திருப்புகழ் 391 கெஜ நடை மடவார்  (திருவருணை)
Thiruppugazh 391 gejanadaimadavAr  (thiruvaruNai)
Thiruppugazh - 391 gejanadaimadavAr - thiruvaruNaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தனனா தனதன தனனா
     தனதன தனனா ...... தனதான

......... பாடல் .........

கெஜநடை மடவார் வசமதி லுருகா
     கிலெசம துறுபாழ் ...... வினையாலே

கெதிபெற நினையா துதிதனை யறியா
     கெடுசுக மதிலாழ் ...... மதியாலே

தசையது மருவீ வசையுட லுடனே
     தரணியில் மிகவே ...... யுலைவேனோ

சததள மலர்வார் புணைநின கழலார்
     தருநிழல் புகவே ...... தருவாயே

திசைமுக வனைநீள் சிறையுற விடுவாய்
     திருநெடு கருமால் ...... மருகோனே

திரிபுர தகனா ரிடமதில் மகிழ்வார்
     திரிபுரை யருள்சீர் ...... முருகோனே

நிசிசர ருறைமா கிரியிரு பிளவா
     நிறையயில் முடுகா ...... விடுவோனே

நிலமிசை புகழார் தலமெனு மருணா
     நெடுமதில் வடசார் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கெஜ நடை மடவார் வசம் அதில் உருகா ... (பெண்) யானையின்
நடையைக் கொண்ட பொது மகளிருக்கு மனம் வசப்பட்டு,

கிலெசம் அது உறு பாழ் வினையாலே கெதி பெற நினையா
துதி தனை அறியா
... வருத்தம் தருகின்ற பாழான வினைப் பயனால்,
நல்ல கதியை அடைவதற்கு நினையாமலும், உன்னைத் துதிப்பதை
அறியாமலும்,

கெடு சுகம் அதில் ஆழ் மதியாலே தசை அது மருவீ வசை
உடல் உடனே தரணியில் மிகவே உலைவேனோ
... அழிவைத்
தரும் சிற்றின்பத்தில் ஆழ்ந்து போகின்ற புத்தியினால், சதையைக்
கொண்டதும், பழிப்புக்கு இடமானதுமான உடலுடன் பூமியில் மிகவும்
அலைவேனோ?

சத தள மலர் வார் புணை நின கழலார் தரு நிழல் புகவே
தருவாயே
... நூறு இதழ்களை உடைய தாமரை போன்றதும், பிறவிக்
கடலைத் தாண்டத் தெப்பம் போன்றதுமான உனது திருவடி நிரம்பத்
தருகின்ற நிழலில் வந்தடைய அருள்வாயாக.

திசை முகவனை நீள் சிறை உற விடுவாய் திரு நெடு கரு
மால் மருகோனே
... நான்முகனான பிரமனை பெரிய சிறைக்குள் புக
வைத்தவனே, அழகிய பெரிய கரிய நிறம் கொண்ட திருமாலின் மருகனே,

திரி புர தகனார் இடம் அதில் மகிழ்வார் திரி புரை அருள்
சீர் முருகோனே
... திரிபுரங்களையும் நெருப்பிட்டு அழித்த
சிவபெருமானுடைய இடது பாகத்தில் மகிழ்ந்திருக்கும் திரிபுரையாகிய
பார்வதி ஈன்ற சிறப்பான குழந்தையே,

நிசிசரர் உறை மா கிரி இரு பிளவா நிறை அயில் முடுகா
விடுவோனே
... அசுரர்கள் இருந்த பெரிய கிரெளஞ்ச மலை இரண்டு
பிளவாகும்படி வீரம் நிறைந்த வேலை வேகத்துடன் செலுத்தியவனே,

நிலம் மிசை புகழ் ஆர் தலம் எனும் அருணா நெடு மதில் வட
சார் பெருமாளே.
... பூமியில் புகழ் நிறைந்த தலம் என்னும் பேர் பெற்ற
திருவண்ணாமலையில் பெரிய மதிலின் வடப் புறத்தே வீற்றிருக்கும்
பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.223  pg 2.224 
 WIKI_urai Song number: 533 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 391 - geja nadai madavAr (thiruvaNNAmalai)

kejanadai madavAr vasamathi lurukA
     kilesama thuRupAzh ...... vinaiyAlE

kethipeRa ninaiyA thuthithanai yaRiyA
     kedusuka mathilAzh ...... mathiyAlE

thasaiyathu maruvee vasaiyuda ludanE
     tharaNiyil mikavE ...... yulaivEnO

sathathaLa malarvAr puNainina kazhalAr
     tharunizhal pukavE ...... tharuvAyE

thisaimuka vanaineeL siRaiyuRa viduvAy
     thirunedu karumAl ...... marukOnE

thiripura thakanA ridamathil makizhvAr
     thiripurai yaruLseer ...... murukOnE

nisisara ruRaimA kiriyiru piLavA
     niRaiyayil mudukA ...... viduvOnE

nilamisai pukazhAr thalamenu maruNA
     nedumathil vadasAr ...... perumALE.

......... Meaning .........

keja nadai madavAr vasam athil urukA: Being captivated by the whores who walk with the gait of a (female) elephant,

kilesam athu uRu pAzh vinaiyAlE kethi peRa ninaiyA thuthi thanai aRiyA: being prompted by the wretched fate that leads to misery, being totally thoughtless about attaining liberation and not knowing how to pray to You,

kedu sukam athil Azh mathiyAlE thasai athu maruvee vasai udal udanE tharaNiyil mikavE ulaivEnO: would I let my mind delve into thoughts of carnal pleasure that are destructive, and am I to roam about in this world for long carrying this burden of my body, a mass of flesh, that is subject to scornful ridicule?

satha thaLa malar vAr puNai nina kazhalAr tharu nizhal pukavE tharuvAyE: Kindly bless me to enter the shade of Your hallowed feet, which resemble the hundred-petalled lotus, being the only raft by which I could cross the ocean of birth!

thisai mukavanai neeL siRai uRa viduvAy thiru nedu karu mAl marukOnE: The four-faced God BrahmA was shackled into a large prison by You; and You are the nephew of Lord VishNu, with a lovely and deep dark complexion!

thiri pura thakanAr idam athil makizhvAr thiri purai aruL seer murukOnE: You are the renowned child of Thiripurai (PArvathi), who is happily concorporate on the left side of the body of SivA who burnt down Thiripuram!

nisisarar uRai mA kiri iru piLavA niRai ayil mudukA viduvOnE: You wielded the spear so forcefully that the Mount Krouncha, where the demons resided, was split into two!

nilam misai pukazh Ar thalam enum aruNA nedu mathil vada sAr perumALE.: This place is very famous in this world, and in this town of ThiruvaNNAmalai, You have taken a seat in the northern side of the large wall, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 391 geja nadai madavAr - thiruvaruNai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]