பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/488

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேரகம்) திருப்புகழ் உரை 15

  • பழைய சிறந்த வேதத்தில் ஒப்பற்ற பெரும் பொருள்களுக்கு உள்ளே உள்ள (பிரணவப்) பொருளைச் சிவபிராற்கு விளக்கின குருநாதனே!

tதடையொன்று மின்றி அடியேனுக்கு உன் திருவடி தரிசனத்தைத் தந்த ஒப்பற்ற திருவேரகத் தலத்து முருகனே! f (அகத்தியர் கமண்டலம்) தந்த காவிரி யாற்றுக்கு (அல்லது கரையில் மரங்கள் நிறைந்த) காவிரியாற்றுக்கு வடக்குப் பக்கத்தில் போர் வேல் விளங்க நிற்கும் பெருமாளே! (மணி வாயில் முத்தி தரவேணும்) 200 மருக் கொழுந்து ஆகிய வாசனைகள் நிரம்பிய கூந்தலை உடைய மாதர்கள் (என்னை) மயக்கிக், காம சாத்திரத்திற் கூறியுள்ள தந்திர வகைகளால்ே. மோகத்தை எழுப்பித் தமது வாயிதழ் (ஊறலை) ஊட்டுவிக்க அதனால் மலைபோன்ற அவர் தம் கொங்கை களில் விருப்பங் கொண்டு மிக்க ஆசை பூண்ட தமியேனை (நீ) நிதமும் பிரியா மலும், என்மாட்டு அன்பு மறவாமலும். (எனது) பிழையைப் பொறுத்து உனது இரண்டு திருவடிகளிலும் பொருந்தியுள்ளதான பெருவாழ்வான பேரின் பத்தை நான் பற்றுமாறு அருள் புரிவாயாக குரு மூர்த்தியாய்ச் சிவபிரானுக்கும் உபதேசம் செய்த குகனே! குறத்தி (வள்ளியின்) மணவாளனே! 背 இது தல வரவாற்றை விளக்குகின்றது. இதனால் குருமலை எனப் பெயர் வந்தது, முருகவேள் தகப்பன் சாமி ஆயினர் (திருப்புகழ் 1178 ஈற்றடி) t இது அருணகிரியாரின் வரலாறு கூறும் # சிவபிரான் அகத்தியர்க்குத் தந்த பொன்னிப் புனல் காவிரி, அதை அவர் குண்டிகையில் நின்றும் கணபதி கவிழ்க்க காவிரி ஆறாகப் பெருகிற்று கந்த புராணம் - காவிரி நீங்கு படலம் -36