(இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு எனது முக்கியக் குறிப்பைப் படியுங்கள் - நன்றி).
(Please read my important note before using this website - Thank You).
திருப்புகழ் 232 வாதமொடு சூலை  (சுவாமிமலை)
Thiruppugazh 232 vAthamodusUlai  (swAmimalai)
Thiruppugazh - 232 vAthamodusUlai - swAmimalaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

mp3
 
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானதன தான தந்த தானதன தான தந்த
     தானதன தான தந்த ...... தனதான

......... பாடல் .........

வாதமொடு சூலை கண்ட மாலைகுலை நோவு சந்து
     மாவலிவி யாதி குன்ம ...... மொடுகாசம்

வாயுவுட னேப ரந்த தாமரைகள் பீன சம்பின்
     மாதர்தரு பூஷ ணங்க ...... ளெனவாகும்

பாதகவி யாதி புண்க ளானதுட னேதொ டர்ந்து
     பாயலைவி டாது மங்க ...... இவையால்நின்

பாதமல ரான தின்க ணேயமற வேம றந்து
     பாவமது பான முண்டு ...... வெறிமூடி

ஏதமுறு பாச பந்த மானவலை யோடு ழன்று
     ஈனமிகு சாதி யின்க ...... ணதிலேயான்

ஈடழித லான தின்பின் மூடனென வோது முன்புன்
     ஈரஅருள் கூர வந்து ...... எனையாள்வாய்

சூதமகிழ் பாலை கொன்றை தாதுவளர் சோலை துன்றி
     சூழுமதில் தாவி மஞ்சி ...... னளவாகத்

தோரணநன் மாட மெங்கு நீடுகொடி யேத ழைந்த
     சுவாமிமலை வாழ வந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

வாதமொடு சூலை கண்டமாலை குலை நோவு சந்து மா வலி
வியாதி குன்மமொடு காசம்
... வாத நோய், வயிற்றுளைவு நோய்,
கழுத்தைச் சுற்றி வரும் புண் கட்டி, மார்பு எரிச்சல், எலும்புருக்கி நோய்,
பெரிய இழுப்பு நோய், மகோதரத்துடன், கோழை நோய்,

வாயுவுடனே பரந்த தாமரைகள் பீனசம் பின் மாதர் தரு
பூஷணங்கள் என ஆகும்
... வாயுவினால் உண்டாகும் படர்தாமரை
போன்ற சொறி, படை, மூக்கடைப்பு, பின்னும் ஒழுக்கம் கெட்ட
விலைமாதர்களுடன் இணைவதால் கிடைக்கும் ஆபரணங்கள்
என்று சொல்லத்தக்க புண் வகைகள்,

பாதக வியாதி புண்கள் ஆனது உடனே தொடர்ந்து பாயலை
விடாது மங்க
... பாவ நோய்ப் புண்கள் ஆகிய இவை உடனே
என்னைப் பீடிப்பதால், படுக்கையை விடாது கிடந்து, உடல்
நலம் குறைந்து,

இவையால் நின் பாத மலரானதின் கண் நேயம் அறவே
மறந்து பாவ மதுபானம் உண்டு வெறி மூடி
... இக்காரணத்தால்
உனது திருவடி மலர்களில் அன்பு என்பதை முற்றும் மறந்து, பாவம்
நிறைந்த கள்ளைக் குடித்து, அதனால் மயக்கம் மிகுந்து,

ஏதம் உறு பாச பந்தமான வலையோடு உழன்று ஈனம் மிகு
சாதியின் கண் அதிலே
... குற்றம் தரும் பந்த பாசக் கட்டுகளான
வலையில் அகப்பட்டு அலைந்து, இழிவான என் ஜாதித்
தொழில்களிலே ஈடுபட்டு,

நான் ஈடு அழிதல் ஆனதின் பின் மூடன் என ஓது முன்பு
உன் ஈர அருள் கூர வந்து எனை ஆள்வாய்
... நான் வலிமை
அற்று அழிந்த பின், இவன் ஒரு முட்டாள் எனப் பிறர் கூறுவர்.
(அங்ஙனம் பிறர்) சொல்லுவதற்கு முன்பு உனது கருணை நிறைந்த
திருவருள் மிக்கு வந்து என்னை ஆட் கொள்வாயாக.

சூதம் மகிழ் பாலை கொன்றை தாது வளர் சோலை துன்றி
சூழும் மதில் தாவி மஞ்சின் அளவாக
... மாமரம், மகிழ மரம்,
பாலை மரம், கொன்றை மரம் (இவைகளின்) பூந்தாது நிறைந்துள்ள
சோலைகள் நெருங்கியுள்ளதும், சூழ்ந்துள்ள மதில் உயர்ந்து
மேகத்தை அளாவி நிற்பதும்,

தோரண நல் மாடம் எங்கும் நீடு கொடியே தழைந்த சுவாமி
மலை வாழ வந்த பெருமாளே.
... தோரணங்கள், நல்ல வீடுகளில்
எங்கும் உயர் கொடிகள் தழைந்துள்ளதுமான, சுவாமிமலையில் வாழ
வந்த பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.545  pg 1.546  pg 1.547  pg 1.548 
 WIKI_urai Song number: 228 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

YouTube  'YouTube' Links for this song  
  இப்பாடலுக்கான யூ ட்யூப் பதிவுகள்  

to come வரவிருக்கின்றது

 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 


Song 232 - vAthamodu sUlai (SwAmimalai)

vAthamodu sUlai kaNda mAlaikulai nOvu santhu
     mAvalivi yAthi kunma ...... modukAsam

vAyuvuda nEpa rantha thAmaraikaL peena sampin
     mAthartharu pUsha Nanga ...... LenavAkum

pAthakavi yAthi puNka LAnathuda nEtho darnthu
     pAyalaivi dAthu manga ...... ivaiyAlnin

pAthamala rAna thinka NEyamaRa vEma Ranthu
     pAvamathu pAna muNdu ...... veRimUdi

EthamuRu pAsa pantha mAnavalai yOdu zhanRu
     eenamiku sAthi yinka ...... NathilEyAn

eedazhitha lAna thinpin mUdanena vOthu munpun
     eerAruL kUra vanthu ...... enaiyALvAy

cUthamakizh pAlai konRai thAthuvaLar sOlai thunRi
     sUzhumathil thAvi manji ...... naLavAkath

thOraNanan mAda mengu needukodi yEtha zhaintha
     suvAmimalai vAzha vantha ...... perumALE.

......... Meaning .........

vAthamodu sUlai kaNdamAlai kulai nOvu santhu mA vali viyAthi kunmamodu kAsam: Rheumatism, ulcer, ring-worm around the neck, heartburn, tuberculosis, wheezing, edema of the stomach, asthma,

vAyuvudanE parantha thAmaraikaL peenasam pin mAthar tharu pUshaNangaL ena Akum: eczema due to gastritis, dermatitis, blockage of the nostrils, sexually transmitted diseases earned as medallions from immoral prostitutes,

pAthaka viyAthi puNkaL Anathu udanE thodarnthu pAyalai vidAthu manga: and laceration of the skin caused by sinful activities have all afflicted me, and I am laid up on the bed continually; my condition is sinking;

ivaiyAl nin pAtha malarAnathin kaN nEyam aRavE maRanthu pAva mathupAnam uNdu veRi mUdi: this has resulted in my utter failure to love Your hallowed feet, pushed me into drinking the sinful alcohol and left me inebriated;

Etham uRu pAsa panthamAna valaiyOdu uzhanRu eenam miku sAthiyin kaN athilE: I have been ensnared by the immoral web of attachment, making me indulge in the despicable chores of my low lineage;

nAn eedu azhithal Anathin pin mUdan ena Othu munpu un eera aruL kUra vanthu enai ALvAy: after I lose all my strength and begin to decay, people would declare openly that I am a fool; before others deride me like this, kindly take charge of me with full compassion and grace!

cUtham makizh pAlai konRai thAthu vaLar sOlai thunRi sUzhum mathil thAvi manjin aLavAka: This place is filled up with groves full of the pollens of flowers from mango, pAlai and kondRai (Indian laburnum) trees and is surrounded by tall fortress wall which rises sky-high touching the clouds;

thOraNa nal mAdam engum needu kodiyE thazhaintha suvAmi malai vAzha vantha perumALE.: this town is decorated with festoons and with tall flags flying over the beautiful houses; this is SwAmimalai, Your abode, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

mp3
 

Thiru Arunagirinathar's Thiruppugazh - 232 vAthamodu sUlai - swAmimalai


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

 மேலே   top