திருப்புகழ் 196 வாதம் பித்தம்  (பழநி)
Thiruppugazh 196 vAdhampiththam  (pazhani)
Thiruppugazh - 196 vAdhampiththam - pazhaniSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானந் தத்தன தானன தானன
     தானந் தத்தன தானன தானன
          தானந் தத்தன தானன தானன ...... தனதான

......... பாடல் .........

வாதம் பித்தமி டாவயி றீளைகள்
     சீதம் பற்சனி சூலைம கோதர
          மாசங் கட்பெரு மூலவி யாதிகள் ...... குளிர்காசம்

மாறுங் கக்கலொ டேசில நோய்பிணி
     யோடுந் தத்துவ காரர்தொ ணூறறு
          வாருஞ் சுற்றினில் வாழ்சதி காரர்கள் ...... வெகுமோகர்

சூழ்துன் சித்ரக பாயைமு வாசைகொ
     டேதுஞ் சற்றுண ராமலெ மாயைசெய்
          சோரம் பொய்க்குடி லேசுக மாமென ...... இதின்மேவித்

தூசின் பொற்சர மோடுகு லாயுல
     கேழும் பிற்பட வோடிடு மூடனை
          தூவஞ் சுத்தடி யாரடி சேரநி ...... னருள்தாராய்

தீதந் தித்திமி தீதக தோதிமி
     டூடுண் டுட்டுடு டூடுடு டூடுடு
          சேசெஞ் செக்கெண தோதக தீகுட ...... வெனபேரி

சேடன் சொக்கிட வேலைக டாகமெ
     லாமஞ் சுற்றிட வேயசு ரார்கிரி
          தீவும் பொட்டெழ வேயனல் வேல்விடு ...... மயில்வீரா

வேதன் பொற்சிர மீதுக டாவிந
     லீசன் சற்குரு வாயவர் காதினில்
          மேவும் பற்றிலர் பேறரு ளோதிய ...... முருகோனே

வேஷங் கட்டிபி னேகிம காவளி
     மாலின் பித்துற வாகிவி ணோர்பணி
          வீரங் கொட்பழ னாபுரி மேவிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

வாதம் பித்த மிடாவயிறு ஈளைகள் ... வாதநோய், பித்த நோய்கள்,
பானை போன்ற வயிறு, கோழையால் வரும் க்ஷயரோகங்கள்,

சீதம் பற்சனி சூலை மகோதரம் ... சீதபேதி நோய், ஜன்னி, வயிற்று
வலி, மகோதரம்,

ஆசங் கட்பெரு மூலவி யாதிகள் குளிர்காசம் ... கண்கள்
சம்பந்தமான நோய்கள், பெரிய மூல வியாதிகள், ஜுரக் குளிர், காச நோய்,

மாறுங் கக்கலொ டேசில நோய்பிணியோடும் ... தொடர்ந்து வரும்
வாந்தி முதலிய சில நோய், பிணி வகைகளுடன்,

தத்துவ காரர்தொணூறறு வாருஞ் சுற்றினில் வாழ் ...
தொண்ணூற்றாறு* தத்துவக் கூட்டங்களின் மத்தியில் வாழ்கின்ற

சதி காரர்கள் வெகுமோகர் சூழ் ... வஞ்சகர்களும்
பேராசைக்காரருமான ஐம்புலன்களால் சூழப்பட்டு,

துன் சித்ர கபாயை முவாசைகொடு ... பொல்லாத விசித்திரமான
தேக ஆசையால், 'மண்', 'பெண்', 'பொன்' என்ற மூவாசையும் கொண்டு,

ஏதுஞ் சற்றுணராமலெ மாயைசெய் ... எந்த நல்ல பொருளையும்
சற்றும் உணராமல், மாயையை விளைவிக்கின்ற

சோரம் பொய்க்குடிலே சுகமாமென இதின்மேவி ...
கள்ளத்தனமும், பொய்ம்மையுமே கொண்ட இவ்வுடல்தான் சுகமெனக்
கருதி, இந்த உடலைப் போற்றி,

தூசின் பொற்சரமோடு குலாய் ... நல்ல ஆடைகளாலும், தங்கச்
சங்கிலிகளாலும் அலங்கரித்து மகிழ்ந்து,

உலகேழும் பிற்படவோடிடு மூடனை ... ஏழு உலகங்களும்
எனக்குப் பிற்பட்டதாக எண்ணி முந்தி ஓடிடும் மூடனாகிய நான்,

தூவஞ் சுத்தடி யாரடி சேரநினருள்தாராய் ... தூய்மை வாய்ந்த
அழகிய சுத்தமான உன் அடியார்களின் திருவடி சேரும் பாக்கியத்தைப்
பெற உனது திருவருளைத் தர வேண்டுகிறேன்.

தீதந் தித்திமி தீதக தோதிமி டூடுண் டுட்டுடு டூடுடு டூடுடு
சேசெஞ் செக்கெண தோதக தீகுட வெனபேரி
... தீதந் தித்திமி
தீதக தோதிமி டூடுண் டுட்டுடு டூடுடு டூடுடு சேசெஞ் செக்கெண தோதக
தீகுட என்ற முழக்கத்துடன் பேரிகைகள் முழங்க,

சேடன் சொக்கிட வேலைக டாகமெலாமஞ் சுற்றிடவே ...
ஆதிசேஷன் மயக்கமுற, கடல்களும், அண்ட கோளங்களும் அச்சம்
கொள்ள,

அசு ரார்கிரி தீவும் பொட்டெழவே ... அசுரர்கள் நிறைந்து இருந்த
மலைகளும், தீவுகளும் பொடி எழவே நாசமுற,

அனல் வேல்விடு மயில்வீரா ... நெருப்பை வீசும் வேலினைச்
செலுத்தும் மயில் வீரனே,

வேதன் பொற்சிர மீதுகடாவி ... பிரமனது அழகிய சிரங்களின் மீது
குட்டிப் புடைத்து,

நல் ஈசன் சற்குருவாய் அவர் காதினில் ... நல்ல ஈசனாம்
சிவபிரானுக்குச் சற்குருவாக அமைந்து, அவர் திருச்செவிகளில்

மேவும் பற்றிலர் பேறரு ளோதிய முருகோனே ... நாடுகின்ற
பற்றற்றவர்கள் பெறத்தக்கதாகிய பிரணவப் பொருளை ஓதிய முருகனே,

வேஷங் கட்டிபின் ஏகி மகாவ(ள்)ளி ... வேடன், வேங்கை,
கிழவன் - எனப் பல வேஷங்கள் தரித்து, பின்பு தினைப்புனம் சென்று,
சிறந்த வள்ளியின் மீது,

மாலின் பித்துறவாகி ... மோக மயக்கம் கொண்டு பித்துப்
பிடித்தவனாகி,

விணோர்பணி வீரங் கொட்பழ னாபுரி மேவிய பெருமாளே. ...
தேவர்கள் பணியும் பராக்கிரமம் வாய்ந்த பழநியம்பதியில் மேவிய
பெருமாளே.


* 96 தத்துவங்கள் பின்வருமாறு:

36 பரதத்துவங்கள் (அகநிலை):
ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.

ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை):
மண், தீ, நீர், காற்று, வெளி.

ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை):
வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.464  pg 1.465  pg 1.466  pg 1.467 
 WIKI_urai Song number: 193 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 196 - vAdham piththam (pazhani)

vAtham piththami dAvayi ReeLaikaL
     seetham paRcani cUlaima kOthara
          mAsang katperu mUlavi yAthikaL ...... kuLirkAsam

mARung kakkalo dEsila nOypiNi
     yOdun thaththuva kArArtho NURaRu
          vArunj cuRRinil vAzhsathi kArarkaL ...... vekumOkar

sUzhthun sithraka pAyaimu vAsaiko
     dEthunj caRRuNa rAmale mAyaisey
          sOram poykkudi lEsuka mAmena ...... ithinmEvith

thUsin poRcara mOduku lAyula
     kEzhum piRpada vOdidu mUdanai
          thUvanj suththadi yAradi sErani ...... naruLthArAy

theethan thiththimi theethaka thOthimi
     dUduN duddudu dUdudu dUdudu
          cEcenj cekkeNa thOthaka theekuda ...... venapEri

cEdan cokkida vElaika dAkame
     lAmanj cuRRida vEyasu rArkiri
          theevum pottezha vEyanal vElvidu ...... mayilveerA

vEthan poRcira meethuka dAvina
     leesan saRkuru vAyavar kAthinil
          mEvum paRRilar pERaru LOthiya ...... murukOnE

vEshang kattipi nEkima kAvaLi
     mAlin piththuRa vAkivi NOrpaNi
          veerang kotpazha nApuri mEviya ...... perumALE.

......... Meaning .........

vAtham piththa midAvayiRu eeLaikaL: Rheumatism, excessive biles, pot belly, lung diseases,

seetham paRcani cUlai makOtharam: dysentry, fits due to many ailments, acute stomach ache, edema of the stomach,

Asang katperu mUlavi yAthikaL kuLirkAsam: eye diseases, major piles, fever and chillness, tubercolosis,

mARung kakkalo dEsila nOypiNiyOdum: continuous vomiting, etc. - these are some of the ailments and diseases afflicting me.

thaththuva kArarthoNURaRu vArunj suRRinil vAzh: The five sensory organs, living amidst a crowd of 96 tenets*,

sathi kArarkaL vekumOkar sUzh: are the worst cut-throats and extremely greedy,

thun sithra kapAyai muvAsaikodu: with an evil and strange attachment to the body, along with the threesome desire for earth, gold and women;

Ethunj caRRuNarAmale mAyaisey: I did not have realisation of any good thing; instead, completely under the influence of delusion,

sOram poykkudilE sukamAmena ithinmEvi: I indulged in this body, full of stealth and falsehood, thinking that it would be a lasting pleasure.

thUsin poRcaramOdu kulAy: I happily adorned my body with nice clothes and golden ornaments.

ulakEzhum piRpadavOdidu mUdanai: I thought that the seven worlds were behind me and that I was way ahead; I was a stupid fool.

thUvanj suththadi yAradi sEraninaruLthArAy: Kindly bless me with Your grace to worship the feet of Your unstained and pure devotees.

theethan thiththimi theethaka thOthimi dUduN duddudu dUdudu dUdudu cEcenj cekkeNa thOthaka theekuda venapEri: The drums were beating to the meter of "theethan thiththimi theethaka thOthimi dUduN duddudu dUdudu dUdudu cEcenj cekkeNa thOthaka theekuda sEsenj sekkeNa thOthaka theekuda";

sEdan sokkida vElaika dAkamelAmanj cuRRidavE: AdhisEshan (the Giant Serpent) fainted; the seas and the planets in the sky were terrified;

asu rArkiri theevum pottezhavE: the mountains thronged by the demons and their island were smashed into pieces;

anal vElvidu mayilveerA: when You hurled the burning Spear, Oh valorous One, mounting the Peacock!

vEthan poRcira meethukadAvi: You knocked the eminent heads of BrahmA with Your knuckles!

naleesan saRkuruvAy avar kAthinil: You became the Esteemed Master of the good Lord SivA, and into His ears,

mEvum paRRilar pERaru LOthiya murukOnE: You preached the PraNava ManthrA, ordained graciously for those who have renounced everything.

vEshang kattipin Eki makAva(L)Li: You went to the millet-field in various disguises (the hunter, the neem tree and the old man) for wooing VaLLi, the great damsel,

mAlin piththuRavAki: and became intoxicated with love for her.

viNOrpaNi veerang kotpazha nApuai mEviya perumALE.: The Celestials worship Pazhani, famous for its prowess; and that place is Your abode, Oh Great One!


* The 96 thathvAs (tenets) are as follows:

36 ParathathvAs (internal, Superior Tenets): 'AathmA' (soul) thathvAs 24, 'vidhyA' (knowledge) thathvAs 7, 'siva' thathvAs 5.

5 Elements (external, with five aspects each making 25): Earth, Fire, Water, Air, Cosmos.

35 Other thathvAs (external): 'vAyus' (gases) 10, nAdis (kundalinis) 10, karmAs 5, ahangkAram (ego) 3, gunAs (character) 3, vAkku (speech).

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 196 vAdham piththam - pazhani

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]