பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/546

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேரகம்) திருப்புகழ் உரை 73 அறுகு தாளி (தாளி அறுகு, மணம் வீசும் குவளை, மண மலராம் கரந்தை (திரு நீற்றுப் பச்சை) இவைகளையெல்லாம் நிரம்ப வாரி (உன் திருவடியின்) மேலே சொரிந்து உனது திருவடியை விரும்பித் தன்வசம் அழிந்து உருகுகின்ற "தொண்டருடன் கல்ந்து கூடி அதனால் விளையும் அன்பினால் அடிமை என்னும் ஒழுக்க முறைமையாகிய ஒரு பேற்றை (அடைய) அருள்வாயே அஞ்சாமை கொண்ட வீரர்களின் தலைகளை அரிந்து போர் செய்த குரன் உடலை (இரு கூறாகப்) பிளந்து, ஒலிக்கும் கடலை வற்றும்படி செய்து வென்ற கூரிய வேலனே! முத்துப் போன்ற ப்ற்களை உடைய உமை மாதின் கொங்கைகளில் நிரம்பப் பால் அமுதம் உண்டு, உலகு ஏை ழயும் வலம் வந்த வலிய மயில் வீரனே! குற்றமில்லாத தினை விளைந்த புனத்தை நீங்காது பரண் மீதிருந்து பலமான காவல் காத்த அணங்கு (வள்ளியின்) மணவாளனே! பொருந்திய புலி நகக் கொன்றை, அழகிய செருந்தி இவையுள்ள நந்தவனமும், மாமரக் காடும் நெருங்கி வளரும் சுவாமி மலையில் அமர்ந்துள்ள பெருமாளே! (அடிமையாகு முறைமை யொன்றை அருள்வாயே) 228 வாத நோய் (உடலில் வாயு மிகுதலால் வரும் நோய்), சூலை (வயிற்றுளைவு நோய்), கண்டமாலை (கழுத்தைச் சுற்றி உண்ட்ர்கும் புன் கட்டி), குலைநோவு (மார்பு எரிச்சல் நோய்), சந்து (எலும்பு கூடும் இடங்களில் நோய்), பெரிய் இழுப்பு நோய்கள் (அமர க்ன்ட் வலி, குமர கண்ட வலியிரம கண்ட் வல், காக்கை வ்லி, முயல் (முயலகன்) வலி என்னும் ஐவகை வலிகள்), குன்மம் (அஜீரணம் வயிற்று வலி முதலியன கானும் வயிற்று நோய்), காசம் (ஈளை, கோழை நோய்) h இங்குக் கேட்ட வரத்தை அருணகிரியார் பெற்றனர் என்பது 'இடுதலைச் சற்றுங் கருதேனை. அன்பாற் கெடுதலிலாத் தொண்டரிற் கூட்டியவா" என்னும் கந்தரலங்காரத்தால் (100) விளங்குகின்றது. 'சூரிற் கிரியிற் கதிர்வே லெறிந்தவன் தொண்டர் குழாம் சாரிற் கதியன்றி வேறிலை கான்" கந். அலங் (A9) என வருவதும் ஈண்டுக் காண்க