi: the sea was terrified; and the entire clan of the treacherous demon SUran was shattered and destroyed, as You wielded the spear fiercely;

umpar antha amparam thisai urakar puvi uLathu mantharam pangayan sekam muzhuthu makizha: the celestials, that ocean, all the cardinal directions, people in the NAgA world and on the Mount Manthara in the terrestrial world, Lord BrahmA on the lotus and all others were exhilarated;

ari ampuyan thoNdu koNdu anjal pAda: Lord VishNu and BrahmA sang heartrending songs seeking refuge;

thiru muRuval aruLi enathu enthaiyin pangu uRum kavuri manam uruka: with a beaming and divine smile on Her lips, Goddess UmA, concorporate on the left side of our father Lord SivA, had her heart melting;

oru kangai kaNdu anpuRum thiru aruNai kiri maruvu sankaran kumpidum thambirAnE.: the matchless River Gangai was looking admiringly at (the dance of) Lord SivA seated in ThiruvaNNAmalai; and He worships You, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 422 sinamuduval narikazhugu - thiruvaruNai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]