திருப்புகழ் 296 மொகுமொகு என  (திருத்தணிகை)
Thiruppugazh 296 mogumoguena  (thiruththaNigai)
Thiruppugazh - 296 mogumoguena - thiruththaNigaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனன தனதனன தத்தத்த தத்ததன
     தனதனன தனதனன தத்தத்த தத்ததன
          தனதனன தனதனன தத்தத்த தத்ததன ...... தனதான

......... பாடல் .........

மொகுமொகென நறைகொண்மலர் வற்கத்தி லற்புடைய
     முளரிமயி லனையவர்கள் நெய்த்துக்க றுத்துமழை
          முகிலனைய குழல்சரிய வொக்கக்க னத்துவள ...... ரதிபார

முலைபுளக மெழவளைகள் சத்திக்க முத்தமணி
     முறுவலிள நிலவுதர மெத்தத்த வித்தசில
          மொழிபதற விடைதுவள வட்டச்சி லைப்புருவ ...... இணைகோட

அகில்மிருக மதசலிலம் விட்டுப்ப ணித்தமல
     ரமளிபட வொளிவிரவு ரத்நப்ர பைக்குழையொ
          டமர்பொருத நெடியவிழி செக்கச்சி வக்கமர ...... மதநீதி

அடல்வடிவு நலமிதனில் மட்கச்செ ருக்கியுள
     முருகநரை பெருகவுட லொக்கப்ப ழுத்துவிழு
          மளவிலொரு பரமவொளி யிற்புக்கி ருக்கவெனை ...... நினையாதோ

செகுதகெண கெணசெகுத செக்குச்செ குச்செகுத
     கிருதசெய செயகிருத தொக்குத்தொ குத்தொகுத
          டிமிடடிமி டிமிடிமிட டிட்டிட்டி டிட்டிமிட ...... டிடிதீதோ

திரிகடக கடகதிரி தித்திக்ர தித்ரிகட
     திமிர்ததிமி திமிர்ததிமி தித்தித்தி தித்திதிதி
          செணுசெணுத தணசெணுத தத்தித்தி குத்ரிகுட ...... ததிதீதோ

தகுடதிகு திகுடதிமி தத்தத்த தித்திகுட
     குகுகுகுகு குகுகுகுகு குக்குக்கு குக்குகுத
          தரரரர ரிரிரிரிரி றிற்றித்த றிற்றிரிரி ...... யெனவேநீள்

சதிமுழவு பலவுமிரு பக்கத்தி சைப்பமுது
     சமையபயி ரவியிதய முட்கிப்ர மிக்கவுயர்
          தணிகைமலை தனின்மயிலி னிர்த்தத்தி னிற்கவல ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

மொகுமொகு என நறை கொள் மலர் வற்கத்தில்
அ(ன்)புடைய முளரி மயில் அனையவர்கள்
... கம கம என்னும்
வாசனை கொண்ட மலர்க் கூட்டத்தில் விருப்பம் கொண்ட, தாமரை
மலரில் வீற்றிருக்கும் லக்ஷ்மி போன்ற மயிலை நிகர்த்த (பொது)
மகளிருடைய

நெய்த்துக் கறுத்து மழை முகில் அனைய குழல் சரிய ...
நெய்ப்பும், கருமையும் கொண்ட, கருமேகம் போன்ற கூந்தல் சரிந்து விழ,

ஒக்கக் கனத்து வளர் அதிபார முலை புளகம் எழ வளைகள்
சத்திக்க முத்த மணி முறுவல் இள நிலவு தர
... ஒன்று சேர
பருத்து வளர்ந்துள்ள, அதிகக் கனம் கொண்ட மார்பகங்கள் புளகம்
கொள்ள, (கையில் அணிந்துள்ள) வளைகள் ஒலி செய்ய, முத்துக்கள்
போன்ற பற்கள் இள நிலவின் ஒளியை வீச,

மெத்தத் தவித்த சில மொழி பதற இடை துவள வட்டச்
சிலை புருவ இணை கோட
... மிகவும் தவிப்புடன் சில மொழிகள்
அசைவுற்று வெளிப்பட, இடை நெளிவு உற, வட்டவடிவமான
வில்லைப் போன்ற புருவங்கள் இரண்டும் வளைவு உற,

அகில் மிருக மத சலிலம் விட்டுப் பணித்த மலர் அமளி
பட ஒளி விரவு ரத்ந ப்ரபை குழையொடு அமர் பொருத
நெடி விழி செக்கச் சிவக்க
... அகில், கஸ்தூரி, பன்னீர் விட்டு
அலங்கரிக்கப்பட்ட மலர்ப் படுக்கை கசங்கி கலைவு பட, ஒளி
கலந்த ரத்தினங்களால் அமைக்கப்பட்டுப் பிரகாசிக்கும்
குண்டலங்களுடன் போர் புரிவது போல் நீண்டுள்ள கண்கள்
மிகவும் சிவக்க,

அமர மத(ம்) நீதி அடல் வடிவு நலம் இதனில் மட்கச்
செருக்கி உ(ள்)ளம் உருக
... (இவ்வாறு கலவி இன்பத்தில்)
பொருந்துவதால் கொள்கை, அறிவு, நீதி, வலிமை, உருவம்,
குணம் இவை எல்லாம் மங்கும்படியாக அளவு கடந்து (அதனால்)
உள்ளம் தளர்ச்சி அடைந்து உருக,

நரை பெருக உடல் ஒக்கப் பழுத்து விழும் அளவில் ஒரு
பரம வெளியில் புக்கு இருக்க எனை நினையாதோ
... நரை
அதிகமாக, உடல் ஒரு சேர முதிர்ந்து கிழமாய் விழும் அந்தச்
சமயத்தில், ஒப்பற்ற பரஞ் சோதியான பேரின்ப வீட்டில் நான்
புகுந்து ஓய்வு பெற்று இருக்க என்னைக் குறித்து உனது
திருவுள்ளம் நினையாதோ?

செகு - - - எனவே நீள் ... இவ்வாறான ஒலி பெருகி நீள

சதி முழவு பலவும் இரு பக்கத்து இசைப்ப முது சமைய
பயிரவி இதயம் உட்கி ப்ரமிக்க உயர் தணிகை மலை
தனில் மயிலில் நிர்த்தத்தனில் நிற்க வல்ல பெருமாளே.
...
தாள ஒத்துடன் முழவு வாத்தியங்கள் பலவும் இரண்டு
பக்கங்களிலும் ஒலிக்கவும், பழைமை வாய்ந்த அன்னை பைரவி
துர்க்கையும் உள்ளம் அஞ்சி திகைப்பு அடையவும், சிறப்பு
வாய்ந்த திருத்தணிகை மலையில் மயில் மீது நிலைத்து
நடனம் செய்யவல்ல பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.745  pg 1.746  pg 1.747  pg 1.748 
 WIKI_urai Song number: 308 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 296 - mokumokena (thiruththaNigai)

mokumokena naRaikoNmalar vaRkaththi laRpudaiya
     muLarimayi lanaiyavarkaL neyththukka Ruththumazhai
          mukilanaiya kuzhalsariya vokkakka naththuvaLa ...... rathipAra

mulaipuLaka mezhavaLaikaL saththikka muththamaNi
     muRuvaliLa nilavuthara meththaththa viththasila
          mozhipathaRa vidaithuvaLa vattacchi laippuruva ...... iNaikOda

akilmiruka mathasalilam vittuppa Niththamala
     ramaLipada voLiviravu rathnapra paikkuzhaiyo
          damarporutha nediyavizhi sekkacchi vakkamara ...... mathaneethi

adalvadivu nalamithanil matkacche rukkiyuLa
     murukanarai perukavuda lokkappa zhuththuvizhu
          maLaviloru paramavoLi yiRpukki rukkavenai ...... ninaiyAthO

sekuthakeNa keNasekutha sekkucche kucchekutha
     kiruthaseya seyakirutha thokkuththo kuththokutha
          dimidadimi dimidimida dittitti dittimida ...... diditheethO

thirikadaka kadakathiri thiththikra thithrikada
     thimirthathimi thimirthathimi thiththiththi thiththithithi
          seNuseNutha thaNaseNutha thaththiththi kuthrikuda ...... thathitheethO

thakudathiku thikudathimi thaththaththa thiththikuda
     kukukukuku kukukukuku kukkukku kukkukutha
          tharararara ririririri RiRRiththa RitRiriri ...... yenavEneeL

sathimuzhavu palavumiru pakkaththi saippamuthu
     samaiyapayi raviyithaya mutkipra mikkavuyar
          thaNikaimalai thaninmayili nirththaththi niRkavala ...... perumALE.

......... Meaning .........

mokumoku ena naRai koL malar vaRkaththil a(n)pudaiya muLari mayil anaiyavarkaL: These whores are always interested in bunches of fragrant flowers; they look like Lakshmi seated on the lotus and resemble the peacock;

neyththuk kaRuththu mazhai mukil anaiya kuzhal sariya: their greasy and dark hair looking like the black cloud hangs loose;

okkak kanaththu vaLar athipAra mulai puLakam ezha vaLaikaL saththikka muththa maNi muRuval iLa nilavu thara: their evenly robust and huge bosom becomes exhilarated; the bangles (on their arms) make a clinking noise; their pearl-like teeth radiate like the young moon;

meththath thaviththa sila mozhi pathaRa idai thuvaLa vattac chilai puruva iNai kOda: a few words of excitement emanate with jerks from their lips; their waist wilts becoming flaccid; their rounded bow-like eye-brows knit into wrinkles;

akil miruka matha salilam vittup paNiththa malar amaLi pada oLi viravu rathna prapai kuzhaiyodu amar porutha nedi vizhi sekkac chivakka: their beds decorated with flowers and sprinkled with incence, musk and rose water become dishevelled; their long eyes become very reddish due to the confrontation with their ear-studs, embedded with bright and precious gems;

amara matha(m) neethi adal vadivu nalam ithanil matkac cherukki u(L)Lam uruka: (such an indulgence in carnal pleasure) leads to the forsaking of all principles, common sense, morality, strength, demeanour and goodness which degenerate into dimness due to immoderation, resulting in a disheartened feeling;

narai peruka udal okkap pazhuththu vizhum aLavil oru parama voLiyil pukku irukka enai ninaiyAthO: with the graying of hair, the body becomes totally limp due to old age and falls like a crumpled fruit; at that moment, will You not kindly consider rendering me into the matchless and supreme effulgence of Your Grace?

seku ... enavE neeL: Long lasting sounds to the meter "sekuthakeNa - - - RiRRiriri" were heard all around

sathi muzhavu palavum iru pakkaththu isaippa muthu samaiya payiravi ithayam utki pramikka uyar thaNikai malai thanil mayilil nirththaththanil niRka valla perumALE.: with lilting beats from many percussion instruments resonating on both sides, and to the utter amazement, awe and exhilaration of the old Lady Bhairavi (Parvathi), You danced steadily, mounted on the peacock, on the famous mountain in ThiruththaNigai, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 296 mogumogu ena - thiruththaNigai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]