திருப்புகழ் 297 வங்கம் பெறு  (திருத்தணிகை)
Thiruppugazh 297 vangkampeRu  (thiruththaNigai)
Thiruppugazh - 297 vangkampeRu - thiruththaNigaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தந்தந் தனதன தந்தந் தனதன
     தந்தந் தனதன ...... தனதான

......... பாடல் .........

வங்கம் பெறுகட லெங்கும் பொருதிரை
     வந்துந் தியதிரு ...... மதனாலே

வஞ்சம் பெறுதிட நெஞ்சன் தழலுற
     வஞ்சம் பதும்விடு ...... மதனாலே

பங்கம் படுமென தங்கந் தனிலுதி
     பண்பொன் றியவொரு ...... கொடியான

பஞ்சொன் றியமயில் நெஞ்சொன் றியெயழல்
     பொன்றுந் தனிமையை ...... நினையாயோ

தெங்கந் திரளுட னெங்குங் கதலிகள்
     சென்றொன் றியபொழி ...... லதனூடே

தெந்தெந் தெனதென என்றண் டுறஅளி
     நின்றுந் திகழ்வொடு ...... மயிலாடப்

பொங்குஞ் சுனைகளி லெங்குங் குவளைகள்
     என்றும் புகழ்பெற ...... மலரீனும்

பொன்றென் றணிகையில் நின்றங் கெழுபுவி
     யென்றுஞ் செயவல ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

வங்கம் பெறுகட லெங்கும் பொருதிரை ... கப்பல்கள் செல்லும்
கடலில் எங்கும் மாறுபட்டு ஏறி இறங்கும் அலைகள்

வந்து உந்தி அதிரும் அதனாலே ... வந்து வீசி இரைச்சலிடும்
காரணத்தாலும்,

வஞ்சம் பெறு திட நெஞ்சன் தழலுற ... வஞ்சகம் கொண்ட
திடமான நெஞ்சனும், நெருப்புப் போன்று

அஞசுசஅம்பதும்விடு மதனாலே ... ஐந்து மலர்ப் பாணங்களையும்
செலுத்துபவனுமான மன்மதனாலும்,

பங்கம் படுமெனது அங்கந் தனில் உதி ... அவமானம் உறுகின்ற
என்னுடைய உடலிலிருந்து பிறந்த

பண்பொன்றிய ஒரு கொடியான ... நற்குணம் நிரம்பிய, ஒரு
கொடி போன்ற இடையை உடைய,

பஞ்சொன்றிய மயில் நெஞ்சொன்றியெ அழல் ... பஞ்சு போல்
மெல்லியளான, மயிலின் சாயலை உடைய என் மகள் உள்ளத்தில்
சேர்ந்த காமத் தீயால்

பொன்றுந் தனிமையை நினையாயோ ... சாகும் நிலையிலே
தனிமையோடு தவிப்பதை நீ சற்றேனும் நினைத்துப் பார்த்து
அருளக்கூடாதா?

தெங்கந் திரளுடன் எங்குங் கதலிகள் ... தென்னை மரங்களின்
கூட்டத்துடன் எங்கும் வாழைகள்

சென்றொன்றியபொழில் அதனூடே ... அமைந்து நிறைந்த
சோலைக்குள்ளே,

தெந்தெந் தெனதென என்று அண்டுற அளி நின்றும் ...
தெந்தெந் தெனதென என்று நெருங்கி வந்து நின்று வண்டுகள்
பாடவும்,

திகழ்வொடு மயிலாட ... அக்கீதத்துக்கு ஏற்ப விளக்கத்துடனே
மயில்கள் ஆடவும்,

பொங்குஞ் சுனைகளில் எங்குங் குவளைகள் என்றும்
புகழ்பெற மலரீனும்
... நீர் நிறைந்த சுனைகளில் எங்கும் குவளைகள்
எக்காலத்திலும் புகழ்பெறும்படி மலர்களைத் தருகின்ற

பொன் தென் தணிகையில் நின்றங்கு ... அழகிய தெற்கிலே
உள்ள திருத்தணிகையில் நின்றருளி,

எழுபுவியென்றுஞ் செயவல பெருமாளே. ... ஏழு உலகங்களையும்
என்றைக்கும் படைக்கவல்ல பெருமாளே.


இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த
தலைவிக்காக அவளுடைய தாய் பாடியது. கடல், சந்திரன், மன்மதன்,
மலர்க் கணைகள் இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.747  pg 1.748  pg 1.749  pg 1.750 
 WIKI_urai Song number: 309 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 297 - vangkam peRu (thiruththaNigai)

vangkam peRukada lengkum poruthirai
     van -thun- thiyathiru ...... mathanAlE

vanjam peRuthida nenjan thazhaluRa
     vanjam pathumvidu ...... mathanAlE

pangam padumena thangan thaniluthi
     paNpon Riyavoru ...... kodiyAna

panjon Riyamayil nenjon Riyeyazhal
     ponRun thanimaiyai ...... ninaiyAyO

thengan thiraLuda nengung kathalikaL
     cenRon Riyapozhi ...... lathanUdE

thenthen thenathena enRaN duRALi
     ninRun thikazhvodu ...... mayilAdap

pongunj cunaikaLi lengung kuvaLaikaL
     enRum pukazhpeRa ...... malareenum

ponRen RaNikaiyil ninRang kezhupuvi
     yenRunj ceyavala ...... perumALE.

......... Meaning .........

vangam peRukada lengum poruthirai: In the high seas where ships sail, the waves keep ebbing and flowing everywhere,

vanthu unthi athirum athanAlE: lashing with a deafening noise;

vanjam peRu thida nenjan: He is a deceitful but determined one,

thazhaluRa anju Ampathumvidu mathanAlE: hurling all the five fiery flower arrows; He is the God of Love (Manmathan);

pangam padumenathu angan thanil uthi: My shameless body gave birth to her,

paNponRiya oru kodiyAna: my girl, who is virtuous, having a creeper-like waist,

panjonRiya mayil nenjonRiye azhal: beautiful like a peacock, now looking like a withered piece of cotton because of the burning agony in her heart;

ponRun thanimaiyai ninaiyAyO: Can You not consider her state of dying in loneliness due to the anguish of her separation from You?

thengan thiraLudan engung kathalikaL senRonRiyapozhil athanUdE: In this grove, amidst a multitude of coconut trees, there are plantain trees everywhere;

thenthen thenathena enRu aNduRa aLi ninRum: the beetles gather together closely and sing steadily to the tune of "thenthen thenathena";

thikazhvodu mayilAda: the peacocks dance elegantly to that tune;

pongunj cunaikaLil engung kuvaLaikaL enRum pukazhpeRa malareenum: and in the ponds, brimful with water, blue lilies blossom everywhere making the ponds famous for yielding this flower at all times.

pon then thaNigaiyil ninRangu: Such a beautiful place in the South is ThiruththaNigai, which is Your abode,

ezhupuviyenRunj ceyavala perumALE.: from where You are capable of creating the seven worlds at all times, Oh Great One!


This song has been written in the Nayaka-Nayaki BhAva portraying the pangs of separation of the heroine from Lord MurugA as narrated by the heroine's mother.
The sea, the moon, God of Love and the flowery arrows are some of the sources which aggravate the agony of separation from the Lord.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 297 vangkam peRu - thiruththaNigai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]