திருப்புகழ் 323 இதத்துப் பற்றி  (காஞ்சீபுரம்)
Thiruppugazh 323 idhaththuppatRi  (kAnjeepuram)
Thiruppugazh - 323 idhaththuppatRi - kAnjeepuramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்
     தனத்தத்தத் தனத்தத்தத் ...... தனதான

......... பாடல் .........

இதத்துப்பற் றிதழ்த்துப்பற் றிருட்பொக்கக் கருத்திட்டத்
     தியக்கத்திற் றியக்குற்றுச் ...... சுழலாதே

எலுப்புச்சுக் கிலக்கத்தத் தடித்தொக்குக் கடத்தைப்பெற்
     றெடுத்துப்பற் றடுத்தற்பத் ...... துழலாதே

சுதத்தத்தச் சதத்தத்தப் பதத்தர்க்குற் றவற்றைச்சொற்
     றுவக்கிற்பட் டவத்தைப்பட் ...... டயராதே

துணைச்செப்பத் தலர்கொத்துற் பலச்செச்சைத் தொடைப்பத்திக்
     கடப்பப்பொற் கழற்செப்பித் ...... தொழுவேனோ

கொதித்துக்குத் திரக்கொக்கைச் சதித்துப்பற் றிகைக்குட்பொற்
     குலத்தைக்குத் திரத்தைக்குத் ...... தியவேலா

குறத்தத்தைக் கறத்தத்திக் குமுத்தத்தத் தமொக்கிக்குக்
     குலத்துக்குக் குடக்கொற்றக் ...... கொடியோனே

கதச்சுத்தச் சுதைச்சித்ரக் களிற்றுக்கொற் றவற்குக்கற்
     பகச்சொர்க்கப் புரப்பொற்பைப் ...... புரிவோனே

கடுக்கைக்கட் செவிக்கற்றைச் சடைப்பக்கக் கொடிக்கற்புக்
     கடற்கச்சிப் பதிச்சொக்கப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

இதத்துப் பற்று இதழ்த் துப்பு அற்று இருள் பொக்கக் கருத்து
இட்டத்து இயக்கத்தில் தியக்கு உற்றுச் சுழலாதே
...
இன்பத்துடன் பற்றுகின்ற வாயிதழின் நுகர்ச்சியை நீங்கி, துன்பம் தரும்
வஞ்சகமான எண்ணங்களில் விருப்பம் வைத்ததனால் மயக்கம் அடைந்து
நான் சுழற்சி உறாமல்,

எலுப்புச் சுக்கிலம் கத்தம் தடித் தொக்குக் கடத்தைப் பெற்று
எடுத்துப் பற்று அடுத்தத் தற்பத்து உழலாதே
... எலும்பு,
இந்திரியம், மலச்சேறு, தசை, தோல் இவை கூடிய பானையாகிய உடம்பை
அடைந்து, பாசம் சேர்ந்துள்ள பாவ நிலையில் அலைச்சல் உறாமல்,

சுதத் தத் தத் சதத்து அத்தம் பதத்தர்க்கு உற்றவற்றைச் சொல்
துவக்கில் பட்டு அவத்தைப் பட்டு அயராதே
... அந்த அந்தச்
சத்தத்துக்கும் சுத்தமான அர்த்தத்தை விசாரிக்கும் பத ஆராய்ச்சி
செய்வோருக்கு, (அந்தத் தொனியின்) உள்ளர்த்தத்தை எடுத்துச் சொல்லும்
தொடர்பிலே சிக்குண்டு, வேதனைப்பட்டு (சொல் ஆராய்ச்சியால்) சோர்வு
உறாமல்,

துணைச் செப்பத்து அலர்க் கொத்து உற்பலம் செச்சைத்
தொடைப் பத்திக் கடப்பம் பொற்கழல் செப்பித்
தொழுவேனோ
... (இவற்றை எல்லாம் தவிர்த்து) செம்மையான தன்மை
சேர்ந்த பூங்கொத்துக்களும், நீலோற்பல மலர், வெட்சிப் பூ இவைகளால்
ஆகிய மாலைகளின் வரிசைகளும், கடம்ப மலரும் கொண்ட அழகிய
உனது திருவடியைப் புகழ்ந்து தொழ மாட்டேனோ?

கொதித்துக் குத்திரக் கொக்கைச் சதித்துப் பற்றி கைக்குள்
பொற் குலத்தைக் குத்திரத்தைக் குத்திய வேலா
... கோபம்
கொண்டு வஞ்சகம் உள்ள மாமரமாகி நின்ற சூரனை அழித்து தன்
வசப்படுத்தி (அவனது இரு கூறுகளான மயிலை வாகனமாகவும்,
சேவலைக் கொடியாகவும் கொண்டு), பொன் மயமான குலகிரி கிரெளஞ்ச
மலையையும், அதன் வஞ்சக நிலையையும் குத்தி அழித்த வேலனே,

குறத் தத்தைக்கு அறத்து அத்திக்கு முத்த அத்தத்து அம் ஒக்கு
இக்குக் குலத்துக்குக் குக்குடற் கொற்றக் கொடியோனே
...
குறவர் குலக் கிளியாகிய வள்ளியினுடையவும், கற்பியல் அறநெறியில்
நின்ற தேவயானையினுடையவும் முத்தாபரணம் அணிந்த தோள்களின்
அழகுக்கு ஒப்பாகும், கரும்புக்கும் ஒத்த குலமாகிய, மூங்கில்
காம்பையுடைய, கோழியின் வீரக் கொடியை உடையவனே,

கதம் சுத்தச் சுதைச் சித்ரம் களிற்றுக் கொற்றவற்குக் கற்பகச்
சொர்க்கப்புரப் பொற்பைப் புரிவோனே
... கோபத்தையும்,
சுத்தமான வெண்மை நிறத்தையும், அழகையும் கொண்ட ஐராவதம்
என்னும் யானைக்குத் தலைவனான இந்திரனுக்கு, (கேட்டதைத் தரும்)
கற்பக மரங்கள் உள்ள சொர்க்க லோகச் சிறப்பை மீட்டுத்தந்து உதவி
புரிந்தவனே,

கடுக்கைக் கண் செவிக் கற்றைச் சடைப் பக்கக் கொடிக்
கற்புக் கடல் கச்சிப் பதிச் சொக்கப் பெருமாளே.
...
கொன்றையும், பாம்பும் அணிந்த திரண்ட சடையை உடைய
சிவபெருமானது பாகத்து அமர்ந்த கொடி அனையவளும், கற்புக்
கடலானவளும் ஆகிய உமாதேவி வீற்றிருக்கும் காஞ்சித் திருநகரில்
அமர்ந்த அழகிய பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.55  pg 2.56  pg 2.57  pg 2.58 
 WIKI_urai Song number: 465 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 323 - idhaththup patRi (kAnjeepuram)

ithaththuppat Rithazhththuppat Rirutpokkak karuththittath
     thiyakkaththit RiyakkutRuc ...... chuzhalAthE

eluppucchuk kilakkaththath thadiththokkuk kadaththaippet
     Reduththuppat RaduththaRpath ...... thuzhalAthE

suthaththaththac chathaththaththap pathaththarkkut RavatRaicchot
     RuvakkiRpat tavaththaippat ...... tayarAthE

thuNaiccheppath thalarkoththuR palacchecchaith thodaippaththik
     kadappappoR kazhaRcheppith ...... thozhuvEnO

kothiththukkuth thirakkokkaic chathiththuppat RikaikkutpoR
     kulaththaikkuth thiraththaikkuth ...... thiyavElA

kuRaththaththaik kaRaththaththik kumuththaththath thamokkikkuk
     kulaththukkuk kudakkotRak ...... kodiyOnE

kathacchuththac chuthaicchithrak kaLitRukkot RavaRkukkaR
     pakacchorkkap purappoRpaip ...... purivOnE

kadukkaikkat chevikkatRaic chadaippakkak kodikkaRpuk
     kadaRkacchip pathicchokkap ...... perumALE.

......... Meaning .........

ithaththup patRu ithazhth thuppu atRu iruL pokkak karuththu ittaththu iyakkaththil thiyakku utRuc chuzhalAthE: I wish to get away from imbibing the pleasurable lips and to get over the dizziness that occurs due to the treacherous and miserable thoughts that I have been nurturing;

eluppuc chukkilam kaththam thadith thokkuk kadaththaip petRu eduththup patRu aduththath thaRpaththu uzhalAthE: having obtained this vessel of a body comprising bones, sensory organs, the filth of faeces, muscles and skin, I do not wish to be chasing sinful activities arising from attachment;

suthath thath thath sathaththu aththam pathaththarkku utRavatRaic chol thuvakkil pattu avaththaip pattu ayarAthE: I do not wish to be involved with those researchers of philology, who delve into the inner meaning of even any kind of sound, explaining to them the true meaning of those (gutteral) sounds nor do I wish to be exhausted from (such dictional) research;

thuNaic cheppaththu alark koththu uRpalam secchaith thodaip paththik kadappam poRkazhal seppith thozhuvEnO: (aviding all of the above,) will I not be able to praise the glory of, and prostrate at, Your hallowed feet adorned with bunches of reddish flowers, bedecked with garlands of blue lily and vetchi flower and wearing the kadappa flower?

kothiththuk kuththirak kokkaic chathiththup patRi kaikkuL: He became enraged and stood in the disguise of a devious mango tree; You destroyed that demon SUran and took charge of him (by adopting the two portions of his split-body, one, the peacock, as Your vehicle and the other, the rooster, on Your staff);

poR kulaththaik kuththiraththaik kuththiya vElA: and the golden Krouncha, the mountain of the dynasty of the demons, along with its treachery, was annihilated by Your piercing spear, Oh Lord!

kuRath thaththaikku aRaththu aththikku muththa aththaththu am okku ikkuk kulaththukkuk kukkudaR kotRak kodiyOnE: The stem of Your valorous staff of Rooster is made of bamboo, belonging to the sugar-cane species, whose softness can be compared to the beautiful shoulders, adorned by pearl ornaments, of VaLLi, the parrot-like damsel of the KuRavAs, and DEvayAnai, who stands firm in the righteous path!

katham suththac chuthaic chithram kaLitRuk kotRavaRkuk kaRpakac chorkkappurap poRpaip purivOnE: AirAvadham, the fierce and spotlessly white majestic elephant, belongs to IndrA; the prestigious sovereignty of His celestial land, with (the wish-yielding) kaRpaga trees, was restored to him by Your graciousness, Oh Lord!

kadukkaik kaN sevik katRaic chadaip pakkak kodik kaRpuk kadal kacchip pathic chokkap perumALE.: He wears on His thick matted hair the kondRai (Indian laburnum) flower and the serpent; on the left side of that Lord SivA, DEvi PArvathi, the creeper-like Goddess, is concorporate; She is the ocean of chastity and is seated in KAnchipuram, which is also Your abode, Oh Handsome and Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 323 idhaththup patRi - kAnjeepuram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]