திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 288 பொற் பதத்தினை (திருத்தணிகை) Thiruppugazh 288 poRpadhaththinai (thiruththaNigai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தத்த தத்த தத்த தத்த தத்த தத்த தத்த தத்த தத்த தத்த தத்த தத்த ...... தனதான ......... பாடல் ......... பொற்ப தத்தி னைத்து தித்து நற்ப தத்தி லுற்ற பத்தர் பொற்பு ரைத்து நெக்கு ருக்க ...... அறியாதே புத்த கப்பி தற்றை விட்டு வித்த கத்து னைத்து திக்க புத்தி யிற்க லக்க மற்று ...... நினையாதே முற்ப டத்த லத்து தித்து பிற்ப டைத்த கிர்த்ய முற்றி முற்க டைத்த வித்து நித்த ...... முழல்வேனை முட்ட விக்க டைப்பி றப்பி னுட்கி டப்ப தைத்த விர்த்து முத்தி சற்றெ னக்க ளிப்ப ...... தொருநாளே வெற்ப ளித்த தற்ப ரைக்கி டப்பு றத்தை யுற்ற ளித்த வித்த கத்தர் பெற்ற கொற்ற ...... மயில்வீரா வித்தை தத்வ முத்த மிழ்ச்சொ லத்த சத்தம் வித்த ரிக்கு மெய்த்தி ருத்த ணிப்பொ ருப்பி ...... லுறைவோனே கற்ப கப்பு னக்கு றத்தி கச்ச டர்த்த சித்ர முற்ற கற்பு ரத்தி ருத்த னத்தி ...... லணைவோனே கைத்த ரக்கர் கொத்து கச்சி னத்து வஜ்ர னுக்க மைத்த கைத்தொ ழுத்த றித்து விட்ட ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... பொற்பதத்தி னைத் துதித்து நற்பதத்திலுற்ற பத்தர் ... உன் அழகிய பாதங்களைத் துதித்து உயர்ந்த பதவியை அடைந்த பக்தர்களுடைய பொற்பு உரைத்து நெக்கு உருக்க அறியாதே ... சிறப்பினை எடுத்துரைத்து உள்ளம் நெகிழ்ந்துருகத் தெரியாமலும், புத்தகப் பிதற்றை விட்டு வித்தகத்து உனைத்துதிக்க ... புத்தகத்தைக் கற்று அவற்றைப் பிதற்றுவதை விட்டு, ஞானத்தால் உன்னைத் துதித்திட புத்தியிற்கலக்க மற்று நினையாதே ... கலக்கமற்ற புத்தியுடன் உன்னை நினையாமலும், முற்படத்தலத்துதித்து பிற்படைத்த கிர்த்ய முற்றி ... இந்தப் பூமியில் பிறத்தலில் நான் முற்பட்டவனாகி, பின்னர் இங்கு நான் செய்யும் அக்ரமமான செயல்கள் நிரம்பி, முற்கடைத் தவித்து நித்தம் உழல்வேனை ... பிறருடைய வாசல்களின் முன் நின்று தவித்து தினமும் அலைகின்ற என்னை, முட்ட இக் கடைப்பிறப்பி னுட் கிடப்பதைத் தவிர்த்து ... அடியோடு இந்த இழிவான பிறப்பினுள் விழுந்து கிடப்பதிலிருந்தும் நீக்கி, முத்தி சற்று எனக்களிப்பது ஒருநாளே ... மோக்ஷ இன்பத்தை சிறிது நீ எனக்கு அளித்தருளும் ஒரு பாக்கிய நாள் கிடைக்குமா? வெற்பளித்த தற்பரைக்கு இடப்புறத்தை யுற்றளித்த ... இமயமலை அரசன் போற்றி வளர்த்த பராசக்தியான பார்வதிக்கு தன் இடது பாகத்தை அன்புடன் அளித்த வித்தக அத்தர் பெற்ற கொற்ற மயில்வீரா ... ஞான முதல்வரான சிவபிரான் பெற்ற வெற்றி மயில் வீரனே, வித்தை தத்வ முத்தமிழ்ச்சொல் அத்த சத்தம் வித்தரிக்கு ... கல்வி, உண்மை இவை இடம் பெற்ற முத்தமிழ் மொழியின் சொல்லும் பொருளோசையும் நீடித்திருக்கும் மெய்த்திருத்தணிப்பொருப்பில் உறைவோனே ... மெய்ம்மைத் திருத்தணி மலையில் வாழ்பவனே, கற்பகப்புனக்குறத்தி கச்சடர்த்த சித்ர முற்ற ... கற்பக விருட்சங்கள் போன்ற மரங்கள் உள்ள வள்ளிமலைப் புனத்தில் வாழும் குறத்தி வள்ளியின் கச்சு நெருக்கும் அழகுள்ள கற்புரத்திருத்தனத்தில் அணைவோனே ... பச்சைக் கற்பூர மணம் வீசும் திருமார்பை அணைபவனே, கைத்து அரக்கர் கொத்து கச்சினத்து வஜ்ரனுக்கு அமைத்த ... பகைத்த அரக்கர் கூட்டம் சிதறுண்டு அழியுமாறு கோபித்து, வஜ்ராயுதனாம் இந்திரனுக்கு சூரன் இட்ட கைத்தொ ழுத்த றித்து விட்ட பெருமாளே. ... கை விலங்கை முறித்தெறிந்து அருளிய பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.727 pg 1.728 pg 1.729 pg 1.730 WIKI_urai Song number: 301 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) பாடல் ரா - 1 song R1 பாடல் ரா - 2 song R2 | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
Song 288 - poR padhaththinai (thiruththaNigai) poRpadhaththinai thudhiththu naRpadhaththil utrabakthar poRpu raiththu nekku rukka ...... aRiyAdhE puththagap pidhatrai vittu viththa gatthunaith thudhikka budhdhiyiR kalakka matru ...... ninaiyAdhE muRpadath thalath udhiththu piRpa daiththa kirthyamutri muRka daith thaviththu niththa ...... muzhalvEnai muttavik kadaippiRappin utkidappa dhaith thavirththu muththi satre nakka Lippa ...... dhoru nALE veRpa Liththa thaRpa raikki dappu Raththai utraLiththa viththa gaththar petra kotra ...... mayil veerA viththai thathva muththamizhsol aththa saththam viththarikku meyth thiruththaNip poruppil ...... uRaivOnE kaRpagap punak kuRaththi kachcha darththa chithram utra kaRpurath thiruth thanaththil ...... aNaivOnE kaiththarakkar koththu gachchinaththu vajranuk amaiththa kaiththo zhuththa Riththu vitta ...... perumALE. ......... Meaning ......... poRpadhaththinai thudhiththu naRpadhaththil utrabakthar: Many devotees worshipped Your hallowed feet and attained exalted status. poRpu raiththu nekku rukka aRiyAdhE: I am incapable of praising their greatness with a melting heart; puththagap pidhatrai vittu viththa gatthunaith thudhikka: nor am I able to give up the bookish blabberings and praise Your glory with true knowledge. budhdhiyiR kalakka matru ninaiyAdhE: I am not able to think of You with clarity. muRpadath thalath udhiththu piRpa daiththa kirthyamutri: I came in a hurry to be born in this world, and my later sinful deeds were aplenty. muRka daith thaviththu niththa muzhalvEnai: I roamed around every day from door to door desperately. muttavik kadaippiRappin utkidappa dhaith thavirththu: I was totally plunged in this rut of despicable birth. Saving me from this ordeal, muththi satre nakka Lippa dhoru nALE: will there be a day when You will grant me some liberation? veRpa Liththa thaRpa raikki dappu Raththai utraLiththa: He willingly gave the left half of His body to the Supreme Mother, the daughter of Mount Himavan. viththa gaththar petra kotra mayil veerA: He is Pure Consciousness Himself; and You are that SivA's Son, the victorious stalwart mounting the Peacock! viththai thathva muththamizhsol aththa saththam viththarikku: Tamil language has words of wisdom and truth, in all the three phases of literature, music and drama, whose meaning and sound last eternally (and can be heard) in meyth thiruththaNip poruppil uRaivOnE: the hills of ThiruththaNigai, which is Your abode! kaRpagap punak kuRaththi: There is VaLLi, the damsel of the KuRavAs, at the millet-field (in VaLLimalai) with plenty of trees like the wish-yielding KaRpaga; kachcha darththa chithramutra kaRpurath thiruth thanaththil aNaivOnE: and You hug her lovely bosoms with the fragrance of camphor, and fitted with tight blouses. kaiththarakkar koththu gachchinaththu: The hostile bunch of demons was driven away by Your rage, vajranuk amaiththa kaiththozhuth thaRiththu vitta perumALE.: and You broke the shackles into pieces, that were laid (by SUran) on the hands of IndrA, holding the weapon VajrA, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |