திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 225 நிறைமதி முகமெனும் (சுவாமிமலை) Thiruppugazh 225 niRaimadhimugamenum (swAmimalai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதன தனதன ...... தனதான தனதன தனதன ...... தனதான ......... பாடல் ......... நிறைமதி முகமெனு ...... மொளியாலே நெறிவிழி கணையெனு ...... நிகராலே உறவுகொள் மடவர்க ...... ளுறவாமோ உனதிரு வடியினி ...... யருள்வாயே மறைபயி லரிதிரு ...... மருகோனே மருவல ரசுரர்கள் ...... குலகாலா குறமகள் தனைமண ...... மருள்வோனே குருமலை மருவிய ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... நிறைமதி முகமெனும் ... பூரண சந்திரன் போன்ற முகத்தின் ஒளியாலே ... பிரகாசத்தாலும், நெறிவிழி ... வழிகாட்டியாக இருக்க வேண்டிய கண்கள் கணையெனு நிகராலே ... அம்பு போலச் செய்யும் போரினாலும், உறவுகொள் மடவர்கள் ... சொந்தம் கொண்டாடுகின்ற மாதர்களின் உறவாமோ ... உறவு ஆகுமோ? (ஆகாது என்ற படிக்கு) உனதிரு வடியினி ... உன்னிரு திருவடிகளை இனியாகிலும் யருள்வாயே ... தந்தருள்வாயாக. மறைபயி லரிதிரு மருகோனே ... வேதங்களில் சொல்லப்படும் திருமால், இலக்குமியின் மருகோனே, மருவல ரசுரர்கள் ... பகைவர்களாம் அசுரர்களின் குலகாலா ... குலத்தை அழித்த காலனே, குறமகள் தனை ... குறத்தி வள்ளியை மண மருள்வோனே ... திருமணம் செய்து அருளியவனே, குருமலை மருவிய பெருமாளே. ... குருமலை (திருவேரகம்) வீற்றிருக்கும் பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.535 pg 1.536 WIKI_urai Song number: 222 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
M.S. பாலஷ்ரவண்லக்ஷ்மி புதுச்சேரி M.S. Balashravanlakshmi Puducherry பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
திருமதி காந்திமதி சந்தானம் Mrs Kanthimathy Santhanam பாடகர் பக்கத்திற்கு to singer's page |
Song 225 - niRaimadhi mugamenum (SwAmimalai) niRaimathi mukamenu ...... moLiyAlE neRivizhi kaNaiyenu ...... nikarAlE uRavukoL madavArka ...... LuRavAmO unathiru vadiyini ...... yaruLvAyE maRaipayi larithiru ...... marukOnE maruvala rasurarkaL ...... kulakAlA kuRamakaL thanaimaNa ...... maruLvOnE kurumalai maruviya ...... perumALE. ......... Meaning ......... niRaimathi mukamenum oLiyAlE: With faces bright like the full moon, neRivizhi kaNaiyenu nikarAlE: and eyes, which must show the way, looking like battling arrows uRavukoL madavArkaL: the women flirt with me; uRavAmO: can that be called a true relationship? unathiru vadiyini yaruLvAyE: You have to grant me Your two holy feet (which are the only relationship for me). maRaipayi larithiru marukOnE: You are the Nephew of Vishnu and Lakshmi who are praised in the Vedas. maruvala rasurarkaL kulakAlA: You are the Death Lord of the entire race of the enemies, the demons (asuras). kuRamakaL thanaimaNa maruLvOnE: You wedded VaLLi, the damsel of KuRavas. kurumalai maruviya perumALE.: You chose Kurumalai (SwAmimalai) as abode, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |