பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/494

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேரகம் திருப்புகழ் உரை 21 203 வாசனை பொருந்திய மலருள் இன்பம் உள்ள தேனைச் சொட்டுகின்றதும், அன்பைப் பெருக்குகின்றதுமான சிறந்த கடம்பால் (கடம்ப மலரால்) அமைக்கப்பட்ட பூமாலையைத் தங்க மயமான மேருமலை போன்ற பன்னிரு சிறந்த புயங்களில் அணிந்துள்ள கருணாகரனே! கடுமையும் ஒளியுங் கொண்ட வேலனே! அழகு நிறைந்த குறத்தி (வள்ளி) யின் அழகிய அடிமிசை தினந்தோறும் குளிர்ந்த (உனது) முடியானது பொருந்தும்படி மகிழ்ந்து பணிபவனே! வளப்பமும் மெய்ம்மையும் வாய்ந்த சொற்கள் அமைந்த நூல்களைப் பாட வல்ல நக்கீரர் (என்னும் புலவருக்கு) உனது மலர் வாயால் இலக்கண நயங்களை ஒதி அடி, மோனை சொல்லுக்குப் பொருந்த உலகம் உவப்ப என்று உனது அருள்வாக்கால் எடுத்து மகிழ்ந்து கூறிய பெரியவனே! அடியேன் சொல் லுகின்ற இந்தப் புல்லிய (இழிந்த) சொற்கள் மீதும் தினமும் குளிர்ந்த உனது திருவருளைப் பாலித்து மகிழ்ந்து வரவேணும்; To உலகம் என்பது உலகாம் என்றாயிற்று. “உலகம் உவப்ப என்று உன் அருளால் அளிக்க" என்றது. நக்கீரதேவர் முருகக் கடவுளின் அருள் பெறு நிமித்தம், உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு என்றெடுத்து அருளிச் செய்த திருமுருகாற்றுப் படையைக் குறித்தது.