பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகி திருப்புகழ் உரை - 241 ஆதி சங்கரனார் (எனப்படும் சிவபிரான து) பாகத்தில் விளங்கும் மாது, உமையம்மை, அழகிய அம்பிகை, மாதா, மனோன் ஆயி, சுந்தரி, (உயிர்கட்குத் தாயான நாரணி, அழகி. (ஆகிய பார்வதிதேவி) ஆசை பூண்டு பெருமையுடனே(உன்னைச்)சீராட்ட,அழகு பல கொண்ட ಅಡಿ சிறந்து விளங்கும் ல் திருவாவினன்குடி வாழ்வு கொண்டிருக்கும் தேவர்கள் பெருமாளே! (அருள் தாராய்.) 1 O2 யானைக்கு ஒப்பான பெரிய கொங்கைகளின் மேலே அணிந் துள்ள அணிகலனாம் முத்து மாலையின் பேரொளியும், இளநிலாவுக்கு ஒப்பர்ன் சிறந்த முகமும் அழகு மிக்குப் பொலியவும், நீண்ட, (காண்போர்க்கு) வருத்தம் தரவல்ல, சேல்மீன் போன்ற பெரிய கண்கள் ஒலை பூண்டுள்ள நீண்ட காதுகளைத் தாவி நிற்கவும், தேவரது இனிய அமுதத்தினும் மேலான வாயிதழ்கள் அமுதுாறவும்: (அலங்கார) தோரணத்துக்குப் பயன்படும் குலை தள்ளிய வாழையை நிகர்க்கும் தொடை மேலே விளங்கும் இட்ையானது நூலுக்கு ஒப்பாக விளங்கவும் உலாவி, மயில் என்று சொல்லும்ப்டி, அழகாக ஊர்ந்து செல்லும் அன்னத்துக்கு ஒப்பான நடையுடன் விளங்கும் மாதர்களின் - வஞ்சகச் செயலை மகா மாயையே வடிவுகொண்டு நிற்கின்ற தென ஆய்ந்து அறியும் அறிவு (எனக்கு) விளங்கும்படி அடியேனுட்ைய உள்ளத்தில் நீ அருள் பாலிப்பாயாக (ஏன் நம்மீது முருகவேள் படையெடுத் வந்துள்ளார் என்னும்) காரணத்தை ஆய்ந்து போக் அசுரர்கள் எல்லாரும் முடிந் தழிய, தேவர்களுக்குக் காவலாய் நிற்கும் இந்திரன் தனது நாட்டை ஆள் வேலைச் செலுத்திய வீரனே -