திருப்புகழ் 222 நாசர்தங் கடை  (சுவாமிமலை)
Thiruppugazh 222 nAsarthangkadai  (swAmimalai)
Thiruppugazh - 222 nAsarthangkadai - swAmimalaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானனந் தனதனன தனதனா தத்த தந்த ...... தனதான
     தானனந் தனதனன தனதனா தத்த தந்த ...... தனதான

......... பாடல் .........

நாசர்தங் கடையதனில் விரவிநான் மெத்த நொந்து ...... தடுமாறி
     ஞானமுங் கெடஅடைய வழுவியா ழத்த ழுந்தி ...... மெலியாதே

மாசகந் தொழுமுனது புகழினோர் சொற்ப கர்ந்து ...... சுகமேவி
     மாமணங் கமழுமிரு கமலபா தத்தை நின்று ...... பணிவேனோ

வாசகம் புகலவொரு பரமர்தா மெச்சு கின்ற ...... குருநாதா
     வாசவன் தருதிருவை யொருதெய்வா னைக்கி ரங்கு ...... மணவாளா

கீசகஞ் சுரர்தருவு மகிழுமா வத்தி சந்து ...... புடைசூழுங்
     கேசவன் பரவுகுரு மலையில்யோ கத்த மர்ந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

நாசர்தங் கடையதனில் ... கேடு செய்யும் கீழ்மக்களின்
இருப்பிடங்களுக்குச் சென்று

விரவிநான் மெத்த நொந்து ... அவர்களுடன் கலந்து அதனால்
மிகவும் நொந்து போய்,

தடுமாறி ஞானமுங் கெட ... தடுமாற்றம் அடைந்து சுய அறிவும்
கெட்டுப்போய்,

அடைய வழுவி ... முழுவதுமாக தவறான வழியில் விழுந்து,

ஆழத்து அழுந்தி மெலியாதே ... ஆழமாகத் தீய நெறியில் அழுந்தி
நான் மெலிவுறாமல்,

மாசகந் தொழுமுனது புகழின் ... இந்தச் சிறந்த உலகமே போற்றும்
உனது புகழின்

ஓர் சொற் பகர்ந்து சுகமேவி ... ஒரு சொல்லளவு பகுதியாவது
சொல்லி அதனால் சுகமடைந்து,

மாமணங் கமழுமிரு கமலபாதத்தை ... நறுமணம் வீசும் உன்
இரண்டு தாமரைப் பாதங்களை

நின்று பணிவேனோ ... மனம் ஒருமுகப்பட்டு நின்று வணங்க
மாட்டேனோ?

வாசகம் புகல ... உபதேச மொழியை நீ கூற,

ஒரு பரமர்தாம் மெச்சுகின்ற குருநாதா ... ஒப்பற்ற சிவபிரான்
மெச்சிப் புகழ்ந்த குருநாதனே,

வாசவன் தருதிருவை ... இந்திரன் வளர்த்தளித்த லக்ஷ்மியின்
அம்சமாகும்

ஒருதெய்வானைக்கு இரங்கு மணவாளா ... ஒப்பில்லா
தேவயானைக்கு இரங்கி மணம்புரிந்தவனே,

கீசகஞ் சுரர்தருவு மகிழுமா வத்தி சந்து புடைசூழும் ... மூங்கில்,
கற்பக மரம், மகிழ மரம், மாமரம், அத்தி மரம், சந்தன மரம் இவையெல்லாம்
சுற்றிலும் சூழ்ந்துள்ள,

கேசவன் பரவுகுரு மலையில் ... திருமாலே போற்றிப் புகழும்
சுவாமி மலையில்

யோகத்தமர்ந்த பெருமாளே. ... உபதேச குருவாக
யோகநிலையில் அமர்ந்த பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.529  pg 1.530 
 WIKI_urai Song number: 219 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Mrs. Malathi Velayudhan, Chennai
திருமதி வே. மாலதி, சென்னை

Mrs. Malathi Velayudhan, Chennai
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 222 - nAsarthang kadai (SwAmimalai)

nAsar tham kadaiyadhanil viravi nAn meththa nondhu ...... thadumARi
     nyAnamum keda adaiya vazhuviyA zhaththa zhundhi ...... meliyAdhE

mA jagam thozhum unadhu pugazhinOr soR pagarndhu ...... sukamEvi
     mA maNam kamazhum iru kamala pAdhaththai nindru ...... paNivEnO

vAchakam pugala oru paramar thA mechchukindra ...... gurunathA
     vAsavan tharu thiruvai oru dheyvA naikki rangu ...... maNavALA

keechakan surartharuvu magizhumA aththi sandhu ...... pudai sUzhum
     kEsavan paravu guru malaiyil yOgath thamarndha ...... perumALE.

......... Meaning .........

nAsar tham kadaiyadhanil viravi nAn: I mingled with destructive mean people going to their places;

meththa nondhu thadumARi nyAnamum keda: I suffered wavering a lot and losing my wisdom;

adaiya vazhuviyA zhaththa zhundhi: I totally strayed from the right path and fell into a deep pit;

meliyAdhE: and I started to lose my weight. To stop my decay,

mA jagam thozhum unadhu pugazhinOr soR pagarndhu: I must learn to say at least one word in Your praise which is being worshipped by this vast world;

sukamEvi mA maNam kamazhum iru kamala pAdhaththai nindru paNivEnO: and I must attain the bliss by contemplating and worshipping Your two lotus feet that are extremely fragrant. Will I ever do that?

vAchakam pugala oru paramar thA mechchukindra gurunathA: When You preached the sacred word, peerless SivA praised You, His Master.

vAsavan tharu thiruvai oru dheyvA naikki rangu maNavALA: You fell in love with and married DEvayAnai, who is Lakshmi-incarnate, and reared as daughter by IndrA.

keechakan surartharuvu magizhumA aththi sandhu pudai sUzhum: Around Your mount are bamboos, devathAru (KaRpagam), makizham, mango, fig, and sandalwood trees,

kEsavan paravu guru malaiyil yOgath thamarndha perumALE.: and Lord Vishnu worships Your mount, SwAmimalai, where You are seated as the Preaching Guru in the yOgA position, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 222 nAsarthang kadai - swAmimalai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]