திருப்புகழ் 352 அறிவிலாப் பித்தர்  (காஞ்சீபுரம்)
Thiruppugazh 352 aRivilAppiththar  (kAnjeepuram)
Thiruppugazh - 352 aRivilAppiththar - kAnjeepuramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனாத் தந்த தந்த தனதனாத் தந்த தந்த
     தனதனாத் தந்த தந்த ...... தனதான

......... பாடல் .........

அறிவிலாப் பித்த ருன்ற னடிதொழாக் கெட்ட வஞ்சர்
     அசடர்பேய்க் கத்தர் நன்றி ...... யறியாத

அவலர்மேற் சொற்கள் கொண்டு கவிகளாக் கிப்பு கழ்ந்து
     அவரைவாழ்த் தித்தி ரிந்து ...... பொருள்தேடிச்

சிறிதுகூட் டிக்கொ ணர்ந்து தெருவுலாத் தித்தி ரிந்து
     தெரிவைமார்க் குச்சொ ரிந்து ...... அவமேயான்

திரியுமார்க் கத்து நிந்தை யதனைமாற் றிப்ப ரிந்து
     தெளியமோ க்ஷத்தை யென்று ...... அருள்வாயே

இறைவர்மாற் றற்ற செம்பொன் வடிவம்வேற் றுப்பி ரிந்து
     இடபமேற் கச்சி வந்த ...... உமையாள்தன்

இருளைநீக் கத்த வஞ்செய் தருளநோக் கிக்கு ழைந்த
     இறைவர்கேட் கத்த குஞ்சொ ...... லுடையோனே

குறவர்கூட் டத்தில் வந்து கிழவனாய்ப் புக்கு நின்று
     குருவியோட் டித்தி ரிந்த ...... தவமானைக்

குணமதாக் கிச்சி றந்த வடிவுகாட் டிப்பு ணர்ந்த
     குமரகோட் டத்த மர்ந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

அறிவிலாப் பித்தர் உன்றன் அடிதொழாக் கெட்ட வஞ்சர் ...
அறிவு இல்லாத பித்தர், உன் திருவடியைத் தொழாத கெட்ட வஞ்சகர்,

அசடர்பேய்க் கத்தர் நன்றி யறியாத அவலர் ... மூடர்கள்,
பேய்த்தன்மை கொண்ட செய்கையர், நன்றி இல்லாத பயனற்றவர் ..

மேற் சொற்கள் கொண்டு கவிகளாக்கிப் புகழ்ந்து ... ஆகியோர்
மீது வார்த்தைகளால் பாடல்கள் புனைந்து அவர்களைப் புகழ்ந்தும்,

அவரைவாழ்த்தித் திரிந்து பொருள்தேடி ... அவர்களை
வாழ்த்தியும், அதன் பொருட்டு அலைந்து திரிந்து பொருள் சம்பாதித்தும்,

சிறிதுகூட்டிக் கொணர்ந்து தெருவுலாத்தித் திரிந்து ...
சிறிதளவு சேகரித்த பொருளைக் கொண்டுவந்து, பொது மகளிர் வாழும்
தெருக்களில் உலாவித் திரிந்து,

தெரிவைமார்க்குச் சொரிந்து ... அப் பெண்களுக்கே அந்தப்
பொருளை நிரம்பவும் வாரிக் கொடுத்து

அவமேயான் திரியுமார்க்கத்து நிந்தை யதனை மாற்றி ...
இப்படி காலத்தை நான் வீணாகக் கழித்துத் திரியும் போக்கினால் எனக்கு
வருகின்ற அபவாதத்தை அகற்றி,

பரிந்து தெளிய மோக்ஷத்தை யென்று அருள்வாயே ... அன்பு
கூர்ந்து, நான் தெளிவு பெறுவதற்கான மோக்ஷ இன்பத்தை என்று
எனக்கு அருளப் போகிறாய்?

இறைவர் மாற்றற்ற செம்பொன் வடிவம் வேற்றுப்பி ரிந்து ...
சிவ பெருமானது மாற்றறியாத செம்பொன் வடிவம் வேறாகும்படி பிரிந்து

இடபமேற் கச்சி வந்த உமையாள் ... ரிஷப வாகனத்தில் ஏறி
காஞ்சீபுரத்துக்கு வந்த உமையவள்

தன் இருளைநீக்கத் தவஞ்செய்து ... தன் அஞ்ஞான இருள்
நீங்குவதற்காகத் தவம் செய்து விளங்க

அருளநோக்கிக் குழைந்த இறைவர் ... அந்தத் தவத்தைப்
பார்த்து அருளோடு மனம் குழைந்த இறைவர்

கேட்கத் தகுஞ்சொல் உடையோனே ... கேட்டு மகிழத்தக்கதான
உபதேசச் சொல்லை உடையவனே,

குறவர்கூட்டத்தில் வந்து ... குறவர்களின் கூட்டத்துக்கு
இடையில் வந்து,

கிழவனாய்ப் புக்கு நின்று ... ஒரு கிழவன் வேடத்தைக் காட்டிப்
புகுந்து நின்று,

குருவியோட்டித்திரிந்த தவமானை ... தினைப்புனத்தில்
குருவிகளை ஓட்டித் திரிந்த தவம் நிறைந்த மானாம் வள்ளியை

குணமதாக்கிச் சிறந்த வடிவுகாட்டிப் புணர்ந்த ... தன்
வசப்படுத்தி, உன் சிறந்த தெய்வ வடிவம் காட்டி, அவளை மணந்தவனே,

குமரகோட்டத்து அமர்ந்த பெருமாளே. ... குமரக்கோட்டம்*
என்ற காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.


* பிரமனைச் சிறைப்பிடித்த குற்றம் நீங்க, சிவபிரானின் ஆணையால், முருகன்
குமரக் கோட்டத்தில் தவக்கோலம் பூண்டு லிங்கப் பிரதிஷ்டை செய்து பூஜித்தான்.
... காஞ்சிப் புராணம்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.127  pg 2.128 
 WIKI_urai Song number: 494 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
திருமதி காந்திமதி சந்தானம்

Mrs Kanthimathy Santhanam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Mrs Kanthimathy Santhanam

Song 352 - aRivilAp piththar (kAnjeepuram)

aRivilAp piththar undran adithozhAk ketta vanjar
     asadarpEyk kaththar nandri ...... aRiyAdha

avalarmER soRkaL koNdu kavigaL Akki pugazhndhu
     avarai vAzhththith thirindhu ...... poruLthEdi

siRidhu kUttik koNarndhu theru ulAththi thirindhu
     therivaimArkku chorindhu ...... avamEyAn

thiriyumArg gaththu nindhai adhanai mAtrip parindhu
     theLiya mOkshaththai endru ...... aruLvAyE

iRaivar mAtratra sempon vadivam vEtrup pirindhu
     idabamEr kachchi vandha ...... umaiyALthan

iruLai neekkath thavansey dharuLanOkkik kuzhaindha
     iRaivar kEtkath thagunsol ...... udaiyOnE

kuRavar kUttaththil vandhu kizhavanAy pukku nindru
     kuruvi Ottiththi rindha ...... thavamAnai

guNamadhAkki chiRandha vadivukAttip puNarndha
     kumarakOttath amarndha ...... perumALE.

......... Meaning .........

aRivilAp piththar undran adithozhAk ketta vanjar: Stupid fools, evil people who never worship Your feet,

asadarpEyk kaththar: idiots, indulging in devilish deeds,

nandri aRiyAdha avalar: and thankless miserable ones -

mER soRkaL koNdu kavigaL Akki pugazhndhu: these are the people on whom I wasted words by composing poems praising them!

avarai vAzhththith thirindhu poruLthEdi: I went on heaping plaudits on them to make money.

siRidhu kUttik koNarndhu theru ulAththi thirindhu: After collecting some amount, I started wandering in the streets

therivaimArkku chorindhu avamEyAn: in search of harlots on whom to shower all that money. I wasted my life.

thiriyumArg gaththu nindhai adhanai mAtrip parindhu: Can You kindly help erase the resultant infamy that attaches to me,

theLiya mOkshaththai endru aruLvAyE: and dispel my disillusionment? When will You grant me liberation?

iRaivar mAtratra sempon vadivam vEtrup pirindhu: She separated Herself from Her Oneness with Lord SivA's pure golden form,

idabamEr kachchi vandha: mounted the Great Bull (Rishabam) and reached Kachchi (kAnjeepuram).

umaiyALthan iruLai neekkath thavansey dharuLanOkkik kuzhaindha: She was UmA PArvathi who did penance to get rid of her delusion of ignorance. He regarded Her penance with melting compassion.

iRaivar kEtkath thagunsol udaiyOnE: That Lord SivA listened to Your worthy exposition of the VEdAs.

kuRavar kUttaththil vandhu kizhavanAy pukku nindru: You appeared in the disguise of an old man among the tribe of hunters (at VaLLimalai);

kuruvi Ottiththi rindha thavamAnai: there, You met the deer-like damsel, VaLLi, who was busy guarding the millet-field and driving away the birds;

guNamadhAkki chiRandha vadivukAttip puNarndha: and You enticed her completely, revealed to her Your Divine form and eventually married her.

kumarakOttath amarndha perumALE.: You chose KumarakkOttam* (kAnjeepuram) as Your abode, Oh Great One!


* To atone for imprisoning of BrahmA, Murugan was asked by Lord SivA to perform penance as a sage at KumarakkOttam. Murugan established a lingam over there and offered His worship - KAnchi PurANam.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 352 aRivilAp piththar - kAnjeepuram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]