திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 214 குமர குருபர முருக சரவண (சுவாமிமலை) Thiruppugazh 214 kumaragurubaramurugasaravaNa (swAmimalai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனன தனதன தனன தனதன தனன தனதன ...... தனதான ......... பாடல் ......... குமர குருபர முருக சரவண குகசண் முககரி ...... பிறகான குழக சிவசுத சிவய நமவென குரவ னருள்குரு ...... மணியேயென் றமுத இமையவர் திமிர்த மிடுகட லதென அநுதின ...... முனையோதும் அமலை அடியவர் கொடிய வினைகொடு மபய மிடுகுர ...... லறியாயோ திமிர எழுகட லுலக முறிபட திசைகள் பொடிபட ...... வருசூரர் சிகர முடியுடல் புவியில் விழவுயிர் திறைகொ டமர்பொரு ...... மயில்வீரா நமனை யுயிர்கொளு மழலி னிணைகழல் நதிகொள் சடையினர் ...... குருநாதா நளின குருமலை மருவி யமர்தரு நவிலு மறைபுகழ் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... குமர குருபர முருக சரவண குக சண்முக ... குமரா, குருபரா, முருகா, சரவணா, குகா, சண்முகா, கரி பிறகான குழக ... யானைமுகக் கணபதிக்குப் பின்பிறந்த இளையோய், சிவசுத ... சிவ குமாரனே, சிவய நமவென குரவன் ... சிவாயநம என்னும் பஞ்சாட்சரத்துக்குக் குருவான சிவன் அருள் குருமணியே யென்று ... அருளிய குருமணியே என்றெல்லாம், அமுத இமையவர் திமிர்தம் இடுகடலதென ... அமிர்தத்தை தேவர்கள் கடைந்திட்ட கடல் ஓசைபோல், அநுதினம் உனையோதும் ... நாள்தோறும் உன்னை வாயாரப் பாடி அமலை அடியவர் ... ஆரவாரத்துடன் துதிக்கும் அடியார்கள் கொடிய வினைகொடும் ... தமது கொடிய வினைகள் நீங்குவதற்காக அபய மிடுகுரல் அறியாயோ ... அபயம் என்று ஓலமிடும் குரலொலி உனக்குக் கேட்கவில்லையோ? திமிர எழுகட லுலக முறிபட ... இருண்ட ஏழு கடல்களும் உலகங்களும் அழிய, திசைகள் பொடிபட ... எட்டுத்திசைகளும் பொடிபட, வருசூரர் சிகர முடியுடல் புவியில் விழ ... போருக்கு வந்த சூரர்களின் குடுமியும் உடலும் விழ, உயிர் திறைகொடு அமர்பொரும் அயில்வீரா ... அவர்களின் உயிரைக் கவர்ந்து போரிட்ட வேல் வீரா, நமனை உயிர்கொளும் அழலின் இணைகழல் ... யமனின் உயிரை எடுத்த நெருப்பை ஒத்த அடியும்*, நதிகொள் சடையினர் குருநாதா ... கங்கைநதியைத் தாங்கிய சடையும் உடைய சிவனின் குருநாதா, நளின குருமலை மருவி யமர்தரு ... தாமரை நிறைந்த சுவாமிமலையில் பொருந்தி அமர்ந்தோனே, நவிலு மறைபுகழ் பெருமாளே. ... ஓதும் வேதங்கள் புகழும் பெருமாளே. |
* மார்க்கண்டேயனுக்காக யமனது உயிரை சிவபெருமான் காலால் உதைத்து எடுத்த காலபைரவ மூர்த்திக் கோலத்தை திருக்கடையூரில் காணலாம். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.477 pg 1.478 pg 1.479 pg 1.480 WIKI_urai Song number: 196 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
கௌமாரம் குழுவினர் The Kaumaram Team பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
திரு பொ. சண்முகம் Thiru P. Shanmugam பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
'சிங்கப்பூர்' செல்வி சுபாஷினி Singapore B. Subhashini பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
சுகந்திஸ்ரீ Ms Sughandhisri K. பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 214 - kumara gurubara muruga saravaNa (SwAmimalai) kumara gurupara muruga saravaNa guha shaNmuga kari ...... piRagAna kuzhaga sivasutha sivaya namavena kurava naruLguru ...... maNiyE endru amudha imaiyavar thimirdha midukadal adhena anudhinam ...... unaiyOdhum amalai adiyavar kodiya vinaikodum abhaya midukural ...... aRiyAyO thimira ezhukadal ulaga muRipada dhisaigaL podipada ...... varusUrar sikara mudiyudal bhuviyil vizhavuyir thiRaiko damarporu ...... mayilveerA namanai uyirkoLu mazhalin iNaikazhal nadhikoL sadaiyinar ...... gurunAthA naLina gurumalai maruvi amar tharu navilu maRai pugazh ...... perumALE. ......... Meaning ......... kumara gurupara muruga saravaNa: "KumarA, GuruparA, MurugA, SaravaNA, guha shaNmuga kari piRagAna kuzhaga sivasutha: GuhA, ShanmugA, the younger brother of GanEshA with an elephant-face, Son of SivA, sivaya namavena kurava naruLguru maNiyE: You are the Master of SivA who Himself is the Master of the Panchakshara (five letters) SivAyanama" - endru amudha imaiyavar thimirdha midukadal adhena: This chanting gets loud like the sound of the churning of the Milky Ocean for Divine Nectar by DEvAs; anudhinam unaiyOdhum amalai adiyavar: this is the loud prayer chanted daily by Your devotees; kodiya vinaikodum abhaya midukural aRiyAyO: and do You not hear their appeal made in complete surrender to You to do away with all their Karmas (bad deeds)? thimira ezhukadal ulaga muRipada dhisaigaL podipada: (In the war with asuras) the seven dark seas and the seven worlds were destroyed and all the eight directions were crushed; varusUrar sikara mudiyudal bhuviyil vizha: the tufts and bodies of the confronting asuras were knocked down; uyir thiRaiko damarporum ayilveerA: and You, with the Great Spear, snatched away their lives in the war. namanai uyirkoLu mazhalin iNaikazhal: With fiery feet that took the life of Yaman (Death-God)* nadhikoL sadaiyinar gurunAthA: and tresses bearing the River Ganga, Lord SivA has You as His Master! naLina gurumalai maruvi amar tharu: You have an abode at SwAmimalai, full of lotus flowers; navilu maRai pugazh perumALE.: and You are praised by VEdAs (scriptures) that are chanted, Oh Great One! |
* In MArkkandEya PuraNam, to save the life of His devotee, MArkkaNdeyA, who surrendered to Him, Lord SivA kicked Yaman to death with His foot, in the form of KAla Bhairava MUrthi in ThirukkadaiyUr. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |