திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 226 பரவரிதாகி (சுவாமிமலை) Thiruppugazh 226 paravaridhAgi (swAmimalai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதன தானன, தனதன தானன தனதன தானன ...... தனதான ......... பாடல் ......... பரவரி தாகிய வரையென நீடிய பணைமுலை மீதினி ...... லுருவான பணிகளு லாவிட இழையிடை சாய்தரு பயிலிகள் வாள்விழி ...... அயிலாலே நிரவரி யோடியல் குழல்களி னாண்மலர் நிரைதரு மூரலி ...... னகைமீது நிலவியல் சேர்முக மதிலுயர் மாமயல் நிலையெழ வேயலை ...... வதுவாமோ அரவணை யார்குழை பரசிவ ஆரண அரனிட பாகம ...... துறைசோதி அமையுமை டாகினி திரிபுரை நாரணி அழகிய மாதருள் ...... புதல்வோனே குரவணி பூஷண சரவண தேசிக குககரு ணாநிதி ...... அமரேசா குறமக ளானைமின் மருவிய பூரண குருகிரி மேவிய ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... பரவ அரிதாகிய வரை என நீடிய பணை முலை மீதினில் உருவான பணிகள் உலாவிட ... வணங்கிப் போற்றுதற்கு அரியதான மலை என்னும்படி பரந்துள்ள பெரிய மார்பகங்களின் மேல் அலங்காரமான அணிகலன்கள் விளங்க, இழை இடை சாய் தரு பயிலிகள் வாள் விழி அயிலாலே ... நூல் போன்ற இடை சாயும்படி நடை பழகுபவருடைய ஒளி விளங்கும் அம்பு போன்ற கண்கள் மீதும், நிர வரியோடு இயல் குழல்களின் நாண் மலர் நிரை தரும் மூரலின் நகை மீது ... விரைந்து வரும் வண்டுகளோடு கூடியுள்ள கூந்தல்களின் புது மலர் மீதும், வரிசையாய் விளங்கி புன்சிரிப்பைக் காட்டும் பற்கள் மீதும், நிலவு இயல் சேர் முகம் அதில் உயர் மா மயல் நிலை எழவே அலைவது ஆமோ ... சந்திரனைப் போன்ற முகத்தின் மீதும் எழுகின்ற அதிக மோகம், நிலை பெற்று என் மனத்தில் தோன்றுவதால் என் நெஞ்சம் அலைபாயலாமோ? அரவு அணையார் குழை பர சிவ ஆரண அரன் இட பாகமது உறை சோதி ... பாம்பைப் பொருந்திய குண்டலமாக உடைய பரம சிவன், வேதம் போற்றும் அரன் (எனப்படும் பெருமானுடைய) இடப் பாகத்தில் உறைகின்ற ஜோதி, அமை உமை டாகினி* திரி புரை நாரணி அழகிய மாது அருள் புதல்வோனே ... அம்மை, உமாவாகிய பார்வதி, தேவி, திரி புரத்தை எரித்தவள், துர்க்கை, அழகிய மாதாகிய பார்வதி அருளிய மகனே, குரவு அணி பூஷண சரவண தேசிக குக கருணா நிதி அமரேசா ... குரா மலரை அணிகின்ற ஆபரணமாகக் கொண்டவனே, சரவணனே, குரு மூர்த்தியே, குகனே, கருணை நிதியே, தேவர்களுக்கு ஈசனே, குற மகள் ஆனை மின் மருவிய பூரண குரு கிரி மேவிய பெருமாளே. ... குறப் பெண்ணாகிய வள்ளி, (ஐராவதம் என்ற) யானையால் வளர்க்கப்பட்ட மின்னல் போன்ற தேவயானை (ஆகிய இருவரும்) சேர்ந்துள்ள முழுப் பொருளே, சுவாமி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. |
* டாகினி, காகினி, லாகினி, ஹாகினி, ராகினி, சாகினி என்பன தேவியைக் குறிப்பனவாகும். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.535 pg 1.536 pg 1.537 pg 1.538 WIKI_urai Song number: 223 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 226 - paravari thAkiya (SwAmimalai) paravari thAkiya varaiyena neediya paNaimulai meethini ...... luruvAna paNikaLu lAvida izhaiyidai sAytharu payilikaL vALvizhi ...... ayilAlE niravari yOdiyal kuzhalkaLi nANmalar niraitharu mUrali ...... nakaimeethu nilaviyal sErmuka mathiluyar mAmayal nilaiyezha vEyalai ...... vathuvAmO aravaNai yArkuzhai parasiva AraNa aranida pAkama ...... thuRaisOthi amaiyumai dAkini thiripurai nAraNi azhakiya mAtharuL ...... puthalvOnE kuravaNi pUshaNa saravaNa thEsika gukakaru NAnithi ...... amarEsA kuRamaka LAnaimin maruviya pUraNa gurugiri mEviya ...... perumALE. ......... Meaning ......... parava arithAkiya varai ena neediya paNai mulai meethinil uruvAna paNikaL ulAvida: Their bosom, adorned with decorative ornaments, is so huge that it looks like a rare mountain that is beyond adoration and worship; izhai idai sAy tharu payilikaL vAL vizhi ayilAlE: their gait is such that the slender thread-like waist caves in; their bright eyes are like the arrows; nira variyOdu iyal kuzhalkaLin nAN malar nirai tharum mUralin nakai meethu: their hair is bedecked with fresh flowers around which the beetles hasten to swarm; the neat rows of their teeth wear a smile; nilavu iyal sEr mukam athil uyar mA mayal nilai ezhavE alaivathu AmO: and their face looks like the moon. All these provoke my passion steadily and increasingly, and is it fair that my mind is tossed around like the waves on the sea? aravu aNaiyAr kuzhai para siva AraNa aran ida pAkamathu uRai sOthi: He wears the serpent as ear-drops; and He is the supreme Lord SivA worshipped by the vEdhAs; on His left side, She is concorporate as an effulgence; amai umai dAgini* thiri purai nAraNi azhakiya mAthu aruL puthalvOnE: She is the Mother; She is UmA (PArvathi); She is the Goddess; She burnt down Thiripuram; She is DurgA; and that beautiful Divine Mother delivered You as Her son! kuravu aNi pUshaNa saravaNa thEsika guka karuNA nithi amarEsA: You wear the garland of kurA flower as an ornament! Oh SaravaNabavA! Oh the Great Master! Oh GuhA! Oh Treasure of Compassion! Oh Lord of the celestials! kuRa makaL Anai min maruviya pUraNa guru giri mEviya perumALE.: VaLLi, the damsel of the KuRavAs, and lightning-like DEvayAnai, who was reared by the elephant (ayirAvadham), have both united with You, Oh Absolute Lord! You are the Lord having a seat in SwAmimalai, Oh Great One! |
* dAgini, kAgini, lAgini, hAgini, rAgini and sAgini are all names denoting the Goddess. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |