திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 197 வாரணந் தனை (பழநி) Thiruppugazh 197 vAraNanthanai (pazhani) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தான தந்தன தானான தாதன தான தந்தன தானான தாதன தான தந்தன தானான தாதன ...... தனதான ......... பாடல் ......... வார ணந்தனை நேரான மாமுலை மீத ணிந்திடு பூணார மாரொளி வால சந்திர னேராக மாமுக ...... மெழில்கூர வார ணங்கிடு சேலான நீள்விழி யோலை தங்கிய வார்காது வாவிட வான இன்சுதை மேலான வாயித ...... ழமுதூறத் தோர ணஞ்செறி தார்வாழை யேய்தொடை மீதில் நின்றிடை நூல்போலு லாவியெ தோகை யென்றிட வாகாக வூரன ...... நடைமானார் தோத கந்தனை மாமாயை யேவடி வாக நின்றதெ னாஆய வோர்வது தோணி டும்படி நாயேனுள் நீயருள் ...... தருவாயே கார ணந்தனை யோராநி சாசரர் தாம டங்கலு மீறாக வானவர் காவ லிந்திர னாடாள வேயயில் ...... விடும்வீரா கார்வி டந்தனை யூணாக வானவர் வாழ்த ரும்படி மேனாளி லேமிசை காள கண்டம காதேவ னார்தரு ...... முருகோனே ஆர ணன்றனை வாதாடி யோருரை ஓது கின்றென வாராதெ னாவவ னாண வங்கெட வேகாவ லாமதி ...... லிடும்வேலா ஆத வன்கதி ரோவாது லாவிய கோபு ரங்கிளர் மாமாது மேவிய ஆவி னன்குடி யோனேசு ராதிபர் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... வாரணம் தனை நேரான மா முலை மீது அணிந்திடு பூண் ஆரம் ஆர் ஒளி வால சந்திர(ன்) நேர் ஆக மா முகம் எழில் கூர ... யானைக்கு ஒப்பான பெரிய மார்பகங்களின் மேல் அணிந்துள்ள ஆபரணமாகிய முத்து மாலையின் பேரொளியும், பூரண சந்திரனுக்கு ஒப்பான சிறந்த முகம் அழகு மிகுந்து பொலியவும், வார் அணங்கிடு சேல் ஆன நீள் விழி ஓலை தங்கிய வார் காது வாவிட வான இன் சுதை மேலான வாய் இதழ் அமுது ஊற ... காண்போருக்கு மிக்க வருத்தம் தர வல்ல, சேல் மீன் போன்று நீண்ட கண்கள் ஓலை பூண்டுள்ள அகன்ற காதுகளைத் தாக்கி நிற்கவும், தேவர்களது இனிய அமுதத்திலும் மேலான இனிமையுடன் வாயிதழ்கள் அமுதத்தைப் பொழியவும், தோரணம் செறி தார் வாழை ஏய் தொடை மீதில் நின்று இடை நூல் போல் உலாவியே ... அலங்காரத் தோரணங்களுக்குப் பயன்படும் குலை தள்ளிய வாழையை நிகர்க்கும் தொடையின் மேல் விளங்கும் இடை மெல்லிய நூலுக்கு ஒப்பாக உலாவி, தோகை என்றிட வாகாக ஊர் அ(ன்)ன நடை மானார் ... மயில் என்று சொல்லும்படி அழகாக ஊர்ந்து செல்லும் அன்னத்துக்கு ஒப்பான நடையுடன் விளங்கும் விலைமாதர்களின் தோதகம் தனை மா மாயையே வடிவாக நின்றது எனா ஆய ஓர்வது தோணிடும்படி நாயேன் உள் நீ அருள் தருவாயே ... வஞ்சகச் செயலை பெரிய மாயையே வடிவு கொண்டு நிற்கின்றது என ஆய்ந்து அறியும் அறிவு எனக்குத் தோன்றும்படி அடியேனுடைய உள்ளத்தில் நீ அருள் பாலிப்பாயாக. காரணம் தனை ஓரா நிசாசரர் தாம் அடங்கலும் ஈறாக வானவர் காவல் இந்திர நாடு ஆளவே அயில் விடும் வீரா ... (முருகவேள் எதற்காகப் படையெடுத்து வந்துள்ளார் என்னும்) காரணத்தை ஆய்ந்து அறியாத அசுரர்கள் எல்லாரும் முடிந்து அழியவும், தேவர்களின் அரசனான இந்திரன் தன் பொன்னுலகத்தை ஆளவும், வேலைச் செலுத்திய வீரனே, கார் விடம் தனை ஊணாக வானவர் வாழ் தரும்படி மேல் நாளிலே மிசை காள கண்ட மகா தேவனார் தரு முருகோனே ... தேவர்கள் வாழும்படி, முன்பு ஒரு நாள் கரிய (ஆலகால) விஷத்தை உணவாக உண்டவரும், கருநீலகண்டத்தை உடையவருமான சிவ பெருமான் தந்து அருளிய முருகனே, ஆரணன் தனை வாதாடி ஓர் உரை ஓதுக என்று என வாராது எனா அவன் ஆணவம் கெடவே காவலாம் அதில் இடும் வேலா ... வேதம் வல்ல பிரமனுடன் வாதம் செய்து, ஒரு சொல்லுக்கு (பிரணவத்துக்கு) உரை ஓதுக என்று அவனைக் கேட்க, வாராது என்று கூறி விழித்து நிற்க, அவனுடைய ஆணவம் அழிய, பிரமனைச் சிறையில் வைத்த வேலனே, ஆதவன் கதிர் ஓவா(து) உலாவிய கோபுரம் கிளர் மா மாது மேவிய ஆவினன்குடியோனே சுர அதிபர் பெருமாளே. ... சூரியனுடைய ஒளி நீங்காது எப்போதும் வீசுகின்ற கோபுரங்கள் விளங்குவதும், லக்ஷ்மி தேவி விரும்பி வாசம் செய்வதுமான திருவாவினன் குடியில் (பழநியில்) வீற்றிருப்பவனே, தேவர் தலைவர்களின் பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.256 pg 1.257 pg 1.258 pg 1.259 WIKI_urai Song number: 102 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 197 - vAraNan thanai (pazhani) vAra Nanthanai nErAna mAmulai meetha Ninthidu pUNAra mAroLi vAla chanthira nErAka mAmuka ...... mezhilkUra vAra Nangidu sElAna neeLvizhi yOlai thangiya vArkAthu vAvida vAna insuthai mElAna vAyitha ...... zhamuthURath thOra NanjeRi thArvAzhai yEythodai meethil ninRidai nUlpOlu lAviye thOkai yenRida vAkAka vUrana ...... nadaimAnAr thOtha kanthanai mAmAyai yEvadi vAka ninRathe nAAya vOrvathu thONi dumpadi nAyEnuL neeyaruL ...... tharuvAyE kAra Nanthanai yOrAni sAsarar thAma dangalu meeRAka vAnavar kAva linthira nAdALa vEyayil ...... vidumveerA kArvi danthanai yUNAka vAnavar vAzhtha rumpadi mEnALi lEmisai kALa kaNdama kAthEva nArtharu ...... murukOnE Ara NanRanai vAthAdi yOrurai Othu kenRena vArAthe nAvava nANa vamkeda vEkAva lAmathi ...... lidumvElA Atha vankathi rOvAthu lAviya kOpu ramkiLar mAmAthu mEviya Avi nankudi yOnEsu rAthipar ...... perumALE. ......... Meaning ......... vAraNam thanai nErAna mA mulai meethu aNinthidu pUN Aram Ar oLi vAla chanthira(n) nEr Aka mA mukam ezhil kUra: The dazzling radiance from the string of pearls ornamentally worn on their elephant-like bosom, the great beauty of their face that is like the full moon, vAr aNangidu sEl Ana neeL vizhi Olai thangiya vAr kAthu vAvida vAna in suthai mElAna vAy ithazh amuthu URa: their sEl-fish-like long eyes, causing pangs of agony to the bystanders, that run right up to the golden ear-studs as if to attack the ears, the saliva oozing from their lips sweeter than the divine nectar, thOraNam seRi thAr vAzhai Ey thodai meethil ninRu idai nUl pOl ulAviyE: their slender thread-like waist supported by the thighs looking like the trunk of the plantain tree, with bunches of unripe fruits, used for decorating with festoons, thOkai enRida vAkAka Ur a(n)na nadai mAnAr: and their gait of the swan are the characteristics of these whores who glide along beautifully like the peacock; thOthakam thanai mA mAyaiyE vadivAka ninRathu enA Aya Orvathu thONidumpadi nAyEn uL nee aruL tharuvAyE: kindly enlighten me in my heart with the knowledge to research and realise that the treacherous act of these whores is nothing but a huge form of delusion, Oh Lord! kAraNam thanai OrA nisAsarar thAm adangalum eeRAka vAnavar kAval inthira nAdu ALavE ayil vidum veerA: Those demons who never realised the reason (as to why Lord Murugan had invaded them) were all annihilated, and IndrA, the King of the Celestials, was able to reign His kingdom when You wielded the spear, Oh valorous One! kAr vidam thanai UNAka vAnavar vAzh tharumpadi mEl nALilE misai kALa kaNda makA thEvanAr tharu murukOnE: Enabling the celestials to live, once, He imbibed the dark poison (AlakAlam) as food; He has a dark-blue stain on His throat; and that Lord SivA graciously delivered You as His son, Oh MurugA! AraNan thanai vAthAdi Or urai Othuka enRu ena vArAthu enA avan ANavam kedavE kAvalAm athil idum vElA: You once argued with Brahma, well-versed in the VEdAs, and asked Him to interpret the meaning of the PraNava ManthrA; when He could not do so and stood baffled, You decided to get rid of His arrogance by imprisoning Brahma, Oh Lord with the spear! Athavan kathir OvA(thu) ulAviya kOpuram kiLar mA mAthu mEviya AvinankudiyOnE sura athipar perumALE.: On the temple towers of this place, the sun's rays are constantly shining without losing their brightness; in this town, ThiruvAvinankudi (Pazhani), Goddess Lakshmi resides with relish, and this is Your abode, Oh Lord! You are the Lord of the leaders of the celestials, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |