திருப்புகழ் 286 பொருவிக் கந்தொடு  (திருத்தணிகை)
Thiruppugazh 286 poruvikkandhodu  (thiruththaNigai)
Thiruppugazh - 286 poruvikkandhodu - thiruththaNigaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனனத் தந்ததனத் தனனத் தந்ததனத்
     தனனத் தந்ததனத் ...... தனதான

......... பாடல் .........

பொருவிக் கந்தொடடர்ச் செருவிக் கன்றொடுமிப்
     புதுமைப் புண்டரிகக் ...... கணையாலே

புளகக் கொங்கையிடத் திளகக் கொங்கையனற்
     பொழியத் தென்றல்துரக் ...... குதலாலே

தெருவிற் பெண்கள்மிகக் கறுவிச் சண்டையிடத்
     திரியத் திங்களுதிப் ...... பதனாலே

செயலற் றிங்கணையிற் றுயிலற் றஞ்சியயர்த்
     தெரிவைக் குன்குரவைத் ...... தரவேணும்

அருவிக் குன்றடையப் பரவிச் செந்தினைவித்
     தருமைக் குன்றவருக் ...... கெளியோனே

அசுரர்க் கங்கயல்பட் டமரர்க் கண்டமளித்
     தயில்கைக் கொண்டதிறற் ...... குமரேசா

தருவைக் கும்பதியிற் றிருவைச் சென்றணுகித்
     தழுவிக் கொண்டபுயத் ...... திருமார்பா

தரளச் சங்குவயற் றிரளிற் றங்குதிருத்
     தணிகைச் செங்கழநிப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பொரு விக் கந்தொடு அடர்ச் செரு இக்கன் தொடும் இப்
புதுமைப் புண்டரிகக் கணையாலே
... போர் புரிவதற்கு உரிய
மலர்ப் பாணங்களின் கொத்துடன் நெருங்கிச் சண்டை செய்ய
வந்த, கரும்பு வில் ஏந்திய, மன்மதன் செலுத்தும் இந்தப் புதுமை
வாய்ந்த தாமரை அம்புகளால்,

புளகக் கொங்கை இடத்து இளகக் கொங்கை அனல்
பொழியத் தென்றல் துரக்குதலாலே
... புளகாங்கிதம் கொண்ட
மார்பகங்களில் நெகிழ்ச்சி ஏற்பட்ட பூந்தாதுகள் நெருப்பை வீச,
தென்றல் காற்று சோர்வடையச் செய்ய,

தெருவில் பெண்கள் மிகக் கறுவிச் சண்டை இடத் திரியத்
திங்கள் உதிப்பதனாலே
... வீதியில் பெண்கள் மிகுதியாகப் பகை
கொண்டு வசைமொழி பேசி சண்டையிடுவதற்காக அங்குமிங்கும்
திரிய, நிலா உதித்து (எரிக்கும்) கிரணங்களை வீசுவதாலே,

செயல் அற்று இங்கு அணையில் துயில் அற்று அஞ்சி
அயர்த்(த) தெரிவைக்கு உன் குரவைத் தர வேணும்
...
செயல் எதுவும் செய்ய முடியாமல், இங்கு படுக்கையில் தூக்கம்
இல்லாமல் அச்சத்துடனும் சோர்வுடனும் கிடக்கும் இந்தப்
பெண்ணுக்கு உன் குரா மாலையைத் தந்து அருள வேண்டும்.

அருவிக் குன்று அடையப் பரவிச் செம் தினைவித்த
அருமைக் குன்றவருக்கு எளியோனே
... நீரருவி விழும் வள்ளி
மலை முழுவதும் (வள்ளி வாழ்ந்திருந்தமையால் புனித நிலமாகப்)
போற்றித் திரிந்து செந்தினைப் பயிரை விதைத்திருந்த அருமையான
வேடர்களுக்கு மிக எளிமையாக நின்றவனே,

அசுரர்க்கு அங்கு அயல் பட்டு அமரர்க்கு அண்டம் அளித்து
அயில் கைக் கொண்ட திறல் குமரேசா
... அசுரர்களுக்கு
அங்குப் பகைவனாய் நின்று, தேவர்களுக்கு உரிய உலகை
அவர்களுக்குக் கொடுத்து, வேலாயுதத்தைக் கையில் கொண்ட
வலிமை வாய்ந்த குமரேசனே,

தரு வைக்கும் பதியில் திருவைச் சென்று அணுகித் தழுவிக்
கொண்ட புயத் திரு மார்பா
... (கற்பக) மரங்கள் வைத்துள்ள
அமராவதி நகரில் லக்ஷ்மி போல் இருக்கும் தேவயானையை போய்ச்
சேர்ந்து தழுவிக் கொண்ட புயங்களைக் கொண்ட அழகிய மார்பனே,

தரளச் சங்கு வயல் திரளில் தங்கு திருத்தணிகைச்
செம் கழநிப் பெருமாளே.
... முத்தும், சங்குகளும் வயல்களில்
கூட்டமாகக் கிடக்கும் திருத்தணிகையில் வீற்றிருந்து செங்கழு
நீர் மலரைப் புனையும் பெருமாளே.


இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த
தலைவிக்காக பாடியது. மன்மதன், மலர்க் கணைகள், தென்றல் காற்று, வசை மொழி
பேசும் பெண்கள், சந்திரன் - இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.723  pg 1.724 
 WIKI_urai Song number: 299 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 286 - poruvik kandhodu (thiruththaNigai)

poruvik kanthodadarc cheruvik kanRodumip
     puthumaip puNdarikak ...... kaNaiyAlE

puLakak kongaiyidath thiLakak kongaiyanaR
     pozhiyath thenRalthurak ...... kuthalAlE

theruviR peNkaLmikak kaRuvic chaNdaiyidath
     thiriyath thingaLuthip ...... pathanAlE

seyalat RingaNaiyit Ruyilat Ranjiyayarth
     therivaik kunkuravaith ...... tharavENum

aruvik kunRadaiyap paravic chenthinaivith
     tharumaik kunRavaruk ...... keLiyOnE

asurark kangayalpat tamarark kaNdamaLith
     thayilkaik koNdathiRaR ...... kumarEsA

tharuvaik kumpathiyit Riruvaic chenRaNukith
     thazhuvik koNdapuyath ...... thirumArpA

tharaLac changuvayat RiraLit Ranguthiruth
     thaNikaic chengazhanip ...... perumALE.

......... Meaning .........

poru vik kanthodu adarc cheru ikkan thodum ip puthumaip puNdarikak kaNaiyAlE: He closes in to wage a war, bearing a bow of sugarcane and a combative bunch of flower arrows; that Manmathan, God of Love, wields a novel weapon, namely, a lotus arrow that causes

puLakak kongai idaththu iLakak kongai anal pozhiyath thenRal thurakkuthalAlE: goose bumps in her bosom on which the pollens from the flower fling fire; the southerly breeze makes her disheartened;

theruvil peNkaL mikak kaRuvic chaNdai idath thiriyath thingaL uthippathanAlE: the scandal-mongering women, with extreme rancour, are moving about hither and thither on the street in order to fight; the crescent moon has risen spreading (scorching) rays; because of all these,

seyal atRu ingu aNaiyil thuyil atRu anji ayarth(tha) therivaikku un kuravaith thara vENum: she has been rendered immobile and is laid up sleepless here on the bed, filled with fear and sadness; You have to kindly grant this young girl Your garland of kurA flowers!

aruvik kunRu adaiyap paravic chem thinaiviththa arumaik kunRavarukku eLiyOnE: You are friendly and accessible to the dear hunters who roam about in the entire region of VaLLimalai worshipping it (as the sacred ground where VaLLi lived) and planting seeds of red millet!

asurarkku angu ayal pattu amararkku aNdam aLiththu ayil kaik koNda thiRal kumarEsA: You stood there as a formidable enemy to the demons and handed over to the celestials their rightful land; You hold the powerful spear in Your hand, Oh valorous Lord KumarA!

tharu vaikkum pathiyil thiruvaic chenRu aNukith thazhuvik koNda puyath thiru mArpA: You went to the celestial town of AmarAvathi, where kaRpaga trees abound, and hugged DEvayAnai, looking like Goddess Lakshmi, with Your hallowed chest, Oh Lord!

tharaLac changu vayal thiraLil thangu thiruththaNigaic chem kazhanip perumALE.: Pearls and conch-shells are found in heaps in the paddy fields of this town, ThiruththaNigai, Your abode, where You are seated wearing the red lily garland, Oh Great One!


This song has been written in the Nayaka-Nayaki BhAva portraying the pangs of separation of the heroine from Lord Murugan.
The Love God, the flowery arrows, the southerly breeze, the scandal-mongering women and the moon are some of the sources which aggravate the agony of separation from the Lord.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 286 poruvik kandhodu - thiruththaNigai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]