(இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு எனது முக்கியக் குறிப்பைப் படியுங்கள் - நன்றி).
(Please read my important note before using this website - Thank You).
திருப்புகழ் 328 கறுக்கப் பற்று  (காஞ்சீபுரம்)
Thiruppugazh 328 kaRukkappatRu  (kAnjeepuram)
Thiruppugazh - 328 kaRukkappatRu - kAnjeepuramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

 
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்
     தனத்தத்தத் தனத்தத்தத் ...... தனதான

......... பாடல் .........

கறுக்கப்பற் றுவர்ப்பிட்டுச் சிரித்துச்சற் றுறுக்கிக்கட்
     பிறக்கிட்டுப் படக்கற்பித் ...... திளைஞோர்தங்

கழுத்தைச்சிக் கெனக்கட்டித் தனச்செப்புப் படக்குத்திட்
     டுருக்கிக்கற் பழிக்கப்பொற் ...... பெழுகாதல்

புறப்பட்டுக் களிக்கக்கற் புரத்தைப்பிட் டரக்கிப்பொற்
     பணிக்கட்டிற் புறத்துற்றுப் ...... புணர்மாதர்

பொருத்தத்தைத் தவிர்த்துச்சற் றிரக்ஷித்துப் புரப்பப்பொற்
     பதத்தைப்பெற் றிருக்கைக்குப் ...... பெருவேனோ

திறற்கொக்கைப் படக்குத்திச் செருக்கிக்கொக் கரித்துச்சக்
     கரிக்குப்புத் திரற்குற்றுத் ...... தளைபூணச்

சினத்துப்பொற் பொருப்பைப்பொட் டெழுத்தித்திக் கரித்துப்புத்
     திரத்தத்திற் சிரித்துற்றுப் ...... பலபேய்கள்

பறிக்கப்பச் சிறைச்சிக்கட் கறிக்குப்பைச் சிரச்சிக்குப்
     பரப்பொய்க்கட் டறப்புக்குப் ...... பொருதோனே

பணிச்செச்சைத் தொடைச்சித்ரப் புயத்துக்ரப் படைச்சத்திப்
     படைக்கச்சிப் பதிச்சொக்கப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கறுக்கப் பல் துவர்ப்பு இட்டுச் சிரித்துச் சற்று உறுக்கிக் கண்
பிறக்கிட்டுப்படக் கண் பித்தி
... பற்கள் கறை ஏறும்படி (பாக்கு
வெற்றிலையின்) சிவப்பு நிறம் ஏறச் செய்தும், சிறிது நகைத்தும், கொஞ்சம்
அதட்டியும், கண்களைப் பின் சுழல்வது போலச் செய்து முறைத்து
விழித்தும்,

இளைஞோர் தம் கழுத்தைச் சிக்கெனக் கட்டித் தனச்செப்புப்
படக் குத்திட்டு
... இளைஞர்களுடைய கழுத்தை அழுந்தக் கட்டிக்
கொண்டு, சிமிழை ஒத்த மார்பகங்கள் படும்படி இறுக அணைத்து,

உருக்கிக் கற்பு அழிக்கப் பொற்பு எழு காதல் புறப்பட்டுக்
களிக்க
... (அதனால்) மனதை உருக்கி, கற்பு மனநிலை அழிபட,
மிகுதியாக எழுகின்ற காம ஆசை தோன்றி இன்பத்தைத் தர,

கற்புரத்தைப் பிட்டு அரக்கிப் பொன் பணிக் கட்டில் புறத்து
உற்றுப் புணர் மாதர் பொருத்தத்தைத் தவிர்த்து
... கற்பூரத்தைப்
பொடி செய்து தேய்த்து அழகாக அலங்கரிக்கப்பட்ட கட்டிலின் மேல்
சேர்ந்து கூடுகின்ற விலைமாதர்களின் இணக்கத்தை நீக்கி,

சற்று ரக்ஷித்துப் புரப்பப் பொன் பதத்தைப் பெற்று
இருக்கைக்குப் பெறுவேனோ
... சிறிதேனும் (அடியேனைக்)
காப்பாற்ற, உனது அழகிய திருவடியை அடையக்கூடிய பாக்கியத்தைப்
பெறுவேனோ?

திறல் கொக்கைப் படக் குத்திச் செருக்கிக் கொக்கரித்துச்
சக்கரிக்குப் புத்திரற்கு உற்றுத் தளை பூண சினத்து
... வலிமை
வாய்ந்த மாமரமாகி நின்ற சூரனை அழிக்கும்படி குத்தியும்,
பெருமிதத்துடன் கர்ச்சித்து, சக்கரம் ஏந்திய திருமாலின் மகனாகிய
பிரமனுக்குப் பொருந்த விலங்கை மாட்டிக் கோபித்தும்,

பொன் பொருப்பைப் பொட்டு எழுத்தித் திக்கரித்து ... பொன்
மலையாகிய கிரெளஞ்சத்தை பொடி எழும்படி நொறுக்கியும், அதை
நிந்தித்தும்,

புத்(து) இரத்தத்தில் சிரித்து உற்றுப் பல பேய்கள் பச்(சை)
இறைச்சிக் கண் கறிக் குப்பை பறிக்க
... (போர்க்களத்தில்) புதிய
ரத்தத்தில் சிரிப்புடன் அளைந்து பல பேய்கள் பச்சை மாமிசங்களில்
கடித்துத் தின்பதற்குரிய குவியல்களைப் பிடுங்க,

சிரச் சிக்குப் பரப்பு ஒய்க் கட்டறப் புக்குப் பொருதோனே ...
(உண்ணக் கிடைக்குமோ என்றிருந்த பேய்களுக்கு) மிகுந்த பசியும்
ஆத்திரமும் வேகத்தில் அடியோடு நீங்க, யுத்த களத்திற்குப் புகுந்து
சண்டை செய்தவனே,

பணிச் செச்சைத் தொடைச் சித்ரப் புயத்து உக்ரப் படைச்
சத்திப் படைக் கச்சிப்பதிச் சொக்கப் பெருமாளே.
...
ஆபரணமாக வெட்சி மாலையை அணிந்த அழகிய புயத்தில் உக்ரமான
ஆயுதமாகிய சக்தி வேற் படையைத் தாங்கி, காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும்
அழகிய பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.71  pg 2.72 
 WIKI_urai Song number: 470 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song

YouTube  'YouTube' Links for this song  
  இப்பாடலுக்கான யூ ட்யூப் பதிவுகள்  

to come வரவிருக்கின்றது

 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 


Song 328 - kaRukkappatRu (kAncheepuram)

kaRukkappat Ruvarppittuc chiriththucchat RuRukkikkat
     piRakkittup padakkaRpith ...... thiLainjOrthang

kazhuththaicchik kenakkattith thanaccheppup padakkuththit
     turukkikkaR pazhikkappoR ...... pezhukAthal

puRappattuk kaLikkakkaR puraththaippit tarakkippoR
     paNikkattiR puRaththutRup ...... puNarmAthar

poruththaththaith thavirththucchat Rirakshiththup purappappoR
     pathaththaippet Rirukkaikkup ...... peRuvEnO

thiRaRkokkaip padakkuththic cherukkikkok kariththucchak
     karikkupputh thiraRkutRuth ...... thaLaipUNac

chinaththuppoR poruppaippot tezhuththiththik kariththupputh
     thiraththaththiR chiriththutRup ...... palapEykaL

paRikkappac chiRaicchikkat kaRikkuppaic chiracchikkup
     parappoykkat taRappukkup ...... poruthOnE

paNicchecchaith thodaicchithrap puyaththukrap padaicchaththip
     padaikkacchip pathicchokkap ...... perumALE.

......... Meaning .........

kaRukkap pal thuvarppu ittuc chiriththuc chatRu uRukkik kaN piRakkittuppadak kaN piththi: They chew (the betel-leaves and nuts) so much that their teeth become stained with red colour; Laughing at times and rebuking a little, they roll their eyes backward and gaze intently;

iLainjOr tham kazhuththaic chikkenak kattith thanaccheppup padak kuththittu: they hug the necks of young men so tightly that their pot-like sharp bosom press the chest;

urukkik kaRpu azhikkap poRpu ezhu kAthal puRappattuk kaLikka: (because of this action) the hearts of the men melt, their chastity is destroyed, and the overflowing passion provokes sensual pleasure;

kaRpuraththaip pittu arakkip pon paNik kattil puRaththu utRup puNar mAthar poruththaththaith thavirththu: they are taken to the well-decorated bed, sprinkled with the powder of camphor, upon which the whores unite with the men; freeing me from the clutches of such whores,

satRu rakshiththup purappap pon pathaththaip petRu irukkaikkup peRuvEnO: in order to be protected at least to some extent, will I be lucky to attain Your hallowed feet?

thiRal kokkaip padak kuththic cherukkik kokkariththuc chakkarikkup puththiraRku utRuth thaLai pUNa sinaththu: He stood as a strong mango tree; You destroyed that demon SUran by piercing his body; You proudly roared with anger and snugly chained the hands of Lord BrahmA, the son of Lord of VishNu holding a disc in His hand;

pon poruppaip pottu ezhuththith thikkariththu: You smashed the golden mount Krouncha into powder and reprimanded it;

puth(thu) iraththaththil siriththu utRup pala pEykaL pac(chai) iRaicchik kaN kaRik kuppai paRikka: many devils happily soaked their hands in new blood (in the battlefield) and snatched heaps of raw flesh to devour;

sirac chikkup parappu oyk kattaRap pukkup poruthOnE: (for those devils who hungrily waited for food) their hunger and impatience were totally removed in an instant, when You entered the battlefield and fought, Oh Lord!

paNic checchaith thodaic chithrap puyaththu ukrap padaic chaththip padaik kacchippathic chokkap perumALE.: You wear the vetchi garland as an ornament around Your broad shoulder upon which You hold the powerful weapon, namely the spear, Oh Lord! You are seated in KAncheepuram, Oh Handsome and Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
 

Thiru Arunagirinathar's Thiruppugazh - 328 kaRukkap patRu - kAnjeepuram


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

 மேலே   top