திருப்புகழ் 179 போதகம் தரு  (பழநி)
Thiruppugazh 179 bOdhagamtharu  (pazhani)
Thiruppugazh - 179 bOdhagamtharu - pazhaniSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தான தந்தன தானா தனாதன
     தான தந்தன தானா தனாதன
          தான தந்தன தானா தனாதன ...... தனதான

......... பாடல் .........

போத கந்தரு கோவே நமோநம
     நீதி தங்கிய தேவா நமோநம
          பூத லந்தனை யாள்வாய் நமோநம ...... பணியாவும்

பூணு கின்றபி ரானே நமோநம
     வேடர் தங்கொடி மாலா நமோநம
          போத வன்புகழ் ாமீ நமோநம ...... அரிதான

வேத மந்திர ரூபா நமோநம
     ஞான பண்டித நாதா நமோநம
          வீர கண்டைகொள் தாளா நமோநம ...... அழகான

மேனி தங்கிய வேளே நமோநம
     வான பைந்தொடி வாழ்வே நமோநம
          வீறு கொண்டவி சாகா நமோநம ...... அருள்தாராய்

பாத கஞ்செறி சூரா திமாளவெ
     கூர்மை கொண்டயி லாலே பொராடியெ
          பார அண்டர்கள் வானா டுசேர்தர ...... அருள்வோனே

பாதி சந்திர னேசூ டும்வேணியர்
     சூல சங்கர னார்கீ தநாயகர்
          பார திண்புய மேசே ருசோதியர் ...... கயிலாயர்

ஆதி சங்கர னார்பா கமாதுமை
     கோல அம்பிகை மாதா மநோமணி
          ஆயி சுந்தரி தாயா னநாரணி ...... அபிராமி

ஆவல் கொண்டுவி றாலே சிராடவெ
     கோம ளம்பல சூழ்கோ யில்மீறிய
          ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

போத கந்தரு கோவே நமோநம ... ஞான உபதேசம் தருகிற
தலைவனே, போற்றி, போற்றி,

நீதி தங்கிய தேவா நமோநம ... நீதிக்கு இருப்பிடம் ஆன
இறைவனே, போற்றி, போற்றி,

பூத லந்தனை யாள்வாய் நமோநம ... இந்தப் பூமண்டலத்தை
ஆள்கின்றவனே, போற்றி, போற்றி,

பணியாவும் பூணு கின்றபி ரானே நமோநம ... அணிகலன்கள்
அனைத்தையும் அணிகின்ற பெருமானே, போற்றி, போற்றி,

வேடர் தங்கொடி மாலா நமோநம ... வேடர்கள் தம்குலத்தில்
அவதரித்த பைங்கொடி வள்ளியிடம் மையல் கொண்டவனே, போற்றி,
போற்றி,

போதவன்புகழ் ாமீ நமோநம ... தாமரை மலர்வாசனாம் பிரமன்
துதிக்கும் ஸ்வாமியே, போற்றி, போற்றி,

அரிதான வேத மந்திர ரூபா நமோநம ... அருமையான வேத
மந்திரங்களின் வடிவானவனே, போற்றி, போற்றி,

ஞான பண்டித நாதா நமோநம ... மெய்ஞ்ஞானப் புலவனான
தலைவனே, போற்றி, போற்றி,

வீர கண்டைகொள் தாளா நமோநம ... வீரக் கழலை அணிந்த
திருவடிகளை உடையவனே, போற்றி, போற்றி,

அழகான மேனி தங்கிய வேளே நமோநம ... அழகு நிறைந்த
திருமேனியை உடைய வேளே, போற்றி, போற்றி,

வான பைந்தொடி வாழ்வே நமோநம ... தேவருலகில் வாழும்
பசுமையான வளையல் அணிந்த தேவயானையின் மணவாளனே,
போற்றி, போற்றி,

வீறு கொண்டவிசாகா நமோநம ... வெற்றி நிறைந்த விசாக
மூர்த்தியே, போற்றி, போற்றி,

அருள்தாராய் ... உனது திருவருளைத் தந்து உதவுவாயாக.

பாத கஞ்செறி சூராதி மாளவெ ... தீவினை நிறைந்த சூரன்
முதலிய அசுரர்கள் இறக்குமாறு

கூர்மை கொண்டயி லாலே பொராடியெ ... கூர்மையான
வேலாயுதத்தால் போர் புரிந்து,

பார அண்டர்கள் வானாடு சேர்தர அருள்வோனே ... பெருமை
பொருந்திய தேவர்கள் மீண்டும் வான் நாடு சேரும்படியாக அருள்
புரிந்தவனே,

பாதி சந்திரனேசூடும் வேணியர் ... பிறைச்சந்திரனைத் தரித்த
ஜடாமுடியினரும்,

சூல சங்கரனார் கீத நாயகர் ... திரிசூலத்தைத் தாங்கும்
சங்கரனாரும், இசைத் தலைவரும்,

பார திண்புயமேசேரு சோதியர் கயிலாயர் ... வலிமையும்
திண்மையும் உடைய புயங்கள் வாய்ந்த ஜோதி ஸ்வரூபமும்,
திருக்கயிலையில் வாழ்பவருமான

ஆதி சங்கரனார்பாக மாதுமை ... முதன்மையான
சிவப்பரம்பொருளும் ஆகிய சிவபிரானின் இடப்பாகத்தில் இருக்கும்
உமாதேவியும்,

கோல அம்பிகை மாதா மநோமணி ... அழகிய அம்பிகையும்,
உலக மாதாவும், மனோன்மணியும்,

ஆயி சுந்தரி தாயான நாரணி அபிராமி ... அன்னையும்,
சிவகாமசுந்தரியும், உயிர்களுக்குத் தாயான நாராயணியும்,
அதிரூபவதியுமான பார்வதிதேவி

ஆவல் கொண்டு விறாலே சிராடவெ ... அன்பு கொண்டு
பெருமையுடன்சீராட்ட,

கோமளம்பல சூழ்கோயில்மீறிய ... அழகு பலவாக அமைந்த
திருக்கோயில்கள் மிகுந்த

ஆவினன்குடி வாழ்வான ... திருவாவினன்குடியில் வாழ்வாக
வீற்றிருக்கும்,

தேவர்கள் பெருமாளே. ... தேவர்கள் போற்றும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.254  pg 1.255  pg 1.256  pg 1.257 
 WIKI_urai Song number: 101 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 179 - bOdhagam tharu (pazhani)

bOdha kantharu kOvE namOnama
     needhi thangiya dhEvA namOnama
          bUtha lamthanai ALvAy namOnama ...... paNiyAvum

pUNu gindRapi rAnE namOnama
     vEdar thangkodi mAlA namOnama
          pOdha vanpugazh sAmee namOnama ...... aridhAna

vEdha mandhira rUpA namOnama
     nyAna paNditha nAthA namOnama
          veera kaNdaikoL thALA namOnama ...... azhagAna

mEni thangiya vELE namOnama
     vAna painthodi vAzhvE namOnama
          veeRu kondavi sAkA namOnama ...... aruLthArAy

pAdha gamseRi sUrA dhimALave
     kUrmai koNdayi lAlE porAdiye
          pAra aNdarkaL vAnA dusErthara ...... aruLvOnE

pAdhi chandhira nEsU dumvENiyar
     sUla sankara nArgee thanAyakar
          pAra thiNbuya mEsE rujOthiyar ...... kayilAyar

Adhi sankara nArbA gamAdhumai
     kOla ambigai mAthA manOmaNi
          Ayi sundhari thAyA nanAraNi ...... abirAmi

Aval koNduvi RAlE sirAdave
     kOma Lampala sUzhkO yilmeeRiya
          Avi nankudi vAzhvA nadhEvargaL ...... perumALE.

......... Meaning .........

bOdhakan tharu kOvE namO nama: Oh Leader who preaches Knowledge to me,
     Hail to You, Hail to You!

needhi thangiya dhEvA namO nama: Oh Lord who is the seat of justice,
     Hail to You, Hail to You!

bUthalam thanai ALvAy namO nama: Oh Ruler of the Universe,
     Hail to You, Hail to You!

paNiyAvum pUNu gindra pirAnE namO nama: Oh Lord who loves to wear all the jewels,
     Hail to You, Hail to You!

vEdar thangkodi mAlA namO nama: Oh the Lover of VaLLi, the damsel of the hunters,
     Hail to You, Hail to You!

pOdha vanpugazh sAmee namO nama: Oh Lord who is worshipped by BrahmA who is seated on the lotus,
     Hail to You, Hail to You!

aridhAna vEdha mandhira rUpA namO nama: Oh the embodiment of the rare VEdic ManthrAs (scriptures),
     Hail to You, Hail to You!

nyAna paNditha nAthA namO nama: Oh the wise Leader of true knowledge,
     Hail to You, Hail to You!

veera kaNdaikoL thALA namO nama: Oh the valorous one with feet adorn by victorious anklets,
     Hail to You, Hail to You!

azhagAna mEni thangiya vELE namO nama: Oh Lord with an ever handsome body,
     Hail to You, Hail to You!

vAna painthodi vAzhvE namO nama: Oh the consort of DEvayAnai of the DEvAs' land wearing beautiful bangles,
     Hail to You, Hail to You!

veeRu konda visAkA namO nama aruL thArAy: Oh Lord of the VisAka star, full of victory,
     Hail to You, Hail to You!     Please grant me Your Grace!

pAdhagam seRi sUrAdhi mALave: In order that the evil asuras (demons) perish,

kUrmai koNdayi lAlE porAdiye: You fought with the sharpest Spear

pAra aNdarkaL vAnAdu sErthara aruLvOnE: and redeemed the great DEvAs' land to them!

pAdhi chandhiranE sUdum vENiyar: He has tresses wearing a half crescent moon;

sUla sankaranAr geetha nAyakar: He is Sankara holding the trident and is the Lord of music;

pAra thiNbuya mEsEru jOthiyar: He has strong and powerful shoulders; He is full of Light;

kayilAyar Adhi sankaranAr: He belongs to Mount Kailas; and He is the foremost Lord Sankara.

bAga mAdhumai: She is concorporate on the left part of that SivA's body; She is UmA;

kOla ambigai mAthA manOmaNi: She is the universal Mother; She is the Gem of the heart;

Ayi sundhari: She is Mother SivagAma Sundhari;

thAyAna nAraNi abirAmi: She is the mother of all living beings; She is NArAyaNi; and She is the most exquisitely beautiful PArvathi!

Aval koNdu viRAlE sirAdave: She cuddles You with extreme love!

kOmaLam pala sUzhkOyil meeRiya: There are many lovely temples in this place known as

Avi nankudi vAzhvAna: ThiruvAvinankudi (Pazhani) which is Your abode!

dhEvargaL perumALE.: You are the Lord of all DEvAs, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 179 bOdhagam tharu - pazhani

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]