திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 292 முகிலும் இரவியும் (திருத்தணிகை) Thiruppugazh 292 mugilumiraviyum (thiruththaNigai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான ......... பாடல் ......... முகிலு மிரவியு முழுகதிர் தரளமு முடுகு சிலைகொடு கணைவிடு மதனனு முடிய வொருபொரு ளுதவிய புதல்வனு ...... மெனநாடி முதிய கனனென தெய்வதரு நிகரென முதலை மடுவினி லதவிய புயலென முகமு மறுமுக முடையவ னிவனென ...... வறியோரைச் சகல பதவியு முடையவ ரிவரென தனிய தநுவல விஜயவ னிவனென தபனன் வலம்வரு கிரிதனை நிகரென ...... இசைபாடிச் சயில பகலவ ரிடைதொறு நடைசெயு மிரவு தவிரவெ யிருபத மடையவெ சவித அடியவர் தவமதில் வரவருள் ...... புரிவாயே அகில புவனமு மடைவினி லுதவிய இமய கிரிமயில் குலவரை தநுவென அதிகை வருபுர நொடியினி லெரிசெய்த ...... அபிராமி அமரு மிடனன லெனுமொரு வடிவுடை யவனி லுரையவன் முதுதமி ழுடையவ னரியொ டயனுல கரியவ னடநவில் ...... சிவன்வாழ்வே திகிரி நிசிசரர் தடமுடி பொடிபட திரைக ளெறிகடல் சுவறிட களமிசை திரடு குறடுகள் புரள்வெகு குருதிகள் ...... பெருகாறாச் சிகர கிரிநெரி படபடை பொருதருள் திமிர தினகர குருபர இளமயில் சிவணி வருமொரு தணிகையில் நிலைதிகழ் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... முகிலும் இரவியும் முழு கதிர் தரளமு(ம்) ... கொடையில் மேகரூம், புகழில் சூரியனும், முக காந்தியில் பேரொளி வீசும் முத்தும், முடுகு சிலை கொடு கணை விடு மதனனு(ம்) ... அழகில், கரும்பு வில்லை ஏந்தி விரைவில் பாணங்களை விடும் மன்மதனனும், முடிய ஒரு பொருள் உதவிய புதல்வனும் என நாடி ... ஈகையில், வேண்டுமளவும் கேட்ட ஒரு பொருளைத் தந்து உதவிய பிள்ளையும் இவன் என்று விரும்பிச் சென்று, முதிய க(ர்)னன் என தெய்வ தரு நிகர் என ... பழைய கர்ணனே இவன் என்றும், தெய்வ விருட்சமாகிய கற்பகத்தை ஒப்பானவன் இவன் என்றும், முதலை மடுவினில் அதவிய புயல் என முகமும் அறுமுகமும் உடையவன் இவன் என ... முதலையை மடுவில் கொன்ற மேக நிறம் கொண்ட திருமாலே இவன் என்றும், முகமும் ஆறு முகக் கடவுள் போன்றவன் என்றும், வறியோரைச் சகல பதவியும் உடையவர் இவர் என ... தரித்திரம் கொண்டவரை சகல செல்வங்களும் உடையவர் இவர் என்றும், தனிய தநு வ(ல்)ல விஜயவன் இவன் என ... வில்வித்தையில் வல்லவனான அருச்சுனன் இவன் என்றும், தபனன் வலம் வரு கிரி தனை நிகர் என இசை பாடி ... சூரியன் வலம் வருகின்ற மேரு மலையை ஒப்பானவன் என்றும் இசைப் பாட்டுக்களைப் பாடி, சயில(ம்) பகலவர் இடை தொறு நடை செ(ய்)யும் இரவு தவிரவெ இரு பதம் அடையவெ ... கல் பிளவை ஒத்த இறுகிய மனம் வாய்ந்த லோபிகளின் இடங்கள் தோறும் நடந்து திரியும் யாசகத் தொழில் நீங்கவும், உனது இரண்டு பாதங்களை அடையவும், சவித அடியவர் தவம் அதில் வர அருள் புரிவாயே ... பல வகையான அடியார்களின் தவ நிலை எனக்கு வருமாறும் அருள் புரிவாயாக. அகில புவனமும் அடைவினில் உதவிய இமய கிரி மயில் குல வரை தநு என ... எல்லா உலகங்களையும் முறைப்படி தந்தவளும், இமயமலை பெற்ற மயிலுமாகிய உமை, சிறந்த மலையாகிய மேருவை வில்லாகக் கொண்டு அதிகை வரு புர நொடியினில் எரி செய்த அபிராமி அமரும் இடன் ... திருவதிகை என்னும் பதியில் திரிபுரத்தை ஒரு நொடிப் பொழுதில் எரித்த அபிராமி தனது இடது பாகத்தில் அமரும்படியாக வாய்த்தவனும், அனல் எனும் ஒரு வடிவுடை அவன் இல் உரையவன் முது தமிழ் உடையவன் ... நெருப்பு என்னும் ஒப்பற்ற உருவத்தினன், உரைக்கு எட்டாதவன், பழைய தமிழுக்கு உரியவன், அரி ஒடு அயன் உலகு அரியவன் நட நவில் சிவன் வாழ்வே ... திருமாலும், பிரமனும், உலகோரும் அறிதற்கு அரியவன், நடனம் செய்பவன் ஆகிய சிவபெருமானின் செல்வனே, திகிரி நிசிசரர் தடம் முடி பொடி பட திரைகள் எறி கடல் சுவறிட ... சக்ராயுதங்களுடன் அசுரர்களின் பெரிய முடிகள் பொடிபடவும், அலைகள் வீசும் கடல் வற்றிப் போகவும், களம் மிசை திரடு குறடுகள் புரள் வெகு குருதிகள் பெருகி ஆறா(க) ... போர்க் களத்தில் மேடான உயர் நிலங்களிலும் புரண்டெழுந்த மிகுதியான இரத்தம் பெருகி ஆறாக ஓடும்படியும், சிகர கிரி நெரி பட படை பொருது அருள் திமிர தினகர குருபர ... சிகரங்களை உடைய கிரவுஞ்சமலை நெரிபட்டு பொடியாய் விழவும், வேலால் சண்டை செய்து அருளிய, (அஞ்ஞான) இருளை நீக்கும் (ஞான) சூரியனே, குருபரனே, இள மயில் சிவணி வரும் ஒரு தணிகையில் நிலை திகழ் பெருமாளே. ... இளமை வாய்ந்த மயிலில் பவனி வரும், ஒப்பற்ற திருத்தணிகையில் நிலைத்து விளங்கும் பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.735 pg 1.736 pg 1.737 pg 1.738 pg 1.739 pg 1.740 WIKI_urai Song number: 304 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
Song 292 - mugilum iraviyum (thiruththaNigai) mukilu miraviyu muzhukathir tharaLamu muduku silaikodu kaNaividu mathananu mudiya voruporu Luthaviya puthalvanu ...... menanAdi muthiya kananena theyvatharu nikarena muthalai maduvini lathaviya puyalena mukamu maRumuka mudaiyava nivanena ...... vaRiyOrai sakala pathaviyu mudaiyava rivarena thaniya thanuvala vijayava nivanena thapanan valamvaru kirithanai nikarena ...... isaipAdi sayila pakalava ridaithoRu nadaiseyu miravu thavirave yirupatha madaiyave savitha adiyavar thavamathil varavaruL ...... purivAyE akila puvanamu madaivini luthaviya imaya kirimayil kulavarai thanuvena athikai varupura nodiyini leriseytha ...... apirAmi amaru midanana lenumoru vadivudai yavani luraiyavan muthuthami zhudaiyava nariyo dayanula kariyava nadanavil ...... sivanvAzhvE thikiri nisisarar thadamudi podipada thiraika LeRikadal suvaRida kaLamisai thiradu kuRadukaL puraLveku kuruthikaL ...... perukARA sikara kirineri padapadai porutharuL thimira thinakara gurupara iLamayil sivaNi varumoru thaNikaiyil nilaithikazh ...... perumALE. ......... Meaning ......... mukilum iraviyum muzhu kathir tharaLamu(m): (Thinking that) he is comparable to the cloud in charity, to the sun in fame, to the brilliant pearl in the glow of his face, muduku silai kodu kaNai vidu mathananu(m): to Manmathan (God of Love) who wields flowers as arrows from his bow of sugarcane in terms of handsomeness, mudiya oru poruL uthaviya puthalvanum ena nAdi: and to the great son who grants a thing to the heart's content in giving alms, I approched him eagerly; muthiya ka(r) nan ena theyva tharu nikar ena: declaring that he is the old Karnan and the wish-yielding divine tree KaRpagam; muthalai maduvinil athaviya puyal ena mukamum aRumukamum udaiyavan ivan ena.: that he is none other than the Lord VishNu, with the complexion of black cloud, who killed the crocodile in the pond; and that he is like the six faced Lord Murugan; vaRiyOrai sakala pathaviyum udaiyavar ivar ena: describing poverty-stricken people as those who are endowed with all the wealth, thaniya thanu va(l) la vijayavan ivan ena: comparing them with Arjunan who is skilled in archery, thapanan valam varu kiri thanai nikar ena isai pAdi: and equating them to the Mount MEru circumambulated by the sun, I sang musical poems on them; sayila(m) pakalavar idai thoRu nadai se(y) yum iravu thavirave iru patham adaiyave: in order to terminate my profession of begging, wandering to the places of such misers whose heart is rigid like solid rock, and to attain Your hallowed feet, savitha adiyavar thavam athil vara aruL purivAyE: kindly bless me so that I reach the level of penance realised by Your multifarious devotees! akila puvanamum adaivinil uthaviya imaya kiri mayil kula varai thanu ena.: She delivered the entire world in an orderly manner; she is UmA, the peacock-like daughter of Mount HimavAn; She bent the great Mount MEru like a bow athikai varu pura nodiyinil eri seytha apirAmi amarum idan: and, in a second, burnt down Thiripuram in this place called Thiruvathikai; that Abhirami (the most beautiful) is concorporate on the left side of His body; anal enum oru vadivudai avan il uraiyavan muthu thamizh udaiyavan: He has the matchless form of fiery effulgence; He is beyond the reach of words; He belongs to the old Tamil literature; ari odu ayan ulaku ariyavan nada navil sivan vAzhvE: He could not be comprehended by Lord VishNu, BrahmA and the entire world; He is the dancing Lord SivA, and You are His Treasure, Oh Lord! thikiri nisisarar thadam mudi podi pada thiraikaL eRi kadal suvaRida: the demons, with discs as their weapons, were all shattered to pieces; the wavy seas dried up; kaLam misai thiradu kuRadukaL puraL veku kuruthikaL peruki ARA(ka): even on the elevated areas of the battlefield, gushing blood flowed like a river; sikara kiri neri pada padai poruthu aruL thimira thinakara gurupara: and the mount Krouncha, with its high peaks, was smashed to smithereens when You fought with the spear; You are the gracious sun who removes the darkness (of ignorance), Oh Great Master! iLa mayil sivaNi varum oru thaNikaiyil nilai thikazh perumALE.: You fly around mounting the youthful peacock and are seated permanently in this matchless place, ThiruththaNigai, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |