திருப்புகழ் 370 துகிலு ம்ருகமத  (திருவருணை)
Thiruppugazh 370 thugilumrugamadha  (thiruvaruNai)
Thiruppugazh - 370 thugilumrugamadha - thiruvaruNaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

......... பாடல் .........

துகிலு ம்ருகமத பரிமள அளகமு
     நெகிழ இருதன கிரியசை தரஇடை
          துவள மனிதரு மமரரு முநிவரு ...... முடனோடித்

தொடர வனமணி மகரமி லகுகுழை
     யடரு வனவிட மிளிர்வன ரதிபதி
          சுருதி மொழிவன கயல்விழி புரள்தர ...... நடுவாக

வகிரு மதிபுரை தநுநுதல் பனிவர
     வனச பதயுக பரிபுர மொலிபட
          மறுகு தொறுமுல வியினிய கலவியை ...... விலைகூறும்

வரைவி லரிவையர் தருசுக சலதியி
     லலையு மெனதுயி ரநுதின நெறிதரு
          மவுன சிவசுக சலதியில் முழுகுவ ...... தொருநாளே

முகிலு மதியமும் ரவியெழு புரவியு
     நெடிய குலைமிட றிடறமு துககன
          முகடு கிழிபட வளர்வன கமுகின ...... மிசைவாளை

முடுகு கயலுகள் வயல்களு முருகவிழ்
     தடமு முளரிய அகழியு மதிள்களு
          முழுது முடையதொ ரருணையி லுறைதரு ...... மிளையோனே

அகிலு மருதமு முகுளித வகுளமு
     மமுத கதலியும் அருணமும் வருடையு
          மபரி மிதமத கரிகளு மரிகளு ...... முடனேகொண்

டருவி யிழிதரு மருவரை தனிலொரு
     சவர வனிதையை முநிதரு புனிதையை
          அவச முடன்மல ரடிதொழு துருகிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

துகிலு(ம்) ம்ருகமத பரிமள அளகமு(ம்) நெகிழ இரு தன
கிரி அசை தர இடை துவள மனிதரும் அமரரும் முநிவரும்
உடன் ஓடித் தொடர
... ஆடையும், கஸ்தூரி ஆகிய நறு மணம் கமழும்
கூந்தலும் நெகிழ்ந்து குலையவும், இரண்டு மலை போன்ற மார்பகங்கள்
அசையவும், இடுப்பு துவளவும், மனிதரும், தேவர்களும், முனிவர்களும்
கூடவே ஓடி வந்து தொடரவும்,

வன மணி மகரம் இலகு குழை அடருவன விட மிளிர்வன
ரதி பதி சுருதி மொழிவன கயல் விழி புரள் தர
... அழகு
மணியால் ஆகிய மகர மீன் போல் விளங்கும் குண்டலங்களை
தாக்குவனவாய், விஷம் பொலிவனவாய், ரதியின் கணவனான
மன்மதனுடைய காம சூத்திரத்தை எடுத்துக் கூறுவனவாய், கயல் மீனை
ஒத்த கண்கள் புரளவும்,

நடுவாக வகிரு(ம்) மதி புரை தநு நுதல் பனிவர வனச பத
யுக பரிபுரம் ஒலி பட
... மத்தியில் கீறு பட்ட நிலவை ஒத்த, வில்லைப்
போன்ற நெற்றி வியர்வுத் துளிகளைத் துளிக்கவும், தாமரை போன்ற
இரண்டு திருவடிகளிலும் சிலம்பு ஒலிக்கவும்,

மறுகு தொறும் உலவி இனிய கலவியை விலை கூறும்
வரைவு இல் அரிவையர் தரு சுக சலதியில் அலையும் எனது
உயிர்
... தெருக்கள் தோறும் உலாவி புணர்ச்சி இன்பத்தை விலை
கூறுகின்ற அளவில்லாத பொது மகளிர் கொடுக்கும் கலவி இன்பக்
கடலில் அலைகின்ற என்னுடைய உயிர்,

அநுதின(ம்) நெறி தரு மவுன சிவசுக சலதியில் முழுகுவது
ஒரு நாளே
... நாள் தோறும் நன்னெறியில் செலுத்தும் மெளன சிவ
சுகக் கடலில் திளைத்து முழுகும்படியான பாக்கியம்
கொண்டதாகிய நாள்
ஒன்று வருமோ?

முகிலு(ம்) மதியமும் ரவி எழு புரவியு(ம்) நெடிய குலை
மிடறு இடற முது ககன முகடு கிழிபட
... மேகமும், நிலவும்,
சூரியனின் ஏழு குதிரைகளும் தமது நீண்ட குலைகளின் கழுத்து
பாகத்தில் இடறுண்ணவும், பழைய ஆகாய உச்சி கிழி படவும்,

வளர்வன கமுகு இன(ம்) மிசை வாளை முடுகு கயலுகள்
வயல்களும் முருகு அவிழ் தடமு(ம்) முளரியும் அகழியும்
மதில்களும் முழுதும் உடையது ஒர் அருணையில் உறை
தரும் இளையோனே
... உயர்ந்து வளர்ந்துள்ள கமுகு மரங்கள்
கூட்டத்தின் மேல் பாயும் வாளை மீன்களும் (அவைகளால்)
விரட்டப்படும் கயல் மீன்களும் ஓடித் திரியும் வயல்களும், நறு
மணம் வீசும் குளங்களும் தாமரை மலர்கள் விளங்கும்
அகழிகளும், மதில்களும் இவை எல்லாம் உடையதான ஒப்பற்ற
திருவண்ணாமலையில் வீற்றிருக்கின்ற இளையவனே,

அகிலும் மருதமும் முகளித வகுளமும் அமுத கதலியும்
அருணமும் வருடையும் அபரிமித மத கரிகளும் அரிகளும்
உடனே கொண்ட அருவி இழி தரும் அரு வரை தனில்
...
அகில், மருதம், மலர் விடும் மகிழ மரம், அமுதம் போல் இனிக்கும்
வாழை மரம் ஆகியவைகளும், செம்மறி ஆடும், மலை ஆடும்,
கணக்கற்ற மத யானைகளும், குரங்குகளும், உடனே
இழுபட்டுவரப் பாயும் அருவிகள் இறங்கி வரும் அருமையான
(வள்ளி) மலையில்,

ஒரு சவர வனிதையை முநி தரு புனிதையை அவசமுடன்
மலர் அடி தொழுது உருகிய பெருமாளே.
... ஒப்பற்ற வேடுவப்
பெண்ணும், சிவ முனிவர் தவத்தே வந்த பரிசுத்தமான நங்கையுமாகிய
வள்ளியை தன்வசமிழந்த ஆசையுடன் திருவடிகளைத் தொழுது
மனமுருகும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.177  pg 2.178  pg 2.179  pg 2.180 
 WIKI_urai Song number: 512 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 370 - thugilu mrugamadha (thiruvaNNAmalai)

thukilu mrukamatha parimaLa aLakamu
     nekizha iruthana kiriyasai tharaidai
          thuvaLa manitharu mamararu munivaru ...... mudanOdith

thodara vanamaNi makarami lakukuzhai
     yadaru vanavida miLirvana rathipathi
          suruthi mozhivana kayalvizhi puraLthara ...... naduvAka

vakiru mathipurai thanunuthal panivara
     vanasa pathayuka paripura molipada
          maRuku thoRumula viyiniya kalaviyai ...... vilaikURum

varaivi larivaiyar tharusuka salathiyi
     lalaiyu menathuyi ranuthina neRitharu
          mavuna sivasuka salathiyil muzhukuva ...... thorunALE

mukilu mathiyamum raviyezhu puraviyu
     nediya kulaimida RidaRamu thukakana
          mukadu kizhipada vaLarvana kamukina ...... misaivALai

muduku kayalukaL vayalkaLu murukavizh
     thadamu muLariya akazhiyu mathiLkaLu
          muzhuthu mudaiyatho raruNaiyi luRaitharu ...... miLaiyOnE

akilu maruthamu mukuLitha vakuLamu
     mamutha kathaliyum aruNamum varudaiyu
          mapari mithamatha karikaLu marikaLu ...... mudanEkoN

daruvi yizhitharu maruvarai thaniloru
     savara vanithaiyai munitharu punithaiyai
          avasa mudanmala radithozhu thurukiya ...... perumALE.

......... Meaning .........

thukilu(m) mrukamatha parimaLa aLakamu(m) nekizha iru thana kiri asai thara idai thuvaLa manitharum amararum munivarum udan Odith thodara: Their attire and hair, fragrant with musk, became loosened and dishevelled; their two mountain-like breasts swayed; their waist twirled; men, celestials and sages ran after them;

vana maNi makaram ilaku kuzhai adaruvana vida miLirvana rathi pathi suruthi mozhivana kayal vizhi puraL thara: attacking their swinging ear-studs, looking like the makara fish and embedded with pretty gems, were their rolling and poison-filled eyes looking like the kayal fish, appearing to interpret the erotic text written by Manmathan (God of Love), the consort of Rathi;

naduvAka vakiru(m) mathi purai thanu nuthal panivara vanasa patha yuka paripuram oli pada: on their bow-like forehead, shaped like the crescent moon cracked in the middle, beads of perspiration appeared; the anklets on their two lotus-like feet jingled;

maRuku thoRum ulavi iniya kalaviyai vilai kURum varaivu il arivaiyar tharu suka salathiyil alaiyum enathu uyir: these innumerable whores roam about in every street and negotiate a price for the carnal pleasure offered by them; my life wanders hither and thither sinking in the enjoyable sea of sexual union;

anuthina(m) neRi tharu mavuna sivasuka salathiyil muzhukuvathu oru nALE: will there be a fortuitous day when I shall drown rejoicingly in the serene sea of SivA's bliss that will lead me everyday towards the righteous path?

mukilu(m) mathiyamum ravi ezhu puraviyu(m) nediya kulai midaRu idaRa muthu kakana mukadu kizhipada: The clouds, the moon and the seven horses of the sun's chariot were all hurt in their long region of neck and the old zenith of the sky was torn

vaLarvana kamuku ina(m) misai vALai muduku kayalukaL vayalkaLum muruku avizh thadamu(m) muLariyum akazhiyum mathilkaLum muzhuthum udaiyathu or aruNaiyil uRai tharum iLaiyOnE: when the tall betelnut trees hit the sky, and when the vALai fish and the kayal fish driven by them jumped up to those trees; these fish swim around in the paddy-fields; there are many fragrant ponds and lotus-filled moats around the fort, along with tall walls, in this unique town, ThiruvaNNAmalai which is Your abode, Oh Young Lord!

akilum maruthamum mukaLitha vakuLamum amutha kathaliyum aruNamum varudaiyum aparimitha matha karikaLum arikaLum udanE koNda aruvi izhi tharum aru varai thanil: In this rare mountain (VaLLimalai), there are many trees like the akil (incence), marutham (Arjuna tree), the flowery makizham and plantain trees with nectar-like sweet fruits, many common brown sheep, wild goats, innumerable wild elephants and monkeys; dragging along all these trees and animals, the waterfalls flow cascading down in this mountain;

oru savara vanithaiyai muni tharu punithaiyai avasamudan malar adi thozhuthu urukiya perumALE.: there lived a matchless damsel of the hunters, who came to this world through the penance of a Saivite sage; prostrating at the hallowed feet of that chaste maid, VaLLi, You melted Your heart in love, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 370 thugilu mrugamadha - thiruvaruNai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]