பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/529

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 முருகவேள் திருமுறை 14 ஆம் திருமுறை “அருமறை தமிழ்நூ லடைவே தெரிந்து ரைக்கும் புலவோனே f அரியரி பிரமா தியர்கால் விலங்க விழ்க்கும் பெருமாளே. (24) 219. திருவடியைத் தொழ தானனந் தனதனன தனதனா தத்த தந்த தனதான நாசர்தங் கடையதனில் விரவிநான் மெத்த நொந்து தடுமாறி. ஞானமுங் கெடஅடைய வழுவியா ழத்த ழுந்தி - மெலியாதே; மாசகந் தொழுமுனது புகழினோர் சொற்ப கர்ந்து சுகமே.வி. மாமணங் கமழுமிரு கமலபா தத்தை நின்று பணிவேனோ, வாசகம் புகலவொரு பரமர்தா மெச்சு கின்ற குருநாதா. வாசவன் தரு திருவை யொருதெய்வா ணைக்கிரங்கு மணவாளா கீசகஞ் சுரர்தருவு மகிழுமா வத்தி சந்து புடைசூழுங் கேசவன் பரவுகுரு மலையில்யோ கத்த மர்ந்த பெருமாளே (25)

  • இது ரிக் இருக்கு வேத சாரமாக முருகவேளின் கூறான சம்பந்தர் தேவாரப் பாக்களாக அருளியதைக் குறிக்கும். தென்னுால் சிவபத்தி ருக்கு ஐயம் போக உரைத்தேன்" எனக் கந்தரந்தாதி (96) யிலும் அருணகிரியார் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.

f அரி-தேவேந்திரன்

  1. திருவை திரு ஐ-சாரியை, S கீசகம் - மூங்கில் சுரர் தருதேவலோகக் கற்பக விருகூடிம்; கற்பகம் -

தென்னை