திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 289 மருக்குல மேவும் (திருத்தணிகை) Thiruppugazh 289 marukkulamEvum (thiruththaNigai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனத்தன தானம் தனத்தன தானம் தனத்தன தானம் ...... தனதான ......... பாடல் ......... மருக்குல மேவுங் குழற்கனி வாய்வெண் மதிப்பிள வாகும் ...... நுதலார்தம் மயக்கினி லேநண் புறப்படு வேனுன் மலர்க்கழல் பாடுந் ...... திறநாடாத் தருக்கனு தாரந் துணுக்கிலி லோபன் சமத்தறி யாவன் ...... பிலிமூகன் தலத்தினி லேவந் துறப்பணி யாதன் தனக்கினி யார்தஞ் ...... சபைதாராய் குருக்குல ராஜன் தனக்கொரு தூதன் குறட்பெல மாயன் ...... நவநீதங் குறித்தயில் நேயன் திருப்பயில் மார்பன் குணத்ரய நாதன் ...... மருகோனே திருக்குள நாளும் பலத்திசை மூசும் சிறப்பது றாஎண் ...... டிசையோடும் திரைக்கடல் சூழும் புவிக்குயி ராகுந் திருத்தணி மேவும் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... மருக் குல(ம்) மேவும் குழல் கனி வாய் வெண் மதிப் பிளவு ஆகும் நுதலார் தம் ... வாசனை வகைகள் நிறைந்த கூந்தலையும், கொவ்வைக் கனி போன்ற சிவந்த வாயையும், வெண் பிறையின் பிளவு போன்ற நெற்றியையும் உடைய விலைமாதர்களின் மயக்கினிலே நண்பு உறப் படுவேன் உன் மலர்க் கழல் பாடும் திற(ன்) நாடாத் தருக்கன் ... மோக மயக்கத்தில் நட்புப் பூணும் நான் உன்னுடைய மலரடியைப் பாடும் வழி வகையை நாடாத ஆணவம் கொண்டவன், உதாரம் துணுக்கு இலி லோபன் சமத்து அறியா அன்பு இலி மூகன் ... கொடைக் குணம் கொஞ்சமும் இல்லாதவன், (மாறாக) லோப குணம் உடையவன், திறமை இல்லாதவன், அன்பு அற்றவன், ஊமையன், தலத்தினிலே வந்து உறப் பணியாத(வ)ன் ... (உனது திருத்தணிகைத்) தலத்துக்கு வந்து மனம் ஒன்றிப் பணியாதவன், தனக்கு இனியார் தம் சபை தாராய் ... இத்தகைய எனக்கு, இனியவரான உன் அடியார்கள் திருக் கூட்டத்தில் சேரும் பேற்றைத் தந்து அருள்வாய். குருக் குல ராஜன் தனக்கு ஒரு தூதன் குறள் பெல மாயன் நவ நீதம் குறித்து அயில் நேயன் ... குருகுல அரசனாகிய தருமருக்கு ஒரு தூதனாகச் சென்றவன், (மாவலி சக்கரவர்த்தி இடம்) வாமனனாய் குட்டை வடிவத்தில் சென்றவன், பலத்த மாயைகள் செய்ய வல்லவன், வெண்ணெய் (இருக்கும் இடத்தை) குறித்து அறிந்து உண்ணும் நேசன், திருப் பயில் மார்பன் குண த்ரய நாதன் மருகோனே ... லக்ஷ்மி தேவி வாசம் செய்யும் மார்பன், (சத்துவம், ராஜதம், தாம ம் ஆகிய) முக்குணங்களுக்குத் தலைவனாகிய திருமாலின் மருகனே, திருக் குள(ம்) நாளும் பலத் திசை மூசும் சிறப்பு அது உறா ... குமார தீர்த்தம் என்னும் திருக் குளத்தில்* நாள் தோறும் பல திசைகளில் இருந்து வரும் அடியார்கள் நெருங்கிக் குளிக்கும் சிறப்பைப் பெற்றதும், எண் திசையோடும் திரைக் கடல் சூழும் புவிக்கு உயிராகும் திருத்தணி மேவும் பெருமாளே. ... எட்டுத் திக்குகளிலும் அலைகடல் சூழ்ந்த பூமிக்கு உயிர் நிலையான இடமுமாகிய திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே. |
* தணிகை மலை அடிவாரத்தில் சரவணப் பொய்கை உள்ளது. இது குமாரதீர்த்தம் எனவும் பெயர் பெறும். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.619 pg 1.620 pg 1.621 pg 1.622 WIKI_urai Song number: 258 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
Song 289 - marukkula mEvum (thiruththaNigai) marukkula mEvum kuzhaRkani vAyveN mathippiLa vAkum ...... nuthalArtham mayakkini lEnaN puRappadu vEnun malarkkazhal pAdun ...... thiRanAdAth tharukkanu thAran thuNukkili lOpan samaththaRi yAvan ...... pilimUkan thalaththini lEvan thuRappaNi yAthan thanakkini yArtham ...... sapaithArAy kurukkula rAjan thanakkoru thUthan kuRatpela mAyan ...... navaneetham kuRiththayil nEyan thiruppayil mArpan kuNathraya nAthan ...... marukOnE thirukkuLa nALum palaththisai mUsum siRappathu RAeN ...... disaiyOdum thiraikkadal sUzhum puvikkuyi rAkum thiruththaNi mEvum ...... perumALE. ......... Meaning ......... maruk kula(m) mEvum kuzhal kani vAy veN mathip piLavu Akum nuthalAr tham: Their hair is sprayed with many varieties of fragrances; their mouth is reddish like the kovvai fruit; the forehead of these whores is like the white crescent moon; mayakkinilE naNpu uRap paduvEn un malark kazhal pAdum thiRa(n) nAdAth tharukkan: befriending them under the delusion of passion, I am arrogant without seeking ways to sing the glory of Your lotus feet; uthAram thuNukku ili lOpan samaththu aRiyA anpu ili mUkan: I do not have even an iota of charitable thought; (instead) I am filled with stinginess; I am bereft of any ability or love; I am a stupid and dumb fellow; thalaththinilE vanthu uRap paNiyAtha(va)n: I never visit Your abodes (like ThiruththaNigai) to offer worship with devotion; thanakku iniyAr tham sapai thArAy: (despite all these shortcomings,) kindly bestow upon me the good fortune of joining the assembly of Your dear devotees! kuruk kula rAjan thanakku oru thUthan kuRaL pela mAyan nava neetham kuRiththu ayil nEyan: He went as the unique messenger of Dharman, the King of the Kuru Dynasty; He went in the disguise of a dwarf (to see Emperor MahAbali); He is an expert mystic capable of many miracles; He knew where His favourite butter was stored and gobbled it up; thirup payil mArpan kuNa thraya nAthan marukOnE: on His hallowed chest, Goddess Lakshmi is concorporate; He is the Leader presiding over the three attributes [namely, sathwam (tranquility), rAjasam (aggressiveness) and thAmasam (sluggishness)]; You are the nephew of that Lord VishNu! thiruk kuLa(m) nALum palath thisai mUsum siRappu athu uRA: In the sacred pond* (KumAra Theerththam) of this famous place, many devotees gather from all the directions in a crowd to have a dip; eN thisaiyOdum thiraik kadal sUzhum puvikku uyirAkum thiruththaNi mEvum perumALE.: this town, ThiruththaNigai, is the life-centre of this world surrounded by oceans in all the eight directions; and this is Your abode, Oh Great One! |
* At the foothill of the mountain in ThiruththaNigai, there is a SaravaNa pond, known as KumAra Thirththam. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |