பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/484

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேரகம்) திருப்புகழ் உரை 11 198 நீண்ட கூந்தலைச் சொருகி, (அக்கூந்தலைப்) பெரிய, பிரகாசம் பொருந்திய குழை யணிந்துள்ள காதுடன் பொருத்தி அசையும்படி விட்டும், ஒளிவிடும் பற்கள் கொண்டும், வாய் இதழ் அழகு செய்ய, குமிழமலர் போன்றுள்ள மூக்கு (கொண்டும்). கழுத்தாகிய * * நீண்ட கமுகு கொண்டும், புஜங்களாகிய பசிய மூங்கில் (அல்லது கரும்பு) கொண்டும், பொன் மலை (மேரு) போன்றும் ஆடும் இளநீர் போன்றும், தேவர் (அமுதைக் கொண்ட) அழகிய குடம் போன்றும் ணைந்துள்ள இரண்டு கொங்கைகள் கொண்டும், மார்பில் அழகான தேமல், முத்துமாலை கொண்டும் விளங்கும் அழகிய ரம்பை போன்ற (வின்ல) மாதர்கள். மேகத்திற் காணப்படும் மின்னல் போன்ற இடையும், வாழை போன்ற துடையும் (அங்குச்) சேர்ந்துள்ள அல்குலாகிய தேன் பொதிந்துள்ள இடமும், உள்ளிருக்கக், கால்வரையும் மறையும்படி தொங்கி நெருங்கும் அழகிய புடைவை நன்கு விளங்க. கரிய குயிலின் குரல் போன்ற குரலுடன் அழகிய தெருவீதியில் உடலை நெளித்தும், நகை புரிந்தும், நடிப்பவர்கள், மன்மதனும் மகிழும்படி படுக்கையிற் புரளும் வஞ்சகர்கள் - (ஆகிய பொது மக்ளிரின்) அழகில் ஈடுபடுதல் ஆமோ? (ஆகாது என்றபடி). சூரர்கள்(அசுரர்கள்) பதைக்கவும், ஆதிசேடன் பயந்து நெளியவும் (உடல் வளையவும்), பெரிய கடல் ஒலிக்கவும், மாமிசக் குடலைக் கழுகுகள் சூழவும், நரி, கருடன், காக்கை இவை பல பல கூட்டமாய் நெருங்க. வஞ்சனை எண்ணங் கொண்ட (கிரெளஞ்ச) மலையின் ற்றல்ை அழித்து (எட்டுத் திக்கில் உள்ள) மலைகளையும், (திசை) யானைகளையும் (அல்லது கடலையும் திசை யானைகளையும்) அலையுண்ணச் செய்து நடுங்க வைத்து, அவைகளின் மதம் பூண்ட அறிவு குலையும் வண்ணம் நகைத்து, வேல்கொண்டு செலுத்தி அருளின செங்கை வேலனே!