திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 218 செகமாயை உற்று (சுவாமிமலை) Thiruppugazh 218 segamAyaiutRu (swAmimalai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதான தத்த தனதான தத்த தனதான தத்த ...... தனதான ......... பாடல் ......... செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த திருமாது கெர்ப்ப ...... முடலூறித் தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில் திரமாய ளித்த ...... பொருளாகி மகவாவி னுச்சி விழியாந நத்தில் மலைநேர்பு யத்தி ...... லுறவாடி மடிமீத டுத்து விளையாடி நித்த மணிவாயின் முத்தி ...... தரவேணும் முகமாய மிட்ட குறமாதி னுக்கு முலைமேல ணைக்க ...... வருநீதா முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள் மொழியேயு ரைத்த ...... குருநாதா தகையாதெ னக்கு னடிகாண வைத்த தனியேர கத்தின் ...... முருகோனே தருகாவி ரிக்கு வடபாரி சத்தில் சமர்வேலெ டுத்த ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... செகமாயை யுற்று ... இந்த உலக மாயையில் சிக்குண்டு, என் அகவாழ்வில் வைத்த ... எனது இல்லற வாழ்வில் எனக்குக் கிட்டிய திருமாது கெர்ப்பம் உடல் ஊறி ... அழகிய மனைவியின் கருவில் உருவாகி அவளது உடலில் ஊறி தெசமாத முற்றி ... பத்து மாதம் கர்ப்பத்தில் வளர்ந்து, வடிவாய் நிலத்தில் திரமாய் அளித்த ... நல்ல வடிவோடு கூடி பூமியில் நன்கு தோன்றிய பொருளாகி ... குழந்தைச் செல்வமாக நீ எங்களுக்குப் பிறந்து, மக அவாவின் ... குழந்தைப் பாசத்தினால் நான் உன்னை உச்சி விழி ஆநநத்தில் ... உச்சிமோந்து, விழியோடு விழிவைத்து, முகத்தோடு முகம் சேர்த்து, மலைநேர்புயத்தில் உறவாடி ... எனது மலை போன்ற தோள்களில் நீ தழுவி உறவாடி, மடிமீதடுத்து விளையாடி ... என் மடித்தலத்தில் அமர்ந்து குழந்தையாக விளையாடி, நித்த மணிவாயின் முத்தி தரவேணும் ... நாள்தோறும் உன் மணி வாயினால் முத்தம் தந்தருள வேண்டும். முகமாய மிட்ட குறமாதி னுக்கு ... முக வசீகரம் மிக்க குறப்பெண் வள்ளியின் முலைமேல் அணைக்க வருநீதா ... மார்பினை அணைக்க வந்த நீதிபதியே*, முதுமாமறைக்குள் ஒருமாபொருட்குள் ... பழம் பெரும் வேதத்தினுள் ஒப்பற்ற சிறந்த பொருளுக்குள்ளே மொழியேயு ரைத்த குருநாதா ... பிரணவப் பொருளை சிவனாருக்கு உபதேசித்த குருநாதனே, தகையாது எனக்கு ... தடையொன்றும் இல்லாது எனக்கு உன் அடிகாண வைத்த ... உனது திருவடிகளைத் தரிசனம் செய்வித்த தனியேரகத்தின் முருகோனே ... ஒப்பற்ற திருவேரகத்தின் (சுவாமிமலையின்) முருகனே, தருகாவிரிக்கு வடபாரிசத்தில் ... மரங்கள் இருபுறமும் நிறைந்த காவிரி ஆற்றின் வடக்குப் பகுதியிலே சமர்வேலெடுத்த பெருமாளே. ... போர் வேல் விளங்க நிற்கும் பெருமாளே. |
* யான், எனது என்ற அகங்கார மமகாரம் அற்ற வள்ளியை தானே வலிய வந்து அணைத்து மணத்தல் தனக்கு நீதி என்ற காரணத்தால், நீதிபதியே என்றார். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.485 pg 1.486 pg 1.487 pg 1.488 WIKI_urai Song number: 199 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) பாடல் ரா - 1 song R1 பாடல் ரா - 2 song R2 | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 218 - segamAyai utRu (SwAmimalai) sega mAyai utren aga vAzhvil vaiththa thirumAdhu gerbam ...... udal URi dhesa mAdha mutri vadivAy nilaththil thiramAy aLiththa ...... poruLAgi magavAvin uchchi vizhi Ananaththil malai nEr buyaththil ...... uRavAdi madimee dhaduththu viLaiyAdi niththam maNivAyin muththi ...... tharavENum muga mAyam itta kuRa mAdhinukku mulaimEl aNaikka ...... varu needhA mudhu mA maRaikkuL oru mA porutkuL mozhiyE uraiththa ...... gurunathA thagaiyAdh enakkun adi kANa vaiththa thani Eragaththin ...... murugOnE tharu kAvirikku vada pArisaththil samar vEl eduththa ...... perumALE. ......... Meaning ......... sega mAyai utren aga vAzhvil vaiththa: In this world of illusion, I have a family life. thirumAdhu gerbam udal URi: I have a lovely wife. I want You to be conceived in her womb. dhesa mAdha mutri vadivAy nilaththil thiramAy aLiththa poruLAgi: On completion of ten months in her womb, You must arrive on this earth in the beautiful shape of our child. magavAvin uchchi vizhi Ananaththil: As I am so fond of having a child, I shall be delighted to cuddle You, look into Your eyes and squeeze Your face against mine. malai nEr buyaththil uRavAdi: I want You to hug my huge shoulders! madimee dhaduththu viLaiyAdi niththam: Everyday, I want You to play on my lap, maNivAyin muththi tharavENum: and You must shower me with kisses from Your lovely little lips! muga mAyam itta kuRa mAdhinukku: The damsel of the KuRavAs, VaLLi, has a charming face; mulaimEl aNaikka varu needhA: and You came to her to embrace her, Oh Symbol of Justice!* mudhu mA maRaikkuL oru mA porutkuL: From the ancient scriptures, the incomparable Vedas, You chose mozhiyE uraiththa gurunathA: the nucleus of their essence (OM) and preached it to Lord SivA, Oh Master! thagaiyAdh enakkun adi kANa vaiththa: Without any interruption, You let me see Your lotus feet at thani Eragaththin murugOnE: the unique place, ThiruvEragam (SwAmimalai), Oh MurugA! tharu kAvirikku vada pArisaththil: On the northern side of River KAveri, whose banks are full of trees, samar vEl eduththa perumALE.: You stand elegantly with Your fighting spear, Oh Great One! |
* Murugan's sense of justice is seen in Himself coming to VaLLi who had conquered her arrogance and egoism. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |