திருப்புகழ் 199 விரை மருவு  (பழநி)
Thiruppugazh 199 viraimaruvu  (pazhani)
Thiruppugazh - 199 viraimaruvu - pazhaniSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனன தனன தந்த தனதனன தனன தந்த
     தனதனன தனன தந்த ...... தனதான

......... பாடல் .........

விரைமருவு மலர ணிந்த கரியபுரி குழல்ச ரிந்து
     விழவதன மதிவி ளங்க ...... அதிமோக

விழிபுரள முலைகு லுங்க மொழிகுழற அணைபு குந்து
     விரகமயல் புரியு மின்ப ...... மடவார்பால்

இரவுபக லணுகி நெஞ்ச மறிவழிய வுருகு மந்த
     இருளகல வுனது தண்டை ...... யணிபாதம்

எனதுதலை மிசைய ணிந்து அழுதழுது னருள்வி ரும்பி
     யினியபுகழ் தனைவி ளம்ப ...... அருள்தாராய்

அரவில்விழி துயில்மு குந்த னலர்கமல மலர்ம டந்தை
     அழகினொடு தழுவு கொண்டல் ...... மருகோனே

அடலசுர ருடல்பி ளந்து நிணமதனில் முழுகி யண்ட
     அமரர்சிறை விடுப்ர சண்ட ...... வடிவேலா

பரவைவரு விடம ருந்து மிடறுடைய கடவுள் கங்கை
     படர்சடையர் விடைய ரன்ப ...... ருளமேவும்

பரமரரு ளியக டம்ப முருகஅறு முகவ கந்த
     பழநிமலை தனில மர்ந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

விரை மருவு மலர் அணிந்த கரிய புரி குழல் சரிந்து விழ
வதன மதி விளங்க
... மணம் கமழும் பூக்களை அணிந்த, கரிய
சுருண்ட கூந்தல் சரிந்து விழ, சந்திரனைப் போன்று முகம் விளங்க,

அதிமோக விழி புரள முலை குலுங்க மொழி குழற அணை
புகுந்து
... அதிக காம மயக்கம் தர வல்ல கண்கள் புரள, மார்பகங்கள்
குலுங்க, பேச்சு குழற, படுக்கையில் புகுந்து

விரக மயல் புரியும் இன்ப மடவார் பால் இரவு பகல் அணுகி
நெஞ்சம் அறிவு அழிய உருகும் அந்த இருள் அகல
... காம
மோகச் செயல்களைச் செய்யும் இன்ப வேசையரிடத்து இரவும் பகலும்
நெருங்கிச் சென்று, மனமும் அறிவும் அழிந்து, உருகும் அந்த
அஞ்ஞானம் நீங்க,

உனது தண்டை அணி பாதம் எனது தலை மிசை அணிந்து
அழுது அழுது அருள் விரும்பி
... உனது தண்டைகள் அணிந்த
திருவடியை எனது தலை மீது தரித்து, நான் மேலும் மேலும் அழுது
உன் திருவருளையே விரும்பி,

இனிய புகழ் தனை விளம்ப அருள் தாராய் ... இனிமையான
உனது திருப்புகழைச் சொல்ல அருள் வாக்கு தந்து அருளுக.

அரவில் விழி துயில் முகுந்தன் அலர் கமல மலர் மடந்தை
அழகினொடு தழுவு கொண்டல் மருகோனே
... பாம்பின் மீது
கண் துயிலும் முகுந்தன், மலர்ந்த தாமரை மலரில் வீற்றிருக்கும் அழகிய
லக்ஷ்மியோடு தழுவும் கருமேக நிறத்தினராகிய திருமாலின் மருகனே,

அடல் அசுரர் உடல் பிளந்து நிணம் அதனில் முழுகி அண்ட
அமரர் சிறை விடு ப்ரசண்ட வடிவேலா
... வலிமையான
அசுரர்களின் உடல்களைப் பிளந்து, அவ்வுடல்களின் ரத்தக்
கொழுப்பில் முழுகி, விண்ணுலகத்துத் தேவர்களின் சிறையை
ஒழித்த வீரப்ரதாபம் வாய்ந்த கூரிய வேலனே.

பரவை வரு விடம் அருந்து மிடறுடைய கடவுள் கங்கை
படர் சடையர் விடையர்
... பாற்கடலில் தோன்றிய விஷத்தை
உண்ட (நீல) கண்டத்தை உடைய கடவுள், கங்கை படர்ந்த
சடையை உடையவர், ரிஷப வாகனத்தர்,

அன்பர் உ(ள்)ள மேவும் பரமர் அருளிய கடம்ப முருக
அறுமுகவ கந்த
... அன்பர்கள் உள்ளத்தில் வீற்றிருக்கும் பரம
சிவனார் அருளிய கடம்பனே, முருகனே, ஆறு திருமுகங்களை
உடையவனே, கந்தனே,

பழநி மலை தனில் அமர்ந்த பெருமாளே. ... பழனி மலையில்
அமர்ந்தருளும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.348  pg 1.349  pg 1.350  pg 1.351 
 WIKI_urai Song number: 144 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 199 - virai maruvu (pazhani)

viraimaruvu malara Nintha kariyapuri kuzhalsa rinthu
     vizhavathana mathivi Langa ...... athimOka

vizhipuraLa mulaiku lunga mozhikuzhaRa aNaipu kunthu
     virakamayal puriyu minpa ...... madavArpAl

iravupaka laNuki nenja maRivazhiya vuruku mantha
     iruLakala vunathu thaNdai ...... yaNipAtham

enathuthalai misaiya Ninthu azhuthazhuthu naruLvi rumpi
     yiniyapukazh thanaivi Lampa ...... aruLthArAy

aravilvizhi thuyilmu kuntha nalarkamala malarma danthai
     azhakinodu thazhuvu koNdal ...... marukOnE

adalasura rudalpi Lanthu niNamathanil muzhuki yaNda
     amararsiRai vidupra saNda ...... vadivElA

paravaivaru vidama runthu midaRudaiya kadavuL kangai
     padarsadaiyar vidaiya ranpa ...... ruLamEvum

paramararu Liyaka dampa murukARu mukava kantha
     pazhanimalai thanila marntha ...... perumALE.

......... Meaning .........

virai maruvu malar aNintha kariya puri kuzhal sarinthu vizha vathana mathi viLanga: Their dark curly hair, bedecked with fragrant flowers, becoming dishevelled and falling all over, their face shining like the moon,

athimOka vizhi puraLa mulai kulunga mozhi kuzhaRa aNai pukunthu: their highly provocative eyes rolling, their bosom throbbing, their speech faltering, they take (their suitors) to the bed

viraka mayal puriyum inpa madavAr pAl iravu pagal aNuki nenjam aRivu azhiya urukum antha iruL akala: and perform various passionate deeds; accosting these enchanting whores in close range, day and night, one loses one's mind and intellect; to get rid of that senseless act of melting away for them,

unathu thaNdai aNi pAtham enathu thalai misai aNinthu azhuthu azhuthu aruL virumpi: I wish to place Your hallowed feet, adorned by thandai (anklets), upon my head, crying incessantly, seeking Your blessing

iniya pukazh thanai viLampa aruL thArAy: and speaking of Your sweet glory; for that, kindly bless me with gracious words, Oh Lord!

aravil vizhi thuyil mukunthan alar kamala malar madanthai azhakinodu thazhuvu koNdal marukOnE: He is Mukunthan, slumbering on the serpent; He hugs the beautiful Goddess Lakshmi who is seated on a well-blossomed lotus; He is of the complexion of dark cloud; and You are the nephew of that Lord VishNu!

adal asurar udal piLanthu niNam athanil muzhuki aNda amarar siRai vidu prasaNda vadivElA: Having shattered the strong bodies of the demons, bathing in the bloody flesh of their corpses and liberating the celestials from their prison, Your spear shines in triumphant glory, Oh Lord!

paravai varu vidam arunthu midaRudaiya kadavuL kangai padar sadaiyar vidaiyar: He is the Lord with a (blue - ) stained throat having gulped the poison that emerged from the milky ocean; He has River Gangai on His matted hair; He mounts the bull (Nandi) serving Him as the vehicle;

anpar u(L)La mEvum paramar aruLiya kadampa muruka aRumukava kantha: He dwells in the hearts of His devotees; He is the supreme Lord SivA, and You are His son, Oh KadambA; Oh MurugA, You have six hallowed faces, Oh KanthA!

pazhani malai thanil amarntha perumALE.: You are graciously seated in Mount Pazhani, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 199 virai maruvu - pazhani

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]