திருப்புகழ் 421 சிவமாதுடனே  (திருவருணை)
Thiruppugazh 421 sivamAthudanE  (thiruvaruNai)
Thiruppugazh - 421 sivamAthudanE - thiruvaruNaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

mp3
 
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனனா தனனா தனனா தனனா
     தனனா தனனா ...... தனதான

......... பாடல் .........

சிவமா துடனே அநுபோ கமதாய்
     சிவஞா னமுதே ...... பசியாறித்

திகழ்வோ டிருவோ ரொருரூ பமதாய்
     திசைலோ கமெலா ...... மநுபோகி

இவனே யெனமா லயனோ டமரோ
     ரிளையோ னெனவே ...... மறையோத

இறையோ னிடமாய் விளையா டுகவே
     யியல்வே லுடன்மா ...... அருள்வாயே

தவலோ கமெலா முறையோ வெனவே
     தழல்வேல் கொடுபோ ...... யசுராரைத்

தலைதூள் படஏழ் கடல்தூள் படமா
     தவம்வாழ் வுறவே ...... விடுவோனே

கவர்பூ வடிவாள் குறமா துடன்மால்
     கடனா மெனவே ...... அணைமார்பா

கடையேன் மிடிதூள் படநோய் விடவே
     கனல்மால் வரைசேர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சிவமா துடனே ... சிவம் என்கின்ற தலைவியுடன்

அநுபோ கமதாய் ... இன்ப நுகர்ச்சி கொண்டவனாக,

சிவஞா னமுதே ... சிவஞானம் என்ற அமுதத்தை உண்டு

பசியாறி ... அதனால் அறிவுப் பசி தீர்ந்து,

திகழ்வோ டிருவோர் ... விளங்கும் 'தலைவன் - தலைவி'
என்ற ஈருருவமும்

ஒருரூபமதாய் ... ஒரே உருவமாய்

திசைலோ கமெலாம் அநுபோகி ... எட்டுத் திசையிலுள்ளவர்
சுகித்து உணர்பவன்

இவனே யெனமா லயனோ டமரோர் ... இவன்தான் என்று
திருமால், பிரமன், தேவர்கள் அனைவரும் கூறி,

இளையோ னெனவே ... இவன் இளையவன் (முருகன்) என
வியந்து கூற,

மறையோத ... வேதமும் அவ்வாறே என்று ஆமோதித்துக் கூற,

இறையோ னிடமாய் ... சிவபிரானிடத்தில் வேண்டி,

விளையா டுகவே ... யான் (உன்னைப் போல்) விளையாடுவதற்காக

இயல்வே லுடன்மா அருள்வாயே ... அழகிய வேலும் மயிலும்
தந்தருள்வாயாக.

தவலோ கமெலாம் ... மிகவும் உலகங்கள் யாவும்

முறையோ வெனவே ... இது முறையாகுமா என்று ஓலமிட,

தழல்வேல் கொடுபோய் ... நெருப்பை வீசும் வேலுடன் சென்று

அசுராரைத் தலைதூள் பட ... அசுரர்களின் தலைகள் பொடிபடும்படி,

ஏழ் கடல்தூள் பட ... ஏழு கடல்களும் தூள்படும்படி,

மாதவம்வாழ் வுறவே ... சிறந்த தவத்தினர் வாழ்வுறுமாறு

விடுவோனே ... அந்த வேலைச் செலுத்தியவனே,

கவர்பூ வடிவாள் ... மனம் கவரும் மலரின் அழகுடையவளும்,

குறமா துடன் ... குறப்பெண்ணும் ஆகிய வள்ளியிடம்

மால் கடனா மெனவே ... ஆசை கொள்வது உன் கடமை என்று

அணைமார்பா ... அவளை அணைந்த மார்பனே,

கடையேன் மிடிதூள் பட ... கடைப்பட்டவனாகிய என் துன்பம்
தூள்படவும்,

நோய் விடவே ... என் நோய் தொலையவும் (அருளி),

கனல்மால் வரைசேர் பெருமாளே. ... அக்கினிப் பெருமலையாம்
திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.287  pg 2.288  pg 2.289  pg 2.290 
 WIKI_urai Song number: 563 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 421 - sivamAthudanE (thiruvaNNAmalai)

siva mAdhudanE anubOgamadhAy
     sivanyAn amudhE ...... pasiyARi

thigazhvOd iruvOr orurUpamadhAy
     thisai lOkam elAm ...... anubOgi

ivanE ena mAl ayanOd amarOr
     iLaiyOn enavE ...... maRai Odha

iRaiyOn idamAy viLaiyAdugavE
     iyal vEl udam mA ...... aruLvAyE

thava Lokam elAm muRaiyO enavE
     thazhal vEl kodupOy ...... asurArai

thalai thUL pada Ezh kadal thUL pada mA
     thavam vAzh uRavE ...... viduvOnE

kavar pU vadivAL kuRamAdhudan mAl
     kadanAm enavE aNai ...... mArbA

kadaiyEn midi thUL pada nOy vidavE
     kanal mAl varai sEr ...... perumALE.

......... Meaning .........

siva mAdhudanE anubOgamadhAy: One that experienced bliss with the Goddess called Sivam

sivanyAn amudhE pasiyARi: and drank the nectar of "Knowledge of SivA" to quench His hunger;

thigazhvOd iruvOr: the dual form of God-Goddess

orurUpamadhAy: was merged into one form; and

thisai lOkam elAm anubOgi: that new form was experienced with relish by people all over the world.

ivanE ena mAl ayanOd amarOr: "It is none other than Him" so said Vishnu, BrahmA and all the DEvAs,

iLaiyOn enavE: "this younger son of God (Murugan) is that person" as they exclaimed;

maRai Odha: the VEdAs also said that it was so.

iRaiyOn idamAy viLaiyAdugavE: In order that I too can play (like You), could You ask SivA

iyal vEl udam mA aruLvAyE: to grant me a beautiful spear and a peacock?

thava Lokam elAm muRaiyO enavE: The entire world screamed that it (SUran's tyranny) was not fair;

thazhal vEl kodupOy: so You took the fiery spear

asurArai thalai thUL pada: and beheaded the demons (asuras).

Ezh kadal thUL pada: The seven seas rose in commotion and

mA thavam vAzh uRavE viduvOne: the great sages were saved when You threw Your spear!

kavar pU vadivAL: With enchanting beauty like a flower

kuRamAdhudan: is the damsel of KuRavas, VaLLi;

mAl kadanAm enavE aNai mArbA: You love her as if duty-bound and embrace her!

kadaiyEn midi thUL pada: For destroying the miseries of this lowly self

nOy vidavE: and removing all my ailments,

kanal mAl varai sEr: You chose the fiery mountain (thiruvaNNAmalai) as Your abode,

perumALE.: Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

mp3
 

Thiru Arunagirinathar's Thiruppugazh - 421 sivamAthudanE - thiruvaruNai


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]