பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/518

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேரகம்) திருப்புகழ் உரை 45 (நான்) சித்திரம் போன்ற (மோனநிலை) முடிவை (மோனநிலை ஞான உணர்வை) (அடைய) அருள்வாயே. நறும்புகை மணம் ஆதிய மணங்களை உடலில் அணிந்துள்ள சுகலிலைப் பெருமானே! சூரனைச் சங்கரித்த ஒளி வேலனே! பொன்மலை போலச் சிறந்தோங்கும் மயிலில் ஏறும் வீரனே! (திரு) வேரகம் என்னும் சுவாமி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே! (ஒவியத்தில் அந்தம் அருள்வாயே) 214 உனது தாமரையன்ன திருவடிக் கோயிலை அரை நிமிஷ அளவுக்காவது தவ நிலைத் தியானத்தில் வைக்க அறியாத பொய்யும் குற்றமும் கொண்ட மூடன், மட்டி, பிறப்பதே தொழிலாகக் கொண்டு (அல்லது பாபவினையின் பயனாகப்) பிறந்துள்ள தமியேன் - வறுமையால் மயக்கம் அடையலாமா! (அடைதல் நன்றோ!) (நீ) கருணை புரியாமல் இருப்பதற்குக் (காரணம் என் மாட்டு) யாது குறையைக் கண்டு? இப்பொழுது சொல்லி அருள வேண்டும் கயிலைமலை நாதராம் சிவன் பெற்ற குமரனே! வீர கங்கணம் அணிந்த திருப்புயத்தின் மேலே, ரத்னா பணம், பொன்மாலை, வெட்சிமாலை, மணம் வீசும் வாசனை நிறைந்த கடப்பமாலை இவைகளை அணிந்தவனே!