திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 221 தெருவினில் நடவா (சுவாமிமலை) Thiruppugazh 221 theruvinilnadavA (swAmimalai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதன தனனா தனனா தனந்த தத்தம் ...... தனதான ......... பாடல் ......... தெருவினில் நடவா மடவார் திரண்டொ றுக்கும் ...... வசையாலே தினகர னெனவே லையிலே சிவந்து திக்கும் ...... மதியாலே பொருசிலை வளையா இளையா மதன்தொ டுக்குங் ...... கணையாலே புளகித முலையா ளலையா மனஞ்ச லித்தும் ...... விடலாமோ ஒருமலை யிருகூ றெழவே யுரம்பு குத்தும் ...... வடிவேலா ஒளிவளர் திருவே ரகமே யுகந்து நிற்கும் ...... முருகோனே அருமறை தமிழ்நூ லடைவே தெரிந்து ரைக்கும் ...... புலவோனே அரியரி பிரமா தியர்கால் விலங்க விழ்க்கும் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... தெருவினில் நடவா மடவார் ... தெருக்களில் உல்லாசமாக நடக்கு பெண்கள் திரண்டு ஒறுக்கும் வசையாலே ... ஒன்று சேர்ந்து வம்பு பேசும் வசை மொழிகளாலும், தினகரனென வேலையிலே ... சூரியனுக்கு ஒப்பான ஒளியுடனும் வெப்பத்துடனும் கடலில் சிவந்து உதிக்கும் மதியாலே ... சிவந்த நிறத்துடன் உதிக்கும் சந்திரனாலும், பொருசிலை வளையா இளையா ... காமப் போருக்குரிய கரும்பு வில்லை வளைத்து, சளைக்காமல் மதன்தொடுக்குங் கணையாலே ... மன்மதன் எய்கின்ற மலர் அம்புகளினாலும், புளகித முலையாள் அலையா ... விரகதாபத்தால் விம்மும் மார்பினளாகிய என்னை அலையுமாறும் மனஞ்சலித்தும் விடலாமோ ... உள்ளம் உடைந்து கலங்குமாறும் நீ விடுதல் முறையாகுமோ? ஒருமலை யிருகூறெழவே ... மாயையில் ஒப்பற்ற கிரெளஞ்சமலை இரண்டாகப் பிளவுபடும்படியும், உரம் புகுத்தும் வடிவேலா ... தாரகாசுரன் மார்பில் புகும்படியும் செலுத்திய கூர் வேலை உடையவனே, ஒளிவளர் திருவேரகமே ... பேரொளி பெற்று விளங்கும் சுவாமிமலை என்னும் திருத்தலத்தில் உகந்து நிற்கும் முருகோனே ... மகிழ்ச்சியோடு எழுந்தருளியிருக்கும் முருகனே, அருமறை தமிழ்நூல் அடைவே ... அருமையான வேதங்களையும் தமிழ் நூல்களையும் முழுமையாக தெரிந்துரைக்கும் புலவோனே ... கேட்பவரின் தரம் அறிந்து விரித்து உரைத்தருளும் ஞான பண்டிதா, அரியரி பிரமாதியர் ... இந்திரன், திருமால், பிரம்மா முதலிய தேவர்களின் கால்விலங்க அவிழ்க்கும் பெருமாளே. ... காலில் பூட்டிய விலங்கினைத் தகர்த்தெறிந்த பெருமாளே. |
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது. கடல், சந்திரன், மன்மதன், மலர்க் கணைகள், ஊர்ப் பெண்களின் ஏச்சு இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.527 pg 1.528 pg 1.529 pg 1.530 WIKI_urai Song number: 218 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
Song 221 - theruvinil nadavA (SwAmimalai) theruvinil nadavA madavAr thiraNd oRukkum ...... vasaiyAlE dhinakaran ena vElaiyilE sivandhu dhikkum ...... madhiyAlE porusilai vaLaiyA iLaiyA madhan thodukkum ...... kaNaiyAlE puLakitha mulaiyAL alaiyA manan saliththum ...... vidalAmO orumalai iru kUR ezhavE uram puguththum ...... vadivElA oLivaLar thiru EragamE ugandhu niRkum ...... murugOnE arumaRai thamizh nUl adaivE therindhu raikkum ...... pulavOnE ari hari biramAdhiyar kAl vilang avizhkkum ...... perumALE. ......... Meaning ......... theruvinil nadavA madavAr thiraNd oRukkum vasaiyAlE: Due to the harrassment and gossip-mongering in unison of all the women walking the streets, dhinakaran ena vElaiyilE sivandhu dhikkum madhiyAlE: due to the scorching heat and light emanating from the red moon as if it were the sun, rising above the sea, porusilai vaLaiyA iLaiyA madhan thodukkum kaNaiyAlE: and due to the arrows of flowers shot by Manmathan (Love God) from his bow of sugarcane determined to fight me, puLakitha mulaiyAL alaiyA manan saliththum vidalAmO: I am ravaged with heaving chest and a heavy heart; is it fair of You to make me suffer like this from Your separation? orumalai iru kUR ezhavE uram puguththum vadivElA: You pierced the unique and mysterious mount (Krouncha) into two parts and also the heart of Tharuka asuran with Your Spear! oLivaLar thiru EragamE ugandhu niRkum murugOnE: You chose Your abode at SwAmimalai which is bright and luminous! arumaRai thamizh nUl adaivE therindhu raikkum pulavOnE: You know all the VEdic scriptures and Tamil thoroughly and teach them to Your devotees according to their grasping capacity, Oh Wizard of Wisdom! ari hari biramAdhiyar kAl vilang avizhkkum perumALE.: All the shackles in the legs of IndrA, BrahmA, Vishnu and other celestials were shattered by You, Oh Great One! |
This song has been written in the Nayaka-Nayaki BhAva portraying the pangs of separation of the heroine from Lord Murugan. The sea, the moon, Love God the flowery arrows and the scandal-mongering women are some of the sources which aggravate her separation from the Lord. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |