திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 368 அருவ மிடையென (திருவருணை) Thiruppugazh 368 aruvamidaiyena (thiruvaruNai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான ......... பாடல் ......... அருவ மிடையென வருபவர் துவரிதழ் அமுது பருகியு முருகியு ம்ருகமத அளக மலையவு மணிதுகி லகலவு ...... மதிபார அசல முலைபுள கிதமெழ அமளியில் அமளி படஅந வரதமு மவசமொ டணையு மழகிய கலவியு மலமல ...... முலகோரைத் தருவை நிகரிடு புலமையு மலமல முருவு மிளமையு மலமலம் விபரித சமய கலைகளு மலமல மலமரும் ...... வினைவாழ்வுஞ் சலில லிபியன சனனமு மலமல மினியு னடியரொ டொருவழி படஇரு தமர பரிபுர சரணமு மவுனமு ...... மருள்வாயே உருவு கரியதொர் கணைகொடு பணிபதி யிருகு தையுமுடி தமனிய தநுவுட னுருளை யிருசுடர் வலவனு மயனென ...... மறைபூணும் உறுதி படுசுர ரதமிசை யடியிட நெறுநெ றெனமுறி தலுநிலை பெறுதவம் உடைய வொருவரு மிருவரு மருள்பெற ...... வொருகோடி தெருவு நகரியு நிசிசரர் முடியொடு சடச டெனவெடி படுவன புகைவன திகுதி கெனஎரி வனஅனல் நகைகொடு ......முனிவார்தஞ் சிறுவ வனசரர் சிறுமியொ டுருகிய பெரும அருணையி லெழுநிலை திகழ்வன சிகரி மிசையொரு கலபியி லுலவிய ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... அருவம் இடை என வருபவர் துவர் இதழ் அமுது பருகியும் உருகியும் ... உருவமே இல்லாத நுண்ணிய இடை என்று கூறும்படி வந்துள்ள பெண்களின் பவளம் போன்ற வாயிதழின் ஊறலாகிய அமுதைப் பருகியும், அந்த நிலையில் உருகியும், ம்ருகமத அளகம் அலையவும் அணி துகில் அகலவும் அதிபார அசகம் முலை புளகிதம் எழ ... கஸ்தூரி வாசனை உடைய கூந்தல் அசையவும், அணிந்த ஆடை விலகவும், மிகக் கனத்த மலை போன்ற மார்பு புளகிதம் கொள்ள, அமளியில் அமளி பட அநவரதமும் அவசமொடு அணையும் அழகிய கலவியும் அலம் அலம் ... படுக்கையில் கோலாகலமாக எப்போதும் காம மயக்கத்தோடு தன் வசம் இழந்து சேர்கின்ற அழகிய புணர்ச்சி இன்பம் போதும் போதும். உலகோரைத் தருவை நிகரிடு புலமையும் அலம் அலம் ... உலகில் உள்ளவர்களை கற்பக மரத்துக்கு ஒப்பீர்கள் எனப் பாடும் கவித் திறமும் போதும் போதும். ஒன்றுக்கொன்று மாறுபடுகின்ற சமயக் கொள்கைகளும் போதும் போதும். உருவும் இளமையும் அலம் அலம் விபரித சமய கலைகளும் அலம் அலம் அலமரும் வினை வாழ்வும் சலிய லிபி அ(ன்)ன சனனம் அலம் அலம் ... அழகிய தோற்றமும், இந்த இளமையும் போதும் போதும். வேதனையும் அஞ்சுதலும் உண்டாக்கும் வினைக்கு ஈடான வாழ்வும் நீர் மேல் எழுதிய எழுத்துக்கு நேரான பிறப்பும் போதும் போதும். இனி உன் அடியரொடு ஒரு வழிபட இரு தமர பரிபுர சரணமு(ம்) மவுனமும் அருள்வாயே ... இனியேனும் உன் அடியாரோடு நானும் ஒரு வழிப்பட்டு (உன்னுடைய) இரண்டு ஒலி செய்யும் சிலம்புகள் அணிந்த திருவடியையும், மவுன உபதேசத்தையும் அருள்வாயாக. உருவு கரியது ஒர் கணை கொடு பணி பதி இருகு உதையும் முடி தமனிய தநு உடன் ... உருவம் கரியவனாகிய திருமாலை ஒப்பற்ற அம்பாகவும், பாம்பு அரசனான வாசுகியை (வில்லின் முனைகளில்) முடியப்படும் கயிறாகவும், பொன்னுருவ மேரு மலையை வில்லாகவும் கொண்டு, உருளை இரு சுடர் வலவனும் அயன் என மறை பூணும் உறுதிபடு சுர ரதமிசை அடி இட ... சக்கரங்கள் சூரிய சந்திரர் எனப்படும் சுடர்களாகவும், தேர்ப்பாகன் பிரமன் ஆகவும், வேதங்களாகின குதிரைகள் பூட்டப்பட்ட திண்ணிய தேவர்களே தேர் ஆகவும் வைத்துக்கொண்டு, (சிவபெருமான்) தேரில் அடி எடுத்து வைத்தவுடனே, நெறு நெறு என முறிதலு(ம்) நிலை பெறு தவம் உடைய ஒருவரும் இருவரும் அருள்பெற ... நெறு நெறு என்று அந்தத் தேர் முறி படவும், அசைவு உறாத தவ நிலையைக் கொண்ட திரிபுரத்தில் இருந்த மூன்று சிவபக்தர்கள்* (தீயில் மாளாது உய்ந்து) அருள் பெறவும், ஒரு கோடி தெருவு நகரியும் நிசிசரர் முடியொடு சடசட என வெடி படுவன புகைவன திகு திகு என எரிவன அனல் நகையொடு முனிவார் தம் சிறுவ ... (திரிபுரத்திலிருந்த) ஒரு கோடிக் கணக்கான வீதிகளும் ஊர்களும் அசுரர்கள் தலையுடன் சட சட என வெடி பட்டும், புகை விட்டும், திகுதிகு என்று எரியவிட்டும் தீ எழுப்பிய சிரிப்பைக் கொண்டு கோபித்தவரான சிவபெருமானது குழந்தையே, வனசரர் சிறுமியொடு உருகிய பெரும அருணையில் எழு நிலை திகழ்வன சிகரி மிசை ஒரு கலபியில் உலவிய பெருமாளே. ... வேடர்கள் மகளைக் கண்டு உருக்கம் கொண்ட பெருமை வாய்ந்தவனே, திருவண்ணாமலையில் ஏழு** நிலைகள் விளங்கும் மலை உச்சியில் ஒப்பற்ற மயிலின் மேல் அமர்ந்து உலவி விளக்கம் தரும் பெருமாளே. |
* திரிபுரத்தில் இருந்த அசுரர்கள் சிவ பூஜையை விட்டால் ஒழிய அவர்களை வெல்ல முடியாது என உணர்ந்த திருமால், புத்த ஆசாரியராகவும், நாரதர் அவர் மாணாக்கர் ஆகவும் போந்து, அசுரர்களை மயக்கிச் சிவபூஜையை கைவிடச் செய்தனர். ஆனால் மூன்று அசுரர்கள் மட்டும் சிவ நெறியிலேயே இருந்து ஒழுகி இறக்காமல் தப்பினர். |
** ஏழு நிலைகள் (குண்டலினி) - மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞா, ஸஹஸ்ராக்ஷம். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.171 pg 2.172 pg 2.173 pg 2.174 WIKI_urai Song number: 510 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 368 - aruva midaiyena (thiruvaNNAmalai) aruva midaiyena varupavar thuvarithazh amuthu parukiyu murukiyu mrukamatha aLaka malaiyavu maNithuki lakalavu ...... mathipAra asala mulaipuLa kithamezha amaLiyil amaLi padAna varathamu mavasamo daNaiyu mazhakiya kalaviyu malamala ...... mulakOraith tharuvai nikaridu pulamaiyu malamala muruvu miLamaiyu malamalam viparitha samaya kalaikaLu malamala malamarum ...... vinaivAzhvum salila lipiyana sananamu malamala miniyu nadiyaro doruvazhi padairu thamara paripura saraNamu mavunamu ...... maruLvAyE uruvu kariyathor kaNaikodu paNipathi yiruku thaiyumudi thamaniya thanuvuda nuruLai yirusudar valavanu mayanena ...... maRaipUNum uRuthi padusura rathamisai yadiyida neRune RenamuRi thalunilai peRuthavam udaiya voruvaru miruvaru maruLpeRa ...... vorukOdi theruvu nakariyu nisisarar mudiyodu sadasa denavedi paduvana pukaivana thikuthi kenaeri vanAnal nakaikodu ......munivArtham siRuva vanasarar siRumiyo durukiya peruma aruNaiyi lezhunilai thikazhvana sikari misaiyoru kalapiyi lulaviya ...... perumALE. ......... Meaning ......... aruvam idai ena varupavar thuvar ithazh amuthu parukiyum urukiyum: Imbibing the nectar of saliva oozing from the coral-like lips of the women whose waist is too slender to be discernible, and melting in that experience, mrukamatha aLakam alaiyavum aNi thukil akalavum athipAra asakam mulai puLakitham ezha: their waving hair fragrant with the aroma of musk, the sari that they wore being deliberately loosened, their heavy mountain-like bosom becoming exhilarated, amaLiyil amaLi pada anavarathamum avasamodu aNaiyum azhakiya kalaviyum alam alam: enjoying the great pleasure of copulation on their bed with a lot of ruckus, abandoning control and being forever obsessed with passion; - I have had enough. ulakOraith tharuvai nikaridu pulamaiyum alam alam: Comparing people of the world to the wish-yielding kaRpaga tree and singing poems on them - I have had enough. Following several religious principles that are mutually incompatible - I have had enough. uruvum iLamaiyum alam alam viparitha samaya kalaikaLum alama alam alamarum vinai vAzhvum saliya lipi a(n)na sananam alam alam: I am tired of caring about my figure and youth. This life which gives rise to misery and fear proportionate to my past deeds and this birth that is transient like the scribbling on water - I have had enough of these. ini un adiyarodu oru vazhipada iru thamara paripura saraNamu(m) mavunamum aruLvAyE: From now on at least, kindly make me follow the path of Your devotees in seeking Your two hallowed feet wearing the jingling anklets and Your silent preaching, Oh Lord! uruvu kariyathu or kaNai kodu paNi pathi iruku uthaiyum mudi thamaniya thanu udan: He used the dark-complexioned Lord VishNu as the unique arrow; VAsuki, the cobra-king was put to service as the rope (that is tied to the two ends of the bow); the golden Mount MEru was utilised as the bow; uruLai iru sudar valavanum ayan ena maRai pUNum uRuthipadu sura rathamisai adi ida: the two wheels were the luminous planets, namely, the sun and the moon; on a chariot comprising the celestials, He harnessed the scriptures as the horses; when that Lord SivA stepped on to the chariot, neRu neRu ena muRithalu(m) nilai peRu thavam udaiya oruvarum iruvarum aruLpeRa: it cracked and collapsed with a loud noise; the three steadfast Saivite devotees* in Thiripuram who were in a tranquil state of penance were rescued (without being charred in the fire), receiving His gracious blessings; oru kOdi theruvu nakariyum nisisarar mudiyodu sadasada ena vedi paduvana pukaivana thiku thiku ena erivana anal nakaiyodu munivAr tham siRuva: the millions of streets and towns in Thiripuram, along with the heads of the demons, were blasted in explosion and the fire that broke out spread everywhere rapidly with profuse smoke when He laughed with rage; You are the child of that Lord SivA! vanasarar siRumiyodu urukiya peruma aruNaiyil ezhu nilai thikazhvana sikari misai oru kalapiyil ulaviya perumALE.: You have the distinct honour of melting for VaLLi, the damsel of the hunters, Oh Lord! In ThiruvaNNAmalai, where the seven stages of YOgA** are located, You are seated on top of the mountain, meandering merrily, mounted on the matchless peacock, Oh Great One! |
* The demons in Thiripuram were unconquerable unless they gave up their daily worship of Lord SivA. Realising this, Lord VishNu went to Thiripuram in the disguise of a Buddhist monk accompanied by NArathar as His disciple. They enchanted the demons in Thiripuram to such an extent that they neglected their daily worship of SivA. That was the moment when Lord SivA burnt Thiripuram down; only three demons who continued their worship of SivA were spared. |
** Seven stages of YOgA (kundalini chakra): mUlAthAram, SvAthishtAnam, maNipUrakam, anAkatham, visuththi, AgnjA, sahasrAksham. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |