திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 216 சரண கமலாலயத்தை (சுவாமிமலை) Thiruppugazh 216 saraNakamalAlayaththai (swAmimalai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதனன தான தத்த தனதனன தான தத்த தனதனன தான தத்த ...... தனதான ......... பாடல் ......... சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில் தவமுறைதி யானம் வைக்க ...... அறியாத சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த தமியன்மிடி யால்ம யக்க ...... முறுவேனோ கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு கயிலைமலை நாதர் பெற்ற ...... குமரோனே கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலே செச்சை கமழுமண மார்க டப்ப ...... மணிவோனே தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய சகலசெல்வ யோக மிக்க ...... பெருவாழ்வு தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து தவிபுரிய வேணு நெய்த்த ...... வடிவேலா அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க அரியதமிழ் தான ளித்த ...... மயில்வீரா அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த அழகதிரு வேர கத்தின் ...... முருகோனே. ......... சொல் விளக்கம் ......... சரண கமலாலயத்தை ... உனது தாமரை போன்ற திருவடிகளை அரை நிமிஷ நேர மட்டில் ... அரை நிமிஷ நேர அளவுக்காவது தவமுறை தியானம் வைக்க அறியாத ... தவ நிலையில் தியானத்தில் வைத்திட அறியாத ஜட கசட மூட மட்டி ... பொய்யும் குற்றமும் கொண்ட மூடனான மட்டி யான் பவ வினையிலே சனித்த ... பிறப்பதே தொழிலாகக் கொண்டு பிறந்துள்ள தமியன் ... தன்னம் தனியனான யான் மிடியால் மயக்கம் உறுவேனோ? ... வறுமையால் மயக்கத்தை அடையலாமோ? கருணை புரியாதிருப்ப தென குறை ... கருணை காட்டாமல் இருப்பது என்ன குறையைக் கண்டு? இவேளை செப்பு ... இப்பொழுதே சொல்லி அருளவேண்டும் கயிலைமலை நாதர்பெற்ற குமரோனே ... கயிலாயமலை நாதராம் சிவன் பெற்ற குமரனே கடக புயமீதி ... வீரக் கடகம் அணிந்த புஜத்தின் மீது ரத்ன மணியணி பொன்மாலை செச்சை ... ரத்னாபரணம், தங்கமாலை, வெட்சிப் பூமாலை கமழு மணமார் கடப்பம் அணிவோனே ... வாசனை நிறைந்த கடம்பமாலை இவைகளை அணிந்தவனே தருணம் இதையா ... தக்க சமயம் இதுதான் ஐயா மிகுத்த கனமதுறு நீள்சவுக்ய ... மிக்க பெருமையைத் தரும் நீடித்த சுகம் சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வு ... எல்லாவித செல்வம், அதிர்ஷ்டம், நிறைந்த பெருவாழ்வு தகைமை சிவ ஞான முத்தி பரகதியு நீகொடுத்(து) ... நன்மதிப்பு, சிவஞானம், முக்தியாம் மேலான கதி இவையாவும் நீ கொடுத்(து) (உ)தவிபுரிய வேணு நெய்த்த வடிவேலா ... உதவி புரிய வேண்டுகின்றேன், பளபளப்பும் கூர்மையும் உடைய வேலனே அருணதள பாத பத்மம் அதுநிதமுமே துதிக்க ... சிவந்த தாமரையிதழ் போன்ற உன் பாதமதனை தினந்தோறும் நான் துதிப்பதற்கு அரிய தமிழ் தானளித்த மயில்வீரா ... அருமையான் தமிழ் ஞானத்தை தந்த மயில்வீரனே அதிசயம் அனேகம் உற்ற பழனிமலை மீதுதித்த ... அதிசயக் கோலங்கள் பல நிறைந்த பழனிமலை மீது விளங்கித் தோன்றும் அழக, திருவேரகத்தின் முருகோனே. ... அழகனே திருவேரகத்து (சுவாமி மலையின்) முருகப்பெருமானே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.517 pg 1.518 pg 1.519 pg 1.520 WIKI_urai Song number: 214 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
திரு பொ. சண்முகம் Thiru P. Shanmugam பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
'சிங்கப்பூர்' செல்வி சுபாஷினி Singapore B. Subhashini பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
திரு சம்பந்தம் குருக்கள் Thiru P. Sambandam Gurukkal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
M.S. பாலஷ்ரவண்லக்ஷ்மி புதுச்சேரி M.S. Balashravanlakshmi Puducherry பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
திருமதி காந்திமதி சந்தானம் Mrs Kanthimathy Santhanam பாடகர் பக்கத்திற்கு to singer's page |
திருமதி வே. மாலதி, சென்னை Mrs. Malathi Velayudhan, Chennai பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 216 - saraNa kamalAlayaththai (SwAmimalai) charaNa kamalAla yaththai arainimisha nEra mattil thavamuRai dhiyAnam vaikka ...... aRiyAdha jadakasada mUda matti bhava vinaiyilE janiththa thamiyan midiyAl mayakkam ...... uRuvEnO karuNaipuri yAdhi ruppa dhenakuRaiyi vELai seppu kayilaimalai nAthar petra ...... kumarOnE kadakabuya meethi rathna maNiyaNipon mAlai secchai kamazhu maNa mAr kadappam ...... aNivOnE tharuNam idhaiyA miguththa ganamadhuRu neeL savukya sakalaselva yOga mikka ...... peruvAzhvu thagaimaisiva nyAna muththi paragathiyu nee koduth udhavipuriya vENu neyththa ...... vadivElA aruNadhaLa pAdha padhmam adhunidhamumE thudhikka ariyathamizh thAn aLiththa ...... mayilveerA adhisayam anEgam utra pazhanimalai meedh udhiththa azhagathiru vEragaththin ...... murugOnE. ......... Meaning ......... charana kamalAlayaththai: At the temple of Your lotus feet arainimisha nEra mattil: at least for the duration of half a minute thavamuRai dhiyAnam vaikka aRiyAdha: incapable of proper concentration and penance jadakasada mUda matti: the scum, rotten rogue and a complete fool called myself bhava vinaiyilE janiththa: having been born as if birth alone is my profession thamiyan: the lonely myself midiyAl mayakkam uRuvEnO: should I feel dazed due to poverty, lack of spirituality? karuNaipuri yAdhi ruppa dhenakuRai: What is the reason for Your lack of compassion? i vELai seppu: Kindly tell me right at this moment, kayilaimalai nAthar petra kumarOnE: You, the Son of SivA, the Lord of Mount Kailas! kadakabuya meethi: On Your valorous shoulders rathna maNiyaNipon mAlai secchai: You wear chains made of gems, gold, vetchi flowers kamazhu maNa mAr kadappam aNivOnE: and fragrant garlands of katampa flowers. tharuNam idhaiyA: This is the opportune time, Oh Lord, for You miguththa ganamadhuRu neeL savukya: to grant me long lasting happiness sakalaselva yOga mikka peruvAzhvu: abundant wealth, long life filled with fortunes thagaimaisiva nyAna muththi paragathiyu nee koduthu udhavipuriya vENu: respect, knowledge of SivA and heavenly bliss - these are a few of my requests to You. neyththa vadivElA: Oh, bright and sharp speared One! aruNadhaLa pAdha padhmam adhunidhamumE thudhikka: In order that I praise Your reddish lotus feet everyday, ariyathamizh thAn aLiththa mayilveerA: You gave me the rare knowledge of Tamil, Oh Peacock-Warrior! adhisayam anEgam utra pazhanimalai meedh udhiththa: You rise over the wonderful mount of Pazhani, azhagathiru vEragaththin murugOnE.: Oh handsome one, MurugA of ThiruvEragam (SwAmimalai)! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |