திருப்புகழ் 301 வினைக்கு இனமாகும்  (திருத்தணிகை)
Thiruppugazh 301 vinaikkuinamAgum  (thiruththaNigai)
Thiruppugazh - 301 vinaikkuinamAgum - thiruththaNigaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

mp3
 
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனத்தன தானம் தனத்தன தானம்
     தனத்தன தானம் ...... தனதான

......... பாடல் .........

வினைக்கின மாகுந் தனத்தினர் வேளம்
     பினுக்கெதி ராகும் ...... விழிமாதர்

மிகப்பல மானந் தனிற்புகு தாவெஞ்
     சமத்திடை போய்வெந் ...... துயர்மூழ்கிக்

கனத்தவி சாரம் பிறப்படி தோயுங்
     கருக்குழி தோறுங் ...... கவிழாதே

கலைப்புல வோர்பண் படைத்திட வோதுங்
     கழற்புக ழோதுங் ...... கலைதாராய்

புனத்திடை போய்வெஞ் சிலைக்குற வோர்வஞ்
     சியைப்புணர் வாகம் ...... புயவேளே

பொருப்பிரு கூறும் படக்கடல் தானும்
     பொருக்கெழ வானும் ...... புகைமூளச்

சினத்தொடு சூரன் கனத்திணி மார்பந்
     திறக்கம ராடுந் ...... திறல்வேலா

திருப்புக ழோதுங் கருத்தினர் சேருந்
     திருத்தணி மேவும் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

வினைக்கு இனமாகும் தனத்தினர் வேள் அம்பினுக்கு எதிர்
ஆகும் விழி மாதர்
... வினையைப் பெருக்குவதற்குக் காரணமான
மார்பினை உடையவர்கள், மன்மதனுடைய அம்புக்கு ஒப்பாகும்
கண்களை உடையவர்களாகிய விலைமாதர்கள் (மீது வைத்த ஆசையால்),

மிகப் பல மானம் தனில் புகுதா ... மிகப் பலவான அவமானச்
செயல்களில் நுழைந்து,

வெம் சமத்திடை போய் வெம் துயர் மூழ்கி ... விரும்பிய காமரசப்
போர்களிலே ஈடுபட்டு, கொடிய துன்பங்களில் முழுகி அநுபவித்து,

கனத்த விசாரம் பிறப்பு அடி தோயும் கருக் குழி தோறும்
கவிழாதே
... தாங்கமுடியாத கவலை அடைந்து, பிறவிக்கு வழி
வகுக்கும் கருக்குழிக்குள் மீண்டும் நான் குப்புற விழுந்திடாதபடி,

கலைப் புலவோர் பண் படைத்திட ஓதும் கழல் புகழ் ஓதும்
கலை தாராய்
... கலைவல்லமை வாய்ந்த புலவர்கள் இசையுடன்
சீராக ஓதுகின்ற உனது திருவடிகளின் புகழை ஓதும்படியான கலை
ஞானத்தைத் தந்தருள்க.

புனத்து இடை போய் வெம் சிலை குறவோர் வஞ்சியைப்
புணர் வாகம் புய வேளே
... தினைப் புனத்துக்குப் போய், கொடிய
வில்லேந்திய குறவர்களின் கொடி போன்ற வள்ளியைச் சேர்ந்த
அழகிய புயங்களை உடையவனே,

பொருப்பு இரு கூறும் பட கடல் தானும் பொருக்கு எழ
வானும் புகை மூள
... கிரெளஞ்ச மலை இரண்டு கூறாகும்படியும்,
கடலும் வற்றி போய்க் காய்ந்திடவும், வானமும் புகை மூண்டிடவும்,

சினத்தோடு சூரன் கனத்(த) தி(ண்)ணி(ய) மார்பம் திறக்க
அமர் ஆடும் திறல் வேலா
... கோபத்துடன், சூரனுடைய கனத்த,
திண்ணிய மார்பு பிளவுபடும்படியாகவும் போர் செய்த வீர வேலாயுதனே,

திருப்புகழ் ஓதும் கருத்தினர் சேரும் திருத்தணி மேவும்
பெருமாளே.
... திருப்புகழ் ஓதும்* கருத்துள்ள அடியார்கள்
கூடுகின்ற திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே.


* அருணகிரி நாதரின் இந்த வாக்கியம் பொய்யாகாதபடி, ஆண்டுதோறும்
டிசம்பர் 31ம் தேதியில் அடியார்கள் திருத்தணிகையில்
கூடித் திருப்புகழை
ஓதுகின்றார்கள்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.621  pg 1.622 
 WIKI_urai Song number: 259 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 301 - vinaikku inamAgum (thiruththaNigai)

vinaikkina mAkun thanaththinar vELam
     pinukkethi rAkum ...... vizhimAthar

mikappala mAnan thaniRpuku thAvenj
     camaththidai pOyven ...... thuyarmUzhki

kanaththavi sAram piRappadi thOyum
     karukkuzhi thORum ...... kavizhAthE

kalaippula vOrpaN padaiththida vOthum
     kazhaRpuka zhOthum ...... kalaithArAy

punaththidai pOyvenj silaikkuRa vOrvanj
     ciyaippuNar vAkam ...... puyavELE

poruppiru kURum padakkadal thAnum
     porukkezha vAnum ...... pukaimULa

cinaththodu cUran kanaththiNi mArpan
     thiRakkama rAdun ...... thiRalvElA

thiruppuka zhOthum karuththinar sErum
     thiruththaNi mEvum ...... perumALE.

......... Meaning .........

vinaikku inamAkum thanaththinar vEL ampinukku ethir Akum vizhi mAthar: Because of my passion for the whores whose bosom is the cause of adding to my bad deeds and whose eyes are like the flowery arrows of Manmathan (the God of Love),

mikap pala mAnam thanil pukuthA: I stepped into many an infamous situation;

vem samaththidai pOy vem thuyar mUzhki: I waged many a duel of carnal pleasure and suffered miserably drowning in grief;

kanaththa visAram piRappu adi thOyum karuk kuzhi thORum kavizhAthE: I became unbearbly anxious; kindly save me from falling head over heels into the pit of a womb making way for yet another birth

kalaip pulavOr paN padaiththida Othum kazhal pukazh Othum kalai thArAy: by granting me the art of singing the glory of Your hallowed feet in the orderly way sung by creative poets!

punaththu idai pOy vem silai kuRavOr vanjiyaip puNar vAkam puya vELE: You went to the millet-field and hugged the vanji (rattan reed) creeper-like damsel (VaLLi) of the kuRavAs who bear the fierce bows; You have such gorgeous shoulders, Oh Lord!

poruppu iru kURum pada kadal thAnum porukku ezha vAnum pukai mULa: Mount Krouncha was broken into two; the seas dried up; and the sky was filled with smoke;

sinaththOdu cUran kanath(tha) thi(N)Ni(ya) mArpam thiRakka amar Adum thiRal vElA: when You fought in the battlefield with rage, wielding Your triumphant spear that split the strong and rock-solid chest of the demon, SUran, Oh Lord!

thiruppukaz Othum karuththinar sErum thiruththaNi mEvum perumALE.: You reside in ThiruththaNigai* where all devotees assemble with the singular objective of chanting Your glory, Oh Great One!


* As a testimony to this statement by AruNagirinAthar, every year on the new year's eve -December 31- thousands of devotees assemble in ThiruththaNigai and sing his songs of glory.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

mp3
 

Thiru Arunagirinathar's Thiruppugazh - 301 vinaikku inamAgum - thiruththaNigai


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]