திருப்புகழ் 250 எனை அடைந்த  (திருத்தணிகை)
Thiruppugazh 250 enaiadaindha  (thiruththaNigai)
Thiruppugazh - 250 enaiadaindha - thiruththaNigaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தந்த தத்த தனன தந்த தத்த
     தனன தந்த தத்த ...... தனதான

......... பாடல் .........

எனைய டைந்த குட்டம் வினைமி குந்த பித்த
     மெரிவ ழங்கு வெப்பு ...... வலிபேசா

இகலி நின்ற லைக்கு முயல கன்கு லைப்பொ
     டிரும லென்று ரைக்கு ...... மிவையோடே

மனைகள் பெண்டிர் மக்கள் தமைநி னைந்து சுத்த
     மதிம யங்கி விட்டு ...... மடியாதே

மருவி யின்றெ னக்கு மரக தஞ்சி றக்கு
     மயிலில் வந்து முத்தி ...... தரவேணும்

நினைவ ணங்கு பத்த ரனைவ ருந்த ழைக்க
     நெறியில் நின்ற வெற்றி ...... முனைவேலா

நிலைபெ றுந்தி ருத்த ணியில்வி ளங்கு சித்ர
     நெடிய குன்றில் நிற்கு ...... முருகோனே

தினைவி ளங்க லுற்ற புனஇ ளங்கு றத்தி
     செயல றிந்த ணைக்கு ...... மணிமார்பா

திசைமு கன்தி கைக்க அசுர ரன்ற டைத்த
     சிறைதி றந்து விட்ட ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

எனையடைந்த குட்டம் வினைமிகுந்த பித்தம் ... எனக்கு வந்த
குஷ்டநோய், வினைக்கு ஈடாக மிகுந்துவரும் பித்த நோய்,

எரிவழங்கு வெப்பு ... கொதிப்பைத் தருகிற காய்ச்சல்,

வலிபேசா இகலி நின்றலைக்கு முயலகன் ... சொல்ல முடியாத
வலியோடு, மாறுபட்டுத் துயர்தந்து வருத்தும் முயலகன் என்ற
வலிப்புநோய்,

குலைப்பொடு இருமலென்று உரைக்கும் இவையோடே ...
நடுக்க நோயுடன், இருமல் எனச் சொல்லப்படும் இந்த
நோய்களுடனே தவித்து,

மனைகள் பெண்டிர் மக்கள் தமைநினைந்து ... வீடுகள், பெண்டிர்,
மக்கள் என்ற இவர்களை நினைந்து வருந்தி,

சுத்த மதிம யங்கி விட்டு மடியாதே ... நல்லறிவு மயங்கிப்போய்
அடியேன் இறக்காதவண்ணம்,

மருவியின்றெ னக்கு மரகதம் சிறக்கு மயிலில் ... நீ இன்று
என்முன் தோன்றி, மரகத ஒளிவீசும் பச்சைமயில் வாகனத்தில்

வந்து முத்தி தரவேணும் ... வந்து எனக்கு பேரின்ப முக்தியை
அருள்வாயாக.

நினைவ ணங்கு பத்தரனைவருந்தழைக்க ... உன்னைத் தொழும்
அடியார்கள் யாவரும் சுகத்துடன் இருக்கும்படி

நெறியில் நின்ற வெற்றி முனைவேலா ... அதற்கான வழியில்
அவர்களுடன் நின்று, கையில் வெற்றிபெறும் கூரிய வேலாயுதத்துடன்
நிற்கும் வேலனே,

நிலைபெ றுந்திருத்த ணியில்விளங்கு ... அழியாத திருத்தணிகைப்
பதியில் விளங்குகின்ற

சித்ர நெடிய குன்றில் நிற்கு முருகோனே ... அழகிய நெடிய
குன்றத்தில் எழுந்தருளியுள்ள முருகனே,

தினைவிளங்கலுற்ற புனஇளங்குறத்தி ... தினைப்பயிர் செழிப்பாக
வளர்ந்துள்ள புனத்தில் வாழும் இளம் குமரியான குற வள்ளியை,

செயலறிந்து அணைக்கு மணிமார்பா ... அவளுடைய
அன்புச்செயலை அறிந்து அணைக்கின்ற அழகிய திருமார்பினனே,

திசைமுகன்திகைக்க அசுரர் அன்றடைத்த ... பிரமதேவன்
திகைக்குமாறு அசுரர்கள் அந்நாளில் தேவர்களை அடைத்துவைத்த

சிறைதிறந்து விட்ட பெருமாளே. ... சிறைகளைத் திறந்து விட்டு
தேவர்களை விடுவித்த பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.665  pg 1.666  pg 1.667  pg 1.668 
 WIKI_urai Song number: 276 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 250 - enai adaindha (thiruththaNigai)

enai adaindha kuttam vinai migundha piththam
     eri vazhangu veppu ...... vali pEsA

igali nin dralaikkum muyalagan kulaippod
     irumal endruraikkum ...... ivaiyOdE

manaigaL peNdir makkaL thamai ninaindhu sudhdha
     madhi mayangi vittu ...... madiyAdhE

maruvi indrenakku marakatham siRakku
     mayilil vandhu muththi ...... tharavENum

ninai vaNangu baththar anaivarum thazhaikka
     neRiyil nindra vetri ...... munai vElA

nilaipeRun thiruth thaNiyil viLangu chithra
     nediya kundril niRku ...... murugOnE

thinai viLangal utra puna iLang kuRaththi
     seyal aRindhaNaikkum ...... aNimArbA

dhisaimukan thigaikka asurar andradaiththa
     siRai thiRandhu vitta ...... perumALE.

......... Meaning .........

enai adaindha kuttam vinai migundha piththam: Leprosy that has afflicted me, biliousness that has attacked me due to my bad deeds,

eri vazhangu veppu: fever that makes me feel as if my body is on fire,

vali pEsA igali nindralaikkum muyalagan: convulsion (known as muyalakan) that shakes my body with unspeakable pain,

kulaippod irumal endruraikkum ivaiyOdE: constant twitching and coughing bouts - with all these diseases,

manaigaL peNdir makkaL thamai ninaindhu: I still keep thinking of my houses, women and children!

sudhdha madhi mayangi vittu madiyAdhE: I do not want to die in utter delusion with my mind in total stupor.

maruvi indrenakku marakatham siRakku mayilil vandhu muththi tharavENum: Please grant me today Your vision, mounted on the emerald-green peacock, and bestow blissful liberation on me.

ninai vaNangu baththar anaivarum thazhaikka: You bless all the devotees who worship You

neRiyil nindra vetri munai vElA: standing, along with Your sharp and triumphant spear, right with them on their way to prosperity.

nilaipeRun thiruth thaNiyil viLangu chithra nediya kundril niRku murugOnE: Oh MurugA, You chose Your abode at the beautiful and tall mountain in the immortal town of ThiruththaNigai!

thinai viLangal utra puna iLang kuRaththi: The young damsel of the KuRavAs, VaLLi, lived in the field of VaLLimalai, known for an abundant growth of millet,

seyal aRindhaNaikkum aNimArbA: and You embraced her with Your hallowed chest, knowing her devotion towards You.

dhisaimukan thigaikka asurar andradaiththa: The celestials were once imprisoned by the demons to the consternation of BrahmA;

siRai thiRandhu vitta perumALE.: and You unlocked those prisons and liberated the DEvAs, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 250 enai adaindha - thiruththaNigai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]