(இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு எனது முக்கியக் குறிப்பைப் படியுங்கள் - நன்றி).
(Please read my important note before using this website - Thank You).
திருப்புகழ் 207 ஒருவரையும் ஒருவர்  (சுவாமிமலை)
Thiruppugazh 207 oruvaraiyumoruvar  (swAmimalai)
Thiruppugazh - 207 oruvaraiyumoruvar - swAmimalaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

mp3
 
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனன தனதனன தான தந்தனம்
     தனதனன தனதனன தான தந்தனம்
          தனதனன தனதனன தான தந்தனம் ...... தனதான

......... பாடல் .........

ஒருவரையு மொருவரறி யாம லுந்திரிந்
     திருவினையி னிடர்கலியொ டாடி நொந்துநொந்
          துலையிலிடு மெழுகதென வாடி முன்செய்வஞ் ...... சனையாலே

ஒளிபெறவெ யெழுபுமர பாவை துன்றிடுங்
     கயிறுவித மெனமருவி யாடி விண்பறிந்
          தொளிருமின லுருவதென வோடி யங்கம்வெந் ...... திடுவேனைக்

கருதியொரு பரமபொரு ளீது என்றுஎன்
     செவியிணையி னருளியுரு வாகி வந்தஎன்
          கருவினையொ டருமலமு நீறு கண்டுதண் ...... டருமாமென்

கருணைபொழி கமலமுக மாறு மிந்துளந்
     தொடைமகுட முடியுமொளிர் நூபு ரஞ்சரண்
          கலகலென மயிலின்மிசை யேறி வந்துகந் ...... தெனையாள்வாய்

திரிபுரமு மதனுடலு நீறு கண்டவன்
     தருணமழ விடையனட ராஜ னெங்கணுந்
          திகழருண கிரிசொருப னாதி யந்தமங் ...... கறியாத

சிவயநம நமசிவய கார ணன்சுரந்
     தமுதமதை யருளியெமை யாளு மெந்தைதன்
          திருவுருவின் மகிழெனது தாய்ப யந்திடும் ...... புதல்வோனே

குருகுகொடி யுடன்மயிலி லேறி மந்தரம்
     புவனகிரி சுழலமறை யாயி ரங்களுங்
          குமரகுரு வெனவலிய சேட னஞ்சவந் ...... திடுவோனே

குறமகளி னிடைதுவள பாத செஞ்சிலம்
     பொலியவொரு சசிமகளொ டேக லந்துதிண்
          குருமலையின் மருவுகுரு நாத வும்பர்தம் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

ஒருவரையும் ஒருவர் அறியாமலும் திரிந்து ... ஒருவர் போவது
ஒருவருக்குத் தெரியாதவண்ணம் (பொது மகளிர் வீட்டைத் தேடித்)
திரிந்து,

இருவினையின் இடர் கலியொடு ஆடி நொந்து நொந்து ...
நல்வினை தீவினை என்னும் இரு வினை காரணமாய்த் துன்பமும்
கலக்கமும் அடைந்து, மனம் வேதனைப்பட்டு,

உலையில் இடு மெழுகு அது என வாடி முன் செய்
வஞ்சனையாலே
... தீ அடுப்பில் இட்ட மெழுகுபோல வாட்டமுற்று,
முற்பிறப்பில் செய்த வஞ்சனைகளின் பயனாக,

ஒளி பெறவே எழுபு மர பாவை துன்றிடும் ... பெருமையுடன்
விளங்கி எழுந்து (பொம்மலாட்டத்தில்) மரப் பாவையைக் கட்டியிருக்கும்

கயிறு விதம் என மருவி ஆடி ... கயிற்றின் இழுப்பிற்குத் தக்க
பல ஆட்டங்களை ஆடி,

விண் பறிந்து ஒளிரும் மி(ன்)னல் உரு அது என ...
வானத்தில் வெளிப்பட்டு ஒளி வீசும் மின்னலின் உருவுபோல

ஓடி அங்கம் வெந்திடுவேனை ... வெட்டென ஓடி உடல் வெந்து
போய் மறைகின்ற என்னையும்,

கருதி ஒரு பரம பொருள் ஈது என்று ... அடியாருள் ஒருவனாக
எண்ணி, ஒப்பற்ற பரம் பொருள் இதுதான் என்று

என் செவி இணையில் அருளி ... என்னுடைய இரண்டு
காதுகளிலும் உபதேசித்து அருள் செய்து,

உருவாகி வந்த என் கருவினையொடு அரு மலமும் நீறு
கண்டு
... இம்மனித உருவில் கொண்டுவந்துள்ள என் பிறப்பு
வினையையும் அரிதான மும்மலங்களையும் பொடியாக்கி,

தண் தரு மா மென் கருணை பொழி கமல முகம் ஆறும் ...
குளிர்ச்சியைத் தருவதும், பெருமையும் மென்மையும் கொண்டு
கருணையைப் பொழிகின்றதுமான தாமரை மலர் போன்ற ஆறு
முகங்களும்,

இந்துளம் தொடை மகுட முடியும் ... கடப்ப மாலையும், இரத்தின
மணி மகுடங்களும்,

ஒளிர் நூபுரம் சரண் கலகலென ... ஒளி பொருந்திய பாதங்களில்
அணிந்துள்ள சிலம்புகள் கலகல என்று ஒலிக்க,

மயிலின் மிசை ஏறி வந்து உகந்து எனை ஆள்வாய் ... மயிலின்
மேல் ஏறி வந்து, மகிழ்வுடன் என்னை ஆண்டருள்க.

திரி புரமும் மதன் உடலு(ம்) நீறு கண்டவன் ... முப்புரங்களையும்,
மன்மதனுடைய உடலையும் எரித்துச் சாம்பலாக்கியவரும்,

தருணம் மழ விடையன் நடராஜன் ... மிகவும் இளமை வாய்ந்த
ரிஷபத்தை வாகனமாகக் கொண்டவரும், (சிதம்பரத்தில் பொற்சபையில்)
ஆனந்தத் தாண்டவம் புரிந்த நடராஜரும்,

எங்கணும் திகழ் அருண கிரி சொருபன் ... அங்கிங்கு எனாதபடி
எங்கும் விளங்கி, ஒளி வீசும் சிவந்த மலை உருவம் கொண்டவரும்,

ஆதி அந்தம் அங்கு அறியாத ... முதலும் முடிவும் அந்த அருண
கிரியில் மாலும் பிரமனும் அறிய முடியாத

சிவய நம நம சிவய காரணன் ... சிவாயநம என்னும் ஐந்தெழுத்தின்
மூல காரணப் பொருளானவரும்,

சுரந்த அமுதம் அதை அருளி எமை ஆளும் எந்தைதன் ...
(அந்த மந்திரத்தைச் சொன்னால்) ஊறும் ஞான அமுதத்தைத் தந்தருளி
நம்மை ஆண்டவருமான எந்தை சிவபெருமானது

திரு உருவின் மகிழ் எனது தாய் பயந்திடும் புதல்வோனே ...
திரு உருவின் இடது பாகத்தில் இருந்து மகிழும் என் தாயாகிய உமா
தேவி அருளிய மகனே,

குருகு கொடி உடன் மயிலில் ஏறி ... சேவற் கொடியுடன் மயிலின்
மீது ஏறி,

மந்தரம் புவன கிரி சுழல ... மந்தர மலை முதலாக உலகின் எல்லா
மலைகளும் சுழலவும்,

மறை ஆயிரங்களும் குமர குரு என ... எண்ணிலா வேதங்களும்
குமர குரு என்று ஒலிக்கவும்,

வலிய சேடன் அஞ்ச வந்திடுவோனே ... வலிமை பொருந்திய
ஆதிசேஷன் பயப்படும்படியாகவும் வலம் வருபவனே,

குறமகளின் இடை துவள பாத செம்சிலம்பு ஒலிய ...
வள்ளிநாயகியின் இடை துவளவும், பாதங்களில் அணிந்த செம்மை
வாய்ந்த சிலம்புகள் சப்தம் செய்ய,

ஒரு சசி மகளொடே கலந்து ... ஒப்பற்ற இந்திராணியின் மகளான
தேவயானையோடு கலந்து,

திண்குரு மலையின் மருவு குரு நாத உம்பர் தம்
பெருமாளே.
... வலிமையுள்ள சுவாமிமலையில் வீற்றிருக்கும்
குருநாதனே, தேவர்களின் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.509  pg 1.510  pg 1.511  pg 1.512  pg 1.513  pg 1.514 
 WIKI_urai Song number: 211 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

YouTube  'YouTube' Links for this song  
  இப்பாடலுக்கான யூ ட்யூப் பதிவுகள்  

to come வரவிருக்கின்றது

 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 


Song 207 - oruvaraiyum oruvar (SwAmimalai)

oruvaraiyum oruvar aRiyAmalun thirindhu
     iruvinaiyin idar kaliyodAdi nondhu nondhu
          ulaiyilidu mezhugadhena vAdi munsey ...... vanjanaiyAlE

oLi peRave ezhubu mara pAvai thundridung
     kayiRu vidhamena maruvi Adi viN paRindhu
          oLiru minal uruvadhena Odi angam ...... vendhiduvEnai

karudhiyoru parama poruLeedhu endru en
     seviyiNaiyin aruLi uruvAgi vandha en
          karuvinaiyo darumalamu neeRu kaNdu thaN ...... tharu mAmen

karuNaipozhi kamalamukam ARum indhuLan
     thodai makuta mudiyum oLir nUpuran charaN
          galagalena mayilin misai ERi vandhugandh ...... enaiyALvAy

thiripuramu madhanudalu neeRu kaNdavan
     tharuNam azhavidaiya nadarAja nengaNun
          thigazharuNa giri sorUpa nAdhi anthaman ...... gaRiyAdha

sivayanama namasivaya kAraNan suran
     dhamudhamadhai aruLi emai ALum endhai than
          thiru uruvin magizh enadhu thAy payandhidum ...... pudhalvOnE

kurugu kodiyudan mayilil ERi mandharam
     buvanagiri suzhala maRai AyirangaLung
          kumaraguru enavaliya sEdan anja ...... vandhiduvOnE

kuRamagaLin idai thuvaLa pAdha chenchilam
     boliya oru sasimagaLodE kalandhu thiN
          gurumalaiyin maruvu gurunAtha umbar tham ...... perumALE.

......... Meaning .........

oruvaraiyum oruvar aRiyAmalun thirindhu: I used to roam around secretly visiting the whore-house so that no one else could see my movement;

iruvinaiyin idar kaliyodAdi nondhu nondhu: I suffered and felt wretched, agonising from the impact of my two deeds (both good and bad);

ulaiyilidu mezhugadhena vAdi: like the wax dropped in the fire, I melted;

munsey vanjanaiyAlE oLi peRave ezhubu mara pAvai: As a result of my misdeeds in previous births, I looked like a flashy puppet made of wood,

thundridum kayiRu vidhamena maruvi Adi: dancing in compliance with the manipulation of the attached strings;

viN paRindhu oLiru minal uruvadhena Odi angam vendhiduvEnai: like the flash of lightning in the sky, my body too fades away in a flicker and burns away;

karudhiyoru parama poruLeedhu endru en seviyiNaiyin aruLi: even then, kindly consider me as one of Your devotees and preach to me in both my ears declaring "This is the matchless Supreme thing";

uruvAgi vandha en karuvinaiyo darumalamu neeRu kaNdu: all the deeds that I carried forward into this birth with this human form and all the three blemishes (arrogance, karma and delusion) must be shattered to pieces;

thaN tharu mAmen karuNaipozhi kamalamukam ARum: with Your six great lotus faces, that are cool, soft and showering compassion;

indhuLan thodai makuta mudiyum oLir nUpuran charaN galagalena: Your garland of kadappa flowers, the dazzling crowns studded with rubies and gems, the anklets in Your feet jingling,

mayilin misai ERi vandhugandh enaiyALvAy: You must mount the peacock and come with relish to bless me!

thiripuramu madhanudalu neeRu kaNdavan: He burnt down to ashes Thiripuram and the body of Manmathan (God of Love);

tharuNam azhavidaiya nadarAjan: He has the young and robust bull (Nandi) as His vehicle; He is Lord NadarAjan who danced the blissful cosmic dance (at the golden shrine in Chidhambaram);

engaNun thigazharuNa giri sorUpan: He is Omnipresent in the form of the radiant and reddish Mount AruNagiri;

Adhi anthaman gaRiyAdha: the top and the bottom of that AruNagiri, could not be discerned by VishNu and BrahmA;

sivayanama namasivaya kAraNan: He is the primordial causal substance and meaning of the five sacred letters "SivAyanama";

surandhamudhamadhai aruLi emai ALum endhai than: (on chanting that ManthrA) the nectar of True Knowledge wells up which is graciously distributed to us by Him; He is the Protector, Lord SivA, our Father.

thiru uruvin magizh enadhu thAy payandhidum pudhalvOnE: On His left side our Divine Mother PArvathi is concorporate, and You are Her child!

kurugu kodiyudan mayilil ERi: Holding the staff of Rooster in Your Hand and mounting the Peacock,

mandharam buvanagiri suzhala: making all the mountains of the world, including Mount Mandharam, spin,

maRai AyirangaLung kumaraguru ena: against the loud chanting of "Oh Kumara! Oh Master!" by thousands of vEdAs,

valiya sEdan anja vandhiduvOnE: and scaring away the powerful serpent, AdhisEshan, You flew around!

kuRamagaLin idai thuvaLa pAdha chenchilamboliya: Making the waist of VaLLi, the damsel of the KuRavAs, give way and rattling the reddish anklets on her feet,

oru sasimagaLodE kalandhu: and uniting with DevayAnai, the daughter of Sasi, IndrA's wife,

thiNgurumalaiyin maruvu gurunAtha: You are seated in the sturdy mountain of SwAmimalai, Oh Master!

umbar tham perumALE.: You are the Lord of the Celestials, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

mp3
 

Thiru Arunagirinathar's Thiruppugazh - 207 oruvaraiyum oruvar - swAmimalai


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

 மேலே   top