திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 234 வார்குழலை (சுவாமிமலை) Thiruppugazh 234 vArkuzhalai (swAmimalai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தானன தத்தன தத்தன தத்தன தானன தத்தன தத்தன தத்தன தானன தத்தன தத்தன தத்தன ...... தந்ததான ......... பாடல் ......... வார்குழ லைச்சொரு கிக்கரு விற்குழை காதொடி ணைத்தசை யக்கதிர் பற்கொடு வாயிதழ் பொற்கம லர்க்குமி ழொத்துள ...... துண்டக்ரீவ வார்கமு கிற்புய நற்கழை பொற்குவ டாடிள நிர்ச்சுரர் பொற்குட மொத்திணை மார்பழ கிற்பொறி முத்தொளிர் சித்திர ...... ரம்பைமாதர் காருறும் வித்திடை யிற்கத லித்தொடை சேரல்குல் நற்பிர சத்தட முட்கொடு கால்மறை யத்துவ ளச்செறி பொற்கலை ...... யொண்குலாவக் கார்குயி லைக்குர லைக்கொடு நற்றெரு மீதில்நெ ளித்துந கைத்துந டிப்பவர் காமனு கப்பம ளிச்சுழல் குத்திரர் ...... சந்தமாமோ சூரர்ப தைக்கர வுட்கிநெ ளித்துய ராழியி ரைப்பநி ணக்குட லைக்கழு சூழந ரிக்கெரு டக்கொடி பற்பல ...... சங்கமாகச் சூழ்கிரி யைக்கைத டித்தும லைத்திகை யானையு ழற்றிந டுக்கிம தப்பொறி சோரந கைத்தயி லைக்கொடு விட்டருள் ...... செங்கைவேலா ஏரணி நற்குழ லைக்கக னச்சசி மோகினி யைப்புணர் சித்தொரு அற்புத வேடமு தச்சொரு பத்தகு றத்திம ...... ணங்கொள்வோனே ஏரக வெற்பெனு மற்புத மிக்கசு வாமிம லைப்பதி நிற்குமி லக்ஷண ராஜத லக்ஷண லக்ஷுமி பெற்றருள் ...... தம்பிரானே. ......... சொல் விளக்கம் ......... வார் குழலைச் சொருகிக் கரு வில் குழை காதொடு இணைத்து அசையக் கதிர் பல் கொ(ண்)டு வாய் இதழ் பொற்க மலர்க் குமிழ் ஒத்து உளதுண்ட ... நீண்ட கூந்தலை சொருகி, பெரிய பிரகாசம் பொருந்திய குண்டலங்கள் அணிந்துள்ள காதுடன் பொருந்தி அசையும்படி விட்டும், ஒளி வீசும் பற்கள் கொண்டும், வாய் இதழ் அழகு செய்ய குமிழ மலர் போன்ற மூக்கைக் கொண்டும், க்ரீவ வார் கமுகில் நல் கழை பொன் குவடு ஆடு இள நிர்ச் சுரர் பொன் குடம் ஒத்த இணை மார்பு அழகில் பொறி முத்து ஒளிர் சித்திர ரம்பை மாதர் ... கழுத்தாகிய நீண்ட கமுகு கொண்டும், புயங்களாகிய பசிய மூங்கில் கொண்டும், பொன் மலை போன்றும், ஆடும் இள நீர் போன்றும், தேவர்களின் (அமுதம் கொண்ட) அழகிய குடம் போன்றும் விளங்கும் இரண்டு மார்பகங்கள் கொண்டும், மார்பில் அழகான தேமலுடன், முத்து மாலை கொண்டும் ஒளி வீசும் அழகிய ரம்பை போன்ற விலைமாதர்கள். கார் உறும் வித்து இடையில் கதலித் தொடை சேர் அல்குல் நல் பிரசம் தடம் உள் கொடு கால் மறையத் துவளச் செறி பொன் கலை ஒண் குலாவ ... கார்மேகத்தில் காணப்படும் மின்னல் போன்ற இடையும், வாழைத் தண்டு போன்ற தொடையும், (அங்கு) சேர்ந்துள்ள பெண்குறியாகிய தேன் பொதிந்துள்ள இடமும் உள்ளிருக்க, உள்ளங்கால் அளவும் மறையும்படி தொங்கி நெருங்கும் அழகிய புடைவை நன்கு விளங்க, கார் குயிலைக் குரலைக் கொ(ண்)டு நல் தெரு மீதில் நெளித்து நகைத்து நடிப்பவர் காமன் உகப்ப அமளிச் சுழல் குத்திரர் சந்தம் ஆமோ ... கரிய குயிலின் குரல் போன்ற குரலுடன், அழகிய தெருவீதியில் உடலை நெளித்தும், நகை புரிந்தும் நடிப்பவர்கள். மன்மதன் மகிழும்படி படுக்கையில் புரளுகின்ற வஞ்சகர்கள் ஆகிய பொது மாதர்களின் அழகில் ஈடுபடுதல் ஆகுமோ? சூரர் பதைக்க அர உட்கி நெளித்து உயர் ஆழி இரைப்ப நிணக் குடலைக் கழு சூழ் நரிக் கெருடக் கொடி பற்பல சங்கமாகச் சூழ் கிரியைக் கை தடித்து ... அசுரர்கள் பதைக்கவும் ஆதிசேஷன் பயந்து நெளியவும், பெரிய கடல் ஓலமிட்டு ஒலிக்கவும், மாமிசக் குடலை கழுகுகள் சூழவும், நரிகளும், கருடன்களும், காக்கைகளும் பல கூட்டமாய் நெருங்கவும், (வஞ்சனை எண்ணம் கொண்ட) கிரவுஞ்ச மலையின் ஆற்றலை அழித்து, மலைத் திகை யானை உழற்றி நடுக்கி மதப் பொறி சோர நகைத்து அயிலைக் கொ(ண்)டு விட்டு அருள் செம் கை வேலா ... (எட்டுத் திக்கில் உள்ள) மலைகளையும் யானைகளையும் அலையுண்ணச் செய்து நடுங்க வைத்து, அவைகளின் மதம் பூண்ட அறிவு குலையும் வண்ணம் நகைத்து, வேலைக் கொண்டு செலுத்தி அருள் செய்த செங்கை வேலனே, ஏர் அணி நல் குழலைக் ககனச் சசி மோகினியை புணர்ச்சி சித்த ஒரு அற்புத வேட அமுதச் சொருபத்த குறத்தி மணம் கொள்வோனே ... அழகுள்ள சிறந்த கூந்தலை உடையவளும் விண்ணுலகத்தில் உள்ள இந்திராணி பெற்ற பேரழகியுமாகிய தேவயானையைச் சேர்ந்த சித்தனே*, ஒப்பற்ற அற்புதமான வேடர் குலத்தில் உதித்த அமுத சொரூபியான குறமகள் வள்ளியை மணம் கொண்டவனே, ஏரக(ம்) வெற்பு எ(ன்)னும் அற்புத மிக்க சுவாமி மலைப் பதி நிற்கும் இலக்ஷண ... திருவேரக மலை என்னும் அற்புதம் மிகுந்த சுவாமி மலைப் பதியாகிய தலத்தில் நிற்கும் அழகனே, ராஜத லக்ஷண லக்ஷுமி பெற்று அருள் தம்பிரானே. ... லக்ஷ்மி போன்ற ராஜத** குணம் படைத்த பார்வதி பெற்றருளிய தம்பிரானே. |
* சித்தன் முருகனுக்கு ஒரு பெயர் - மனத்தைக் கொள்ளை கொள்பவன். |
** ஸத்வம், ராஜஸம், தாமசம் என்ற முக்குணங்களில் லக்ஷ்மிக்கு ராஜஸ குணம் ஏற்பிக்கப்படுகிறது. லக்ஷ்மி அருள் மழை பொழிந்து செல்வங்களை வலியக் கொடுக்கும் தெய்வம். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.483 pg 1.484 pg 1.485 pg 1.486 WIKI_urai Song number: 198 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 234 - vArkuzhalai (swAmimalai) vArkuzha laicchoru kikkaru viRkuzhai kAthodi Naiththasai yakkathir paRkodu vAyithazh poRkama larkkumi zhoththuLa ...... thuNdakreeva vArkamu kiRpuya naRkazhai poRkuva dAdiLa nircchurar poRkuda moththiNai mArpazha kiRpoRi muththoLir chiththira ...... rampaimAthar kAruRum viththidai yiRkatha liththodai sEralkul naRpira saththada mutkodu kAlmaRai yaththuva LaccheRi poRkalai ...... yoNkulAvak kArkuyi laikkura laikkodu natReru meethilne Liththuna kaiththuna dippavar kAmanu kappama Licchuzhal kuththirar ...... santhamAmO cUrarpa thaikkara vutkine Liththuya rAzhiyi raippani Nakkuda laikkazhu cUzhana rikkeru dakkodi paRpala ...... sangamAkac cUzhkiri yaikkaitha diththuma laiththikai yAnaiyu zhatRina dukkima thappoRi sOrana kaiththayi laikkodu vittaruL ...... sengaivElA EraNi naRkuzha laikkaka nacchasi mOkini yaippuNar siththoru aRputha vEdamu thacchoru paththaku Raththima ...... NamkoLvOnE Eraka veRpenu maRputha mikkasu vAmima laippathi niRkumi lakshaNa rAjatha lakshaNa lakshumi petRaruL ...... thambirAnE. ......... Meaning ......... vAr kuzhalaic chorukik karu vil kuzhai kAthodu iNaiththu asaiyak kathir pal ko(N)du vAy ithazh poRka malark kumizh oththu uLathuNda: Tying their long hair into a tuft, they let it brush the ears that wear large and bright swinging studs; with their dazzling teeth, prominent nose that, along with the beautiful lips, forms a beautiful shape like the kumizha flower, kreeva vAr kamukil nal kazhai pon kuvadu Adu iLa nirch curar pon kudam oththa iNai mArpu azhakil poRi muththu oLir chiththira rampai mAthar: their neck that is long like the branch of the betelnut tree, their shoulders that look like the soft fresh bamboo-shoots, their two breasts that are comparable to the golden mountain, green coconuts that swing and the beautiful nectar-filled pot of the celestials and with their decolorised bosom adorned by strings of radiating pearls, these whores look like the pretty celestial maid, Rambai; kAr uRum viththu idaiyil kathalith thodai sEr alkul nal pirasam thadam uL kodu kAl maRaiyath thuvaLac cheRi pon kalai oN kulAva: their waist is like the lightning that flashes amidst the dark clouds; their thigh is like the stem of the plantain tree and their genital, filled with honey, remains in between; their beautiful sari, concealing their body right down to the feet, looks elegant; kAr kuyilaik kuralaik ko(N)du nal theru meethil neLiththu nakaiththu nadippavar kAman ukappa amaLic chuzhal kuththirar santham AmO: with the sweet voice of the black cuckoo, they trod on the beautiful streets gesturing with their body and acting with feigned smile; these treacherous whores roll on the bed pleasing Manmathan (God of Love); why am I so much enamoured of their beauty? cUrar pathaikka ara utki neLiththu uyar Azhi iraippa niNak kudalaik kazhu cUzh narik kerudak kodi paRpala sangamAkac chUzh kiriyaik kai thadiththu: The demons trembled; the serpent AdhisEshan wriggled out of fear; the vast sea screamed with a roaring noise; eagles circled around human intestines; foxes, vultures and crows swarmed in multitude; the treacherous mount Krouncha was rendered powerless; malaith thikai yAnai uzhatRi nadukki mathap poRi chOra nakaiththu ayilaik ko(N)du vittu aruL sem kai vElA: the mountains and elephants in the eight cardinal directions were shaken and made to shudder; and the (elephants') frenzy was destroyed when You laughed graciously, wielding the spear from Your reddish hand, Oh Lord! Er aNi nal kuzhalaik kakanac chasi mOkiniyai puNarcchi siththa oru aRputha vEda amuthac chorupaththa kuRaththi maNam koLvOnE: She has gorgeous and rich hair; She is the exquisitely beautiful daughter of IndirANi, of the Celestial World; You wedded that DEvayAnai, Oh ChiththA!* She was born in the lineage of the matchless and amazing hunters; She is an embodiment of sweet nectar; and You married that VaLLi, the damsel of the KuRavAs, Oh Lord! Eraka(m) veRpu e(n)num aRputha mikka suvAmi malaip pathi niRkum ilakshaNa: Oh Handsome One, You have Your abode in the miracle-filled Mount SwAmimalai, known as ThiruvErakam! rAjatha lakshaNa lakshumi petRu aruL thambirAnE.: You were delivered by PArvathi who is bestowed with the attribute of rAjasam** (aggressiveness) like Goddess Lakshmi, Oh Great One! |
* Chiththan is another name for Murugan - meaning that He captivates the mind. |
** Of the three attributes namely, sathwam (tranquility), rAjasam (aggressiveness) and thAmasam (sluggishness), Lakshmi is attributed with aggressiveness in showering material benefits, such as wealth. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |