திருப்புகழ் 385 உருகும் மாமெழுகாக  (திருவருணை)
Thiruppugazh 385 urugummAmezhugAga  (thiruvaruNai)
Thiruppugazh - 385 urugummAmezhugAga - thiruvaruNaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தானன தானன தானன
     தனன தானன தானன தானன
          தனன தானன தானன தானன ...... தனதான

......... பாடல் .........

உருகு மாமெழு காகவு மேமயல்
     பெருகு மாசையு ளாகிய பேர்வரி
          லுரிய மேடையில் வார்குழல் நீவிய ...... வொளிமானார்

உடைகொள் மேகலை யால்முலை மூடியும்
     நெகிழ நாடிய தோதக மாடியு
          முவமை மாமயில் போல்நிற மேனிய ...... ருரையாடுங்

கரவ தாமன மாதர்கள் நீள்வலை
     கலக வாரியில் வீழடி யேநெறி
          கருதொ ணாவதி பாதக னேசம ...... தறியாத

கசட மூடனை யாளவு மேயருள்
     கருணை வாரிதி யேயிரு நாயகி
          கணவ னேயுன தாளிணை மாமலர் ...... தருவாயே

சுருதி மாமொழி வேதியன் வானவர்
     பரவு கேசனை யாயுத பாணிநல்
          துளப மாலையை மார்பணி மாயவன் ...... மருகோனே

தொலைவி லாவசு ரேசர்க ளானவர்
     துகள தாகவு மேயெதி ராடிடு
          சுடரின் வேலவ னேயுல கேழ்வலம் ...... வருவோனே

அருணர் கோடியி னாரொளி வீசிய
     தருண வாண்முக மேனிய னேயர
          னணையு நாயகி பாலக னேநிறை ...... கலையோனே

அணிபொன் மேருயர் கோபுர மாமதி
     லதிரு மாரண வாரண வீதியு
          ளருணை மாநகர் மேவியு லாவிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

உருகும் மா மெழுகாகவுமே மயல் பெருகும் ஆசை
உ(ள்)ளாகிய பேர் வரில்
... உருகி ஒழுகும் பெரிய மெழுகு போல
மோகம் அதிகமாகி காமத்தில் வசப்பட்ட பேர்வழிகள் (பொது மகளிர்
இல்லம்) வந்தால்,

உரிய மேடையில் வார் குழல் நீவிய ஒளி மானார் ... நல்ல
மெத்தை மேடையில் இருந்து தமது நீண்ட கூந்தலை விரித்து வேகமாக
வாரிக் கொள்ளும் அழகிய விலைமாதர்கள்,

உடை கொள் மேகலையால் முலை மூடியும் நெகிழ நாடிய
தோதகம் ஆடியும்
... உடையாகக் கொண்டுள்ள மேல் ஆடையால்
மார்பகங்களை மூடியும், அந்த ஆடை நெகிழும்படியாக வேண்டுமென்றே
வஞ்சனையான ஆடல்களை ஆடியும்

உவமை மாமயில் போல் நிற மேனியர் உரை ஆடும் கரவு அது
ஆம் மன மாதர்கள்
... உவமை கூறப்படும் சிறந்த மயில் போன்ற நிறம்
கொண்ட உடலை உடையவர்களும், பேசுவதிலேயே மறைமுகமாக
கருத்தை அமைக்கும் மனத்தை உடையவர்களுமான விலைமாதர்களின்

நீள் வலை கலக வாரியில் வீழ் அடியேன் நெறி கருத ஒணா
அதி பாதகன்
... பெரிய வலையாகிய சச்சரவுக் கடலில் வீழ்கின்ற
அடியேனாகிய நான் நன்னெறியைக் கருதமாட்டாத அதி பாதகச் செயல்
புரிபவன்.

நேசமது அறியாத கசட மூடனை ஆளவுமே அருள் கருணை
வாரிதியே
... அன்பு என்பதையே அறியாத குற்றமுள்ள முட்டாளாகிய
என்னையும் ஆட்கொண்டு அருளிய கருணைக் கடலே,

இரு நாயகி கணவனே உனது தாளிணை மாமலர் தருவாயே ...
வள்ளி, தேவயானை என்ற இரண்டு நாயகிகளின் கணவனே, உனது இரு
தாமரைத் திருவடிகளைத் தந்து அருளுக.

சுருதி மா மொழி வேதியன் வானவர் பரவு கேசன் ஐ
ஆயுதபாணி
... வேதங்களின் சிறந்த மொழிகளை ஓதும் அந்தணனாகிய
பிரமன், தேவர்கள் ஆகியோர் போற்றும் கேசவன், ஐந்து வகையான
ஆயுதங்களை* ஏந்தியவன்,

நல் துளப மாலையை மார்பு அணி மாயவன் மருகோனே ...
நல்ல துளசி மாலையை மார்பில் அணிந்துள்ள மாயவனாகிய திருமாலின்
மருகனே,

தொலைவு இலா அசுரேசர்கள் ஆனவர் துகளதாகவுமே எதிர்
ஆடிடு சுடரின் வேலவனே உலகு ஏழ் வலம் வருவோனே
...
அழிவில்லாததாக தம்மை எண்ணிக்கொண்ட அசுரர்கள் தலைவர்களான
சூரன், தாரகன், சிங்கமுகன் ஆகியவர் பொடிபடும்படி எதிர்த்துப் போர்
புரிந்த ஒளி வீசும் வேலாயுதனே, ஏழு உலகங்களையும் (மயில் மேல் ஏறி)
வலம் வருபவனே,

அருணர் கோடியினார் ஒளி வீசிய தருண வாள் முக
மேனியனே
... கோடிக் கணக்கான சூரியர்களின் சுடர் வீசும் இளமை
பொருந்திய ஒளி விளங்கும் முகங்கள் கொண்ட மேனியனே,

அரன் அணையு நாயகி பாலகனே நிறை கலையோனே ...
சிவபெருமான் அணையும் உமா தேவியின் குழந்தையே, நிறைந்த
கலைப் புலவனே,

அணி பொன் மேரு உயர் கோபுரம் மாமதில் அதிரும் ஆரணம்
வாரண வீதியுள
... அழகிய பொன் மலை போல் உயர்ந்த கோபுரம்,
பெரிய மதில், ஒலிபெருகும் வேதங்கள் முழங்கும் வீதி, யானைகள் செல்லும்
தெருக்கள் இவைகள் உள்ள

அருணை மா நகர் மேவி உலாவிய பெருமாளே. ...
திருவண்ணாமலையாகிய சிறந்த நகரில் விரும்பி உலவும் பெருமாளே.


* திருமாலின் பஞ்ச ஆயுதங்கள்:

சங்கம், சக்கரம், கதை, சார்ங்கம், வாள் (கட்கம்) ஆகியவை.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.213  pg 2.214  pg 2.215  pg 2.216 
 WIKI_urai Song number: 527 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 385 - urugum mAmezhugAga (thiruvaNNAmalai)

uruku mAmezhu kAkavu mEmayal
     peruku mAsaiyu LAkiya pErvari
          luriya mEdaiyil vArkuzhal neeviya ...... voLimAnAr

udaikoL mEkalai yAlmulai mUdiyum
     nekizha nAdiya thOthaka mAdiyu
          muvamai mAmayil pOlniRa mEniya ...... ruraiyAdung

karava thAmana mAtharkaL neeLvalai
     kalaka vAriyil veezhadi yEneRi
          karutho NAvathi pAthaka nEsama ...... thaRiyAtha

kasada mUdanai yALavu mEyaruL
     karuNai vArithi yEyiru nAyaki
          kaNava nEyuna thALiNai mAmalar ...... tharuvAyE

suruthi mAmozhi vEthiyan vAnavar
     paravu kEsanai yAyutha pANinal
          thuLapa mAlaiyai mArpaNi mAyavan ...... marukOnE

tholaivi lAvasu rEsarka LAnavar
     thukaLa thAkavu mEyethi rAdidu
          sudarin vElava nEyula kEzhvalam ...... varuvOnE

aruNar kOdiyi nAroLi veesiya
     tharuNa vANmuka mEniya nEyara
          naNaiyu nAyaki pAlaka nEniRai ...... kalaiyOnE

aNipon mEruyar kOpura mAmathi
     lathiru mAraNa vAraNa veethiyu
          LaruNai mAnakar mEviyu lAviya ...... perumALE.

......... Meaning .........

urukum mA mezhukAkavumE mayal perukum Asai u(L)LAkiya pEr varil: Like a large candle melting down, some men obsessed with extreme passion visit here (the whorehouse);

uriya mEdaiyil vAr kuzhal neeviya oLi mAnAr: when they come, the beautiful whores stand in the elegant balcony spreading out their long hair and begin to comb vigorously;

udai koL mEkalaiyAl mulai mUdiyum nekizha nAdiya thOthakam Adiyum: they pretend to cover their bosom hurriedly with their upper garment and then they deliberately drop that cloth in a provocative and playful gesture;

uvamai mAmayil pOl niRa mEniyar urai Adum karavu athu Am mana mAtharkaL: they have lovely bodies with complexion comparable to the great peacock; for their speech, they choose very suggestive words with ulterior motive;

neeL valai kalaka vAriyil veezh adiyEn neRi karutha oNA athi pAthakan: I fell into the wide problematic net spread by these whores drowning in a sea of turmoil; without ever thinking of the righteous path, I strayed off, committing heinous sins.

nEsamathu aRiyAtha kasada mUdanai ALavumE aruL karuNai vArithiyE: You are the great sea of compassion who graciously took charge of me although I am a wicked fool devoid of any love!

iru nAyaki kaNavanE unathu thALiNai mAmalar tharuvAyE: You are the consort of the two great Goddesses, VaLLi and DEvayAnai! Kindly grant me Your hallowed lotus feet!

suruthi mA mozhi vEthiyan vAnavar paravu kEsan ai AyuthapANi: He is KEsavan, worshipped by the great Brahmin, Brahama, who chants the VEdic hymns, and by other celestials; He holds in His hands five* kinds of weapons;

nal thuLapa mAlaiyai mArpu aNi mAyavan marukOnE: He wears the fine garland of ThuLasi on His chest; He is the mystic Lord VishNu, and You are His nephew, Oh Lord!

tholaivu ilA asurEsarkaL Anavar thukaLathAkavumE ethir Adidu sudarin vElavanE ulaku Ezh valam varuvOnE: SUran, ThArakan and Singamukan, who considered themselves as the immortal leaders of the demons, were shredded to pieces by Your aggressively fighting bright spear, Oh Lord! You mounted the peacock and went around the seven worlds!

aruNar kOdiyinAr oLi veesiya tharuNa vAL muka mEniyanE: Your youthful and dazzling faces on Your great body radiate like millions of suns!

aran aNaiyu nAyaki pAlakanE niRai kalaiyOnE: You are the child of UmAdEvi embraced by Lord SivA! You are the consummate poet of all arts!

aNi pon mEru uyar kOpuram mAmathil athirum AraNam vAraNa veethiyuL: This town has beautiful temple towers tall as golden mountain, high fortress-walls, resounding streets where VEdAs are chanted and wide avenues along which elephants go in procession;

aruNai mA nakar mEvi ulAviya perumALE.: You stroll happily in this great place, ThiruvaNNAmalai, Oh Great One!


* Lord VishNu's five weapons are:

conch shell, disc, mace, the bow-sArangkam and the sword - katkam.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 385 urugum mAmezhugAga - thiruvaruNai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]