திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 409 கரிமுகக் கடகளிறு (திருவருணை) Thiruppugazh 409 karimugakkadakaLiRu (thiruvaruNai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதனத் தனதனத் தனதனத் தனதனத் தனதனத் தனதனத் ...... தனதான ......... பாடல் ......... கரிமுகக் கடகளிற் றதிககற் பகமதக் கஜமுகத் தவுணனைக் ...... கடியானை கடலையெட் பயறுநற் கதலியிற் கனிபலக் கனிவயிற் றினிலடக் ...... கியவேழம் அரிமுகத் தினனெதிர்த் திடுகளத் தினின்மிகுத் தமர்புரிக் கணபதிக் ...... கிளையோனே அயிலெடுத் தசுரர்வெற் பலைவுறப் பொருதுவெற் றியைமிகுத் தறுமுகக் ...... குமரேசா நரிமிகுக் கிளைகளைப் பரியெனக் கடிவளக் கையில்பிடித் தெதிர்நடத் ...... திடுமீசன் நடனமிப் படியிடத் தினுமிசைத் தரையினிற் கரியுரித் தணிபவற் ...... கொருசேயே துரிபெறச் சரிபொழிற் கனவயற் கழகுளத் துரியமெய்த் தரளமொய்த் ...... திடவீறிச் சுரர்துதித் திடமிகுத் தியல்தழைத் தருணையிற் சுடரயிற் சரவணப் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... கரிமுகக் கடகளிற் றதிககற்பக ... யானை முகத்தையும் மதத்தையும் கொண்ட களிறு, சிறந்த கற்பக விநாயகர், மதக் கஜமுகத்து அவுணனைக் கடியானை ... மதங்கொண்ட யானைமுகத்து கஜமுகாசுரனை அடக்கிய யானை, கடலை எள் பயறு நற் கதலியிற் கனிபலக் கனி ... கடலை, எள், பயறு, நல்ல கதலி வாழைப்பழம், பலாப் பழம் வயிற் றினிலடக்கிய வேழம் ... முதலியவற்றை வயிற்றினில் அடக்கிய யானை, அரிமுகத்தினன் எதிர்த்திடு களத்தினின் ... அழகிய முகத்தை உடையவன், எதிர்த்துச் சண்டைசெய்யும் போர்க்களத்தில் மிகுத்து அமர்புரிக் கணபதிக்கு இளையோனே ... பெரிய போரைச் செய்யும் கணபதிக்குத் தம்பியே, அயிலெடுத்து அசுரர்வெற்பு அலைவுறப் பொருது ... வேலை எடுத்து, அசுரர்களின் கிரெளஞ்ச மலையை அலைக்கழித்துச் சண்டை செய்து, வெற்றியைமிகுத்த அறுமுகக் குமரேசா ... மிக்க ஜயம் கொண்ட ஆறுமுகத்துக் குமரேசனே, நரிமிகுக் கிளைகளைப் பரியென ... நரியின் பெரிய கூட்டங்களை கடிவளக் கையில்பிடித்து எதிர்நடத்திடும் ஈசன் ... கடிவாளத்தைக் கையிலே பிடித்து பாண்டியனின் எதிரே நடத்திய சொக்கேசர் (சிவபிரான்) நடனம் இப் படியிடத் தினும் ... தமது திருவிளையாடலை இந்தப் பூமியிலே நடத்தியவர், இசைத் தரையினில் கரியுரித்து அணிபவற்கு ஒருசேயே ... புகழ் பெற்ற இவ்வுலகில் யானையை உரித்து, அதன் தோலை அணிந்தவரின் ஒப்பற்ற பிள்ளையே, துரிபெறச் சரிபொழிற் கனவயற்கு ... காய்கனிகளின் சுமையால் சரிந்த மரங்கள் உள்ள சோலைகளிலும், பெருமை வாய்ந்த வயல்களிலும், அழகுள துரியமெய்த் தரளமொய்த்திட ... அழகுள்ள தூய்மையான உருவைக்கொண்ட முத்துக்கள் நெருங்கிக் கிடக்க, வீறிச் சுரர்துதித்திட மிகுத் தியல்தழைத்த ... மிக்கெழுந்து தேவர்கள் துதிசெய்ய, பிரபலமாக இருக்கும் தலமாம் அருணையிற் சுடர் அயிற் சரவணப் பெருமாளே. ... திருவண்ணாமலையில் ஒளிவீசும் வேலுடன் விளங்கும் சரவணப் பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.259 pg 2.260 pg 2.261 pg 2.262 WIKI_urai Song number: 551 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
Song 409 - karimugak kadakaLiRu (thiruvaNNAmalai) karimuka kadakaLitr adhiga kaRpaga madha gajamugath thavuNanai ...... kadiyAnai kadalai etpayaRu naRkadhaliyiR kanipala kani vayitrinil adakkiya ...... vEzham arimugaththinan edhirththidu kaLaththinin miguth amarpuri gaNapathikku ...... iLaiyOnE ayil eduth thasurar veRpalai uRapporudhu ve triyai miguth aRumuga ...... kumarEsA narimiguk kiLaigaLai pariyena kadivaLak kaiyil pidiththu edhir nadaththidum ...... eesan natanamip padi idaththinum isai tharaiyinil kariyurith aNibavark ...... orusEyE thuri peRa saripozhiR ganavayal azhaguLath thuriya meyth tharaLa moyth ...... thidaveeRi surar thudhiththida miguth iyal thazhaith aruNaiyil sudarayil saravaNa ...... perumALE. ......... Meaning ......... karimuka kadakaLitr adhiga kaRpaga: He has an elephant's face and fierceness; he is the great KaRpaga (wish-yielding) VinAyagar; madha gajamugath thavuNanai kadiyAnai: He is the elephant that conquered the elephant-faced ferocious demon, GajamukAsuran; kadalai etpayaRu naRkadhaliyiR kanipala kani: peanuts, sesame-seed, lentils, delicious plantains and jack fruit vayitrinil adakkiya vEzham: are filled up in the pot-belly of this Elephant; arimugaththinan: He has a pretty face; edhirththidu kaLaththinin miguth amarpuri gaNapathikku iLaiyOnE: He fights ably in the battlefield when opponents confront Him; He is Lord Ganapathi, and You are His younger brother! ayil eduth thasurar veRpalai uRapporudhu: You wielded the spear and fought against the demons' mount Krouncha making it tremble; vetriyai miguth aRumuga kumarEsA: You achieved great victory, Oh Lord Kumara with six faces! narimiguk kiLaigaLai pariyena: He converted a herd of foxes into horses kadivaLak kaiyil pidiththu edhir nadaththidum eesan: and led them holding by their harnesses (in front of King PANdiyan); He is Lord SokkEsan (SivA); natanamip padi idaththinum: He carried out His divine sport on this earth; and further, He fought with an elephant-demon in this world, isai tharaiyinil kariyurith aNibavark orusEyE: peeled off its hide and wore it around His waist; and You are His matchless child! thuri peRa saripozhiR ganavayal: In the groves around here, which are slanted due to the weighty fruits, and in the famous fields, azhaguLath thuriya meyth tharaLa moyththida: beautiful and pure pearls are found abundantly; veeRi surar thudhiththida: the celestials worship You ardently here; miguth iyal thazhaith aruNaiyil sudarayil saravaNa perumALE.: This is the famous place, ThiruvaNNAmalai, where You stand with Your dazzling Spear, Oh Saravana, the Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |