திருப்புகழ் 392 அருக்கார் நலத்தை  (திருவருணை)
Thiruppugazh 392 arukkArnalaththai  (thiruvaruNai)
Thiruppugazh - 392 arukkArnalaththai - thiruvaruNaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனத்தா தனத்தத் தனத்தா தனத்தத்
     தனத்தா தனத்தத் ...... தனதான

......... பாடல் .........

அருக்கார் நலத்தைத் திரிப்பார் மனத்துக்
     கடுத்தாசை பற்றித் ...... தளராதே

அடற்கா லனுக்குக் கடைக்கால் மிதித்திட்
     டறப்பே தகப்பட் ...... டழியாதே

கருக்காரர் நட்பைப் பெருக்கா சரித்துக்
     கலிச்சா கரத்திற் ...... பிறவாதே

கருத்தா லெனக்குத் திருத்தா ளளித்துக்
     கலைப்போ தகத்தைப் ...... புகல்வாயே

ஒருக்கால் நினைத்திட் டிருக்கால் மிகுத்திட்
     டுரைப்பார்கள் சித்தத் ...... துறைவோனே

உரத்தோ ளிடத்திற் குறத்தேனை வைத்திட்
     டொளித்தோடும் வெற்றிக் ...... குமரேசா

செருக்கா தருக்கிச் சுரச்சூர் நெருக்கச்
     செருச்சூர் மரிக்கப் ...... பொரும்வேலா

திறப்பூ தலத்திற் றிரட்சோண வெற்பிற்
     றிருக்கோ புரத்திற் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

அருக்கார் நலத்தை திரிப்பார் மனத்துக்கு ... அருமை வாய்ந்த
(உடல்) நலத்தைக் கெடுப்பவர்களான விலைமாதர்களுடைய மனத்துக்கு

அடுத்த ஆசை பற்றித் தளராதே ... இயைந்த ஆசை கொண்டு
சோர்வு அடையாமல்,

அடல் காலனுக்கு கடைக் கால் மிதித்திட்டு ... வலிமை வாய்ந்த
யமனுக்கு என் அந்திம காலத்தில் (உயிரைக் கொள்வதற்கு வேண்டிய)
உரிமையை மிதித்திட்டு,

அறப் பேதகப் பட்டு அழியாதே ... மிகவும் மனம் வேறு பாடு
அடைந்து நான் அழியாமலும்,

கருக்காரர் நட்பை பெருக்கா சரித்து ... பிறவிக்கு காரணமான
செய்கையோரது நட்பை மிகக் கொண்டாடிக் கைக்கொண்டு,

கலிச் சாகரத்தில் பிறவாதே ... துன்பக் கடலில் நான் பிறவாமலும்,

கருத்தால் எனக்குத் திருத் தாள் அளித்து ... நீ என் மீது அன்பு
வைத்து உனது திருவடியைத் தந்து,

கலைப் போதகத்தைப் புகல்வாயே ... கலை ஞானத்தை எனக்கு
உபதேசிப்பாயாக.

ஒருக்கால் நினைத்திட்டு இருக்கால் மிகுத்திட்டு
உரைப்பார்கள்
... ஒரு முறை உன்னைத் தியானித்து (உனது) இரண்டு
திருவடிகளையும் வெகுவாகப் புகழ்ந்து உரைப்பவர்களுடைய

சித்தத்து உறைவோனே ... மனதில் உறைபவனே,

உரத் தோள் இடத்தில் குறத் தேனை வைத்திட்டு ...
வலிமையான தோளில் தேன்போல் இனிய குறப்பெண்ணான வள்ளியை
வைத்து,

ஒளித்து ஓடும் வெற்றிக் குமரேசா ... மறைந்து ஓடின வெற்றி
பொருந்திய குமரேசனே,

செருக்கால் தருக்கி சுரச் சூர் நெருக்கு ... ஆணவம் கொண்டு,
கர்வம் மிகுந்து, தெய்வத் தன்மை உடைய தேவர்களை ஒடுக்கிய

அச் செருச் சூர் மரிக்கப் பொரும் வேலா ... போருக்கு வந்த
அந்தச் சூரன் இறக்க சண்டை செய்த வேலனே,

திறப் பூதலத்தில் திரள் சோண வெற்பில் ... நிலை பெற்ற
பூமியில் திரண்ட திரு அண்ணாமலையில்

திருக் கோபுரத்தில் பெருமாளே. ... அழகிய கோபுரத்தில்
வீற்றிருக்கும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.225  pg 2.226 
 WIKI_urai Song number: 534 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 392 - arukkAr nalaththai (thiruvaNNAmalai)

arukkAr nalaththaith thirippAr manaththuk
     kaduththAsai patRith ...... thaLarAthE

adaRkA lanukkuk kadaikkAl mithiththit
     taRappE thakappat ...... tazhiyAthE

karukkArar natpaip perukkA sariththuk
     kaliccA karaththiR ...... piRavAthE

karuththA lenakkuth thiruththA LaLiththuk
     kalaippO thakaththaip ...... pukalvAyE

orukkAl ninaiththit tirukkAl mikuththit
     turaippArkaL siththath ...... thuRaivOnE

uraththO LidaththiR kuRaththEnai vaiththit
     toLiththOdum vetRik ...... kumarEsA

serukkA tharukkic curaccUr nerukkac
     cseruccUr marikkap ...... porumvElA

thiRappU thalaththiR RiratcONa veRpiR
     RirukkO puraththiR ...... perumALE.

......... Meaning .........

arukkAr nalaththaith thirippAr: These whores spoil my good health;

manaththuk kaduththAsai patRith thaLarAthE: I do not want to lose my heart to them and suffer from lust.

adaRkA lanukkuk kadaikkAl mithiththitu: I cannot deny the right of the powerful Yaman (God of Death) to take my life,

aRappE thakappat tazhiyAthE: nor do I wish to unduly suffer with a distressed mind.

karukkArar natpaip perukkA sariththuk: I do not want to befriend those who are responsible for my repeated births

kaliccA karaththiR piRavAthE: and I wish to avoid falling into the sea of misery.

karuththA lenakkuth thiruththA LaLiththuk: Kindly have mercy on me by granting Your hallowed feet

kalaippO thakaththaip pukalvAyE: and the wisdom of realising the True Knowledge.

orukkAl ninaiththit tirukkAl mikuththit turaippArkaL siththath thuRaivOnE: You dwell in the heart of those who meditate on You even only once and praise Your two holy feet!

uraththO LidaththiR kuRaththEnai vaiththittu: On Your strong shoulders You placed VaLLi, the honey-like sweet damsel of the KuRavAs, and

oLiththOdum vetRik kumarEsA: eloped with her successfully, Oh Kumara!

serukkA tharukkic curaccUr nerukku: He was arrogant and proud; He strangled the divine celestials;

acceruccUr marikkap porumvElA: That SUran came to challenge You on the battlefield only to be killed by You, Oh Warrior with the Spear!

thiRappU thalaththiR RiratcONa veRpiR: In this stable world is this huge Mount ChoNAchalam (thiruvaNNAmalai)

RirukkO puraththiR perumALE.: whose elegant temple tower is Your abode, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 392 arukkAr nalaththai - thiruvaruNai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]