திருப்புகழ் 209 கடிமா மலர்க்குள்  (சுவாமிமலை)
Thiruppugazh 209 kadimAmalarkkuL  (swAmimalai)
Thiruppugazh - 209 kadimAmalarkkuL - swAmimalaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனனா தனத்த தந்த தனனா தனத்த தந்த
     தனனா தனத்த தந்த ...... தனதான

......... பாடல் .........

கடிமா மலர்க்கு ளின்ப முளவேரி கக்கு நண்பு
     தருமா கடப்ப மைந்த ...... தொடைமாலை

கனமேரு வொத்தி டும்ப னிருமாபு யத்த ணிந்த
     கருணா கரப்ர சண்ட ...... கதிர்வேலா

வடிவார் குறத்தி தன்பொ னடிமீது நித்த முந்தண்
     முடியான துற்று கந்து ...... பணிவோனே

வளவாய்மை சொற்ப்ர பந்த முளகீர னுக்கு கந்து
     மலர்வாயி லக்க ணங்க ...... ளியல்போதி

அடிமோனை சொற்கி ணங்க வுலகாமு வப்ப என்று
     னருளால ளிக்கு கந்த ...... பெரியோனே

அடியேனு ரைத்த புன்சொ லதுமீது நித்த முந்த
     ணருளே தழைத்து கந்து ...... வரவேணும்

செடிநேரு டற்கு டம்பை தனின்மேவி யுற்றி டிந்த
     படிதான லக்க ணிங்க ...... ணுறலாமோ

திறமாத வர்க்க னிந்து னிருபாத பத்ம முய்ந்த
     திருவேர கத்த மர்ந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கடிமா மலர்க்குள் இன்பமுள வேரி கக்கு நண்புதரு ... வாசனை
மிகுந்த மலருள் மிக இனிப்பான தேனைச் சொட்டுவதும், அன்பைப்
பொழிவதுமான

மா கடப்பு அமைந்த தொடைமாலை ... சிறப்பான கடப்ப மலரால்
நெருக்கமாகத் தொடுக்கப்பட்ட பூமாலையை,

கனமேரு ஒத்திடும் பன்இருமா புயத்த ணிந்த ... பெருமைவாய்ந்த
மேரு மலையைப் போன்ற பன்னிரு சிறந்த புயங்களின் மீது அணிந்துள்ள

கருணாகர ப்ரசண்ட கதிர்வேலா ... கருணாகரனே, கடுமையும்
ஒளியும் கொண்ட வேலை உடையவனே,

வடிவார் குறத்தி தன்பொன் அடிமீது நித்தமும் ... அழகு நிறைந்த
குறத்தியாம் வள்ளியின் திருவடி மீது தினந்தோறும்

தண் முடியானது உற்று உகந்து பணிவோனே ... உனது குளிர்ந்த
முடியானது பொருந்தும்படியாகப் படிந்து மகிழ்பவனே,

வளவாய்மை சொற்ப்ரபந்தமுள கீரனுக்கு ... வளப்பமும்
மெய்ம்மையும் வாய்ந்த தேர்ச்சியான சொற்களை வைத்து நூல்கள்
இயற்றவல்ல நக்கீரனுக்கு

உகந்து மலர்வாய் இலக்கணங்கள் இயல்பு ஓதி ... விருப்பமுடன்
உன் மலர் வாயால் இலக்கண நயங்களை எடுத்துரைத்து,

அடிமோனை சொற்கிணங்க உலகாம் உவப்ப என்றுன் ... அடி,
மோனை சொல்லுக்குப் பொருந்த உலகம் உவப்ப* என்ற அடி எடுத்துக்
கொடுத்து,

அருளால் அளிக்க உகந்த பெரியோனே ... உன் அருள் வாக்கால்
மகிழ்ந்து கூறிய பெரியவனே,

அடியேனு ரைத்த புன்சொல் அதுமீது நித்தமும் ... யான்
சொல்லுகின்ற இந்தப் புல்லிய சொற்கள் மீதும் தினமும்

தணருளே தழைத்து உகந்து வரவேணும் ... குளிர்ந்த உன்
திருவருளைப் பாலித்து நீ மகிழ்ச்சியுடன் வரவேண்டும்.

செடிநேர் உடற் குடம்பை தனின்மேவியுற்றிடு ... பாவம் நிறைந்த
இந்த உடல் என்னும் கூட்டிலே பொருந்தி இருக்கும்

இந்த படிதான் அலக்கண் இங்கண் உறலாமோ ... இந்த
வகையிலே துன்பங்களை யான் இவ்வுலகில் அனுபவித்தல் தகுமோ?

திறமாதவர்க்க னிந்துன் இருபாத பத்மம் உய்ந்த ... திறம் வாய்ந்த
மகா தவசிகள் மனம் கனிந்து உன்னிரு பாத கமலங்களால் ஈடேறப்பெற்ற

திருவேரகத்தமர்ந்த பெருமாளே. ... திருவேரகமாம் சுவாமிமலையில்
வீற்றிருக்கும் பெருமாளே.


* நக்கீரருக்கு திருமுருகாற்றுப்படை நூலை இயற்றுமுன்பு, முருகன்
'உலகம் உவப்ப' என்ற முதலடியை எடுத்துக் கொடுத்தான். இங்கு
சந்தத்துக்காக 'உலகாம்' என்ற வார்த்தையை உபயோகித்துள்ளார்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.493  pg 1.494  pg 1.495  pg 1.496 
 WIKI_urai Song number: 203 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 209 - kadimA malarkkuL (SwAmimalai)

kadi mA malarkkuL inbam uLa vEri kakku naNbu
     tharu mA kadappa maindha ...... thodai mAlai

gana mEru oththidum panniru mA buyath aNindha
     karuNAkara prachaNda ...... kadhirvElA

vadivAr kuRaththi than ponnadi meedhu niththam unthaN
     mudiyAna dhutR ugandhu ...... paNivOnE

vaLavAymai soR prabandham uLa keeranuk ugandhu
     malarvAy ilakkaNangaL ...... iyalbOdhi

adimOnai soRkiNanga ulagAm uvappa endrun
     aruLAl aLikku kandha periyOnE

adiyEn uraiththa punchol adhumeedhu niththam unthaN
     aruLE thazhaith ugandhu ...... varavENum

chedi nEr udaR kudambai thanin mEvi utRi dindha
     padidhAn alakkaN ingaN ...... uRalAmO

thiRa mAdhavark kanindhun iru pAdha padhma muyndha
     thiru vEragath amarndha ...... perumALE.

......... Meaning .........

kadi mA malarkkuL inbam uLa vEri kakku naNbu tharu: Among all fragrant flowers, these flowers drip the sweetest honey and heighten affection;

mA kadappa maindha thodai mAlai: these are the famous kadappa flowers, closely interlaced in a garland

gana mEru oththidum panniru mA buyath aNindha karuNAkara: that adorns Your twelve shoulders, which are like the great Mount MEru, Oh Compassionate One!

prachaNda kadhirvElA: You hold in Your hand the fierce and sparkling spear!

vadivAr kuRaththi than ponnadi meedhu: On the lovely feet of VaLLi, the beautiful damsel of the KuRavAs,

niththam unthaN mudiyAna dhutR ugandhu paNivOnE: You place Your cool tresses everyday in blissful prostration!

vaLavAymai soR prabandham uLa keeranukkku: To Poet Nakkeeran, who was capable of composing poetical treatises with choicest words of wisdom and truth,

malarvAy ilakkaNangaL iyalbOdhi: You willingly taught, from Your own flower-like mouth, the subtlety of grammar;

adimOnai soRkiNanga ulagAm uvappa endru: synchronising with meter and rhyme, You aptly chose the words "ulagam uvappa"* (meaning, "to the delight of this world")

unaruLAl aLikku ukandha periyOnE: and happily blessed him with those opening words, Oh Wise One!

adiyEn uraiththa punchol adhumeedhu: The worthless utterances by the lowly me

niththam unthaN aruLE thazhaith ugandhu varavENum: may kindly be accepted by You every day with abundant and cool grace, and You should come to me happily!

chedi nEr udaR kudambai thanin mEvi utRidu: The sinful shell of my body is afflicted

indha padidhAn alakkaN ingaN uRalAmO: by many miseries in this world; is it fair that I suffer like this?

thiRa mAdhavark kanindhun iru pAdha padhma muyndha: Gifted people, with many penances to their credit and a mature heart, have attained Your lotus feet in

thiru vEragath amarndha perumALE.: ThiruvEragam (SwAmimalai), which is Your abode, Oh Great One!


* Before Nakkeerar set about to compose his work on Murugan in the name of 'ThirumurugAtRuppadai', Murugan blessed him with the opening words 'ulagam uvappa'. In this song, AruNagirinAthar uses the word 'ulagAm' for the sake of the meter.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 209 kadimA malarkkuL - swAmimalai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]